தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 maart 2015

அடிப்படை உரிமையாக மாறப் போகிறது தகவல் அறிந்து கொள்ளும் உரிமை

சுண்டிக்குளம் பகுதியில் கடற்றொழிலாளர் மீது இராணுவம் புலனாய்வுத்துறையினர் தாக்குதல்
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 01:07.22 PM GMT ]
வடமராட்சி சுண்டிக்குளம் மீனவர்கள் மீது இராணுவ புலனாய்வுத் துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வடமராட்சி சுண்டிக்குளம் கடலோரத்தில் அப்பகுதி கடற்றொழிலாளர் சங்கங்களின் அனுமதியில்லாமல், இராணுவத்தின் அனுசரணையுடன் தென்னிலங்கையில் இருந்து வந்தவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி கடற்றொழிலாளர்கள், கடற்றொழில் நீரியல் வள அமைச்சு அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இன்று அப்பகுதிக்கு சென்ற அதிகாரிகளும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் இராணுவமும் புலனாய்வுத்துறையினரும் தென்னிலங்கை மீனவர்களுக்கு சார்பாக பேசியதுடன்,  அப்பகுதி மீனவர்களுடன் முரண்பட்டு அச்சுறுத்தி தாக்கியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழர்களின் கடற்பகுதிகளில் இராணுவத்தின் அனுசரணையுடன் வளங்களை அள்ளிச்செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது.
வடக்கு கடலில் தொழிலில் ஈடுபடும் தமிழ் கடற்றொழிலாளர்களின் வருமானத்தை சூறையாடுவதற்கு இராணுவத்தினரும் புலனாய்வுத்துறையினரும் முழு அனுசரணை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr4E.html

ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிந்த 1011 ஊழியர்களை நீக்கிய மைத்திரி
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 12:48.05 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்தில் பல பதவிகளில் அமர்த்தப்பட்ட ஆயிரத்து பதினொரு பேர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
முந்தைய அரசாங்கம் இவர்களுக்கு வீணாக சம்பளத்தையும் சிறப்புரிமைகளையும் வழங்கி பதவிகளில் வைத்திருந்தது.
அத்துடன் ஜனாதிபதி செயலகத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 565 ஆக அதிகரித்திருந்தது. இந்த நிலையில், ஆயிரத்து 11 பேரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார்.
அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டிருந்த இவர்களுக்கு சம்பளம், எரிபொருள், வாகனம், தொலைபேசி போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டதன் காரணமாக ஜனாதிபதி செயலகத்தின் செலவுகள் அதிகரித்திருந்தன.
இதனால், ஜனாதிபதி தனது ஊழியர்களின் எண்ணிக்கை 554 ஆக குறைந்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி செயலகத்தின் செலவுகளும் பெருமளவில் குறைந்துள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் கூறினார்.


அடிப்படை உரிமையாக மாறப் போகிறது தகவல் அறிந்து கொள்ளும் உரிமை
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 12:21.54 PM GMT ]
தகவல் அறிந்து கொள்ளும் உரிமை அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட்டு அதிகாரமுள்ள ஒரு சட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இது 19வது அரசியலமைப்பு சீர்திருத்தமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என நடாளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.
அரசியல் யாப்பில் 3வது அத்தியாயத்தின் 14வது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அறிந்து கொள்ளும் உரிமையை மாற்றி,
அவ்வுரிமையை அடிப்படை உரிமையாக புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் உள்வாங்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr4C.html

Geen opmerkingen:

Een reactie posten