தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 maart 2015

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் ரவுடிக் கும்பல்கள் புகுந்து அட்டகாசம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்க சூழ்ச்சி: மகிந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 01:37.00 PM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முற்றாக அழித்து விடும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் சூழ்ச்சி செயற்படுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். 
2011 மார்ச் மாதம் தேர்தல் நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
அவற்றின் பதவிக்காலத்தை நீடித்து, பொதுத் தேர்தலின் பின்னர், உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்துவது என முந்தைய அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இது குறித்து ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன. இந்த நிலையில், உள்ளூராட்சி சபைகளை கலைத்து விட்டு அவற்றை விசேட ஆணையாளர்களின் நிர்வாகத்தின் கொண்டு வரும் சூழ்ச்சியில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் தயார்ப்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில், 278 உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி அதிகாரத்தை கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் பாரிய ஆபத்துக்குள் தள்ளப்பட்டு விடும்.
உள்ளூராட்சி சபைகளை கலைத்து விட்டு தேர்தல் நடத்தப்படுமாயின், அதனை ஜனநாயக தீர்மானம் என்று எம்மால் பாராட்ட முடியும்.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் சூழ்ச்சியில் உள்ளூராட்சி சபைகளை கலைத்த பின்னர், அவர்கள் தமக்கு ஆதரவான ஆணையாளர்களை நியமிக்க போவதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால், இந்த முக்கியமான அரசியல் விடயம் குறித்து அனைவரும் கவனமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


தமிழை அகிலமெல்லாம் முளையிட்டுப் பயிராய் வளர்க்க அரும்பணியாற்றியர் இரா. நாகலிங்கம் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 01:58.11 PM GMT ]
தமிழ் எங்கள் பிறவியின் தாய். எங்கள் உயிருக்கு நிகர். எங்கள் உரிமைக்கு வேர். அந்தத் தமிழை அகிலமெல்லாம் முளையிட்டுப் பயிராய் வளர்க்க அரும்பணியாற்றிய உலகப்பெருந் தமிழன் “மாமனிதர்” திரு. இரா. நாகலிங்கம் ஐயா எமக்குத் தாயுமானவர்.
எமது இனத்தின் மேன்மைக்காக ஐயா மிகவும் கடினமாகத் தனது இறுதிவரை உழைத்தவர்.
பூமியின் திசை நான்கும் புகலிடம் பெற்று, வேற்று மொழிப் பண்பாட்டுக்குள் பிறந்து வாழ்ந்துவரும் எமது இனத்தின் இளந் தலைமுறையினர், எமது அடையாளமான தாய்மொழியைக் கற்றுத் தாயக நினைவோடு வாழ வழிசமைத்த தமிழ் அன்னை இன்று “மாமனிதர்” திரு. இரா. நாகலிங்கம் ஐயா அனைவரோடும் அன்பாகவும் பண்பாகவும் மிகுந்த நேர்மையுடனும் பழகிய அப்பழுக்கற்ற ஓர் அற்புதமான மனிதர்.
அவர், எமது தேசிய இனத்தின் விடுதலைக்காகவும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த தமிழ் இனத் தொண்டன் ஆவார்.
எமது இனத்துக்காக என்றென்றும் தன் பணி தொடரும்வண்ணம் பல ஆயிரக்கணக்கான மாணவச் சிற்பிகளையும் ஆசிரியர்களையும் தமிழாலயங்களையும் அவர் உருவாக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
இவர், எமது விடுதலை அமைப்பின் வளர்ச்சிக்காகவும் பெரும் பங்காற்றியுள்ளார். ஒரு ஆசானாக, பாடநூல்கள் தயாரிப்பாளராக, புலம்பெயர் கட்டமைப்பின் கல்விப் பிரிவு மற்றும் கல்விக் கழகப் பொறுப்பாளராக, தமிழ்த் திறன் பிரிவுப் பொறுப்பாளராக எனத் தனது இறுதிக் காலம்வரை அவர் எம்மோடு வாழ்ந்து, எமது அமைப்புக்காகவும் எமது மக்களுக்காகவும் அன்னார் ஆற்றிய பெரும்பணிகள் என்றென்றும் ஈழத்தமிழர் வரலாற்றில் நிலையான பதிவாகிவிட்டன.
தமிழரின் கலை, பண்பாடு, தொன்மை, பாரம்பரியம் ஆகியவற்றை புலம்பெயர் இளந் தலைமுறையினருக்குப் போதித்து, அவர்கள் இனப்பற்றோடும் நாட்டுப்பற்றோடும் வாழ வழிகாட்டினார்.
தேசியத்துக்காகவும் எமது இனத்துக்காகவும் அவர் ஆற்றிய உயர் பணிகளைச் சிறப்பிப்பதற்காக தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் தாயகத்துக்கு வரவழைத்து மதிப்பளிக்கப்பட்டார்.
“மாமனிதர்” திரு. இரா. நாகலிங்கம் ஐயாவின் இழப்பு தமிழுக்கு ஈடுகட்டமுடியாத பேரிழப்பு ஆகும்.
தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாதல் இல்லை. தமிழ் வாழும் வரை, தமிழ் இனம் வாழும் வரை “மாமனிதர்” திரு. இரா. நாகலிங்கம் ஐயா என்றென்றும் எம்மோடு உயிரெனக் கலந்திருப்பார்!
ஐயாவைப் பிரிந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழாலயக் குடும்பத்தினருக்கும் எமது சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் சார்பாக இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். 
இவ்வாறு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUls0H.html


கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் ரவுடிக் கும்பல்கள் புகுந்து அட்டகாசம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 02:26.03 PM GMT ]
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு அதிபர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மதுபோதையில் சென்ற குழுவினர் கூட்டத்தை நடாத்த விடாது இடையூறு விளைவித்துடன் அதிபரை தூஷண வார்த்தைகளால் திட்டி அவமதித்தனர்.
பழைய மாணவர்களும் முன்னாள் போராளிகளாகவும் மண்ணுக்கு அர்ப்பணித்தவர்களையும் இந்தக்கும்பல் சேட்டை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.
அத்துடன் பழைய மாணவர்களும் ஆசிரியர்களுமான சத்தியானந்தன் ராஜேந்திரகுமார் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதுடன் தளபாடங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
மாலை ஆறு மணிவரை இந்த குழுவினர் பாடசாலை வளாகத்தில் நின்று கூக்குரல் இட்டு கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதுமட்டுமன்றி உள்ளூர் ஊடகங்களை அழைத்து பாடசாலைக்கு நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களையும் தவறாக பயன்படுத்தியுள்ளனர்.
இவர்களில் கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் தனியார் கல்வி நிலையம் நடத்தி வருகின்றவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த குழுவினர் பாடசாலைக்குள் ஆசிரியர்களை அவமதித்து துண்டுப் பிரசுரங்களையும் வீசியுள்ளதுடன் ஆசிரியர்கள் மீது அசிட் வீச்சு நடத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
இருந்தபோதும் பெரும்பான்மை பழைய மாணவர்களுடன் ஒத்துழைப்புடன், இன்று புதிய நிர்வாகமொன்று கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக மு.ரவீந்திரன், உப தலைவராக திருமதி. கணேஸ்வரநாதன், செயலாளராக பொன்.காந்தன், உப செயலாளராக வே.திவாகர், பொருளாளராக அ.கேதீஸ்வரன், நிர்வாக உறுப்பினர்களாக திருமதி.தயானந்தி, மா.சிவராசா, ப.குமாரசிங்கம், ப.பிரதீபன் (தீபச்செல்வன்), மு.தமிழ்செல்வன், மா.மகாதேவன், மு.பிரகாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பதவியேற்றபின் கருத்துத் தெரிவித்த புதிய நிர்வாகம்,
கிளிநொச்சியின் தாய் பாடசாலையான கிளிநொச்சி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட நிலையில் அதன் தேவைகளும் அதிகரித்துள்ளது.
இன்னும் இந்த பாடசாலை பௌதீக ரீதியாக பல்வேறு புனரமைப்புக்கள் செய்யப்பட வேண்டிய நிலையில் புலம்பெயர்ந்து வாழும் இந்த பாடசாலையின் பழைய மாணவர்கள் உள் நாட்டில் வசிக்கும் பழைய மாணவர்கள் இந்தப்புதிய பழைய மாணவர் சங்க நிர்வாகத்துடன், இணைந்து செயற்பட முன்வரவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளது.
பாடசாலையின் வரலாற்று ரீதியான நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில கும்பல்கள் தற்பொழுது இந்த பாடசாலையின் உள் நிர்வாக நடவடிக்கைகளை குழப்பம் விளைவதுடன் பாடசாலையை ரவுடிகளின் இடமாக முனைகின்றனர்.
இந்த விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து புகழ்பூத்த இந்;த பாடசாலையை நாடு வியக்கும் வகையில் மேலும் முன்னே கொண்டுவர அதிபர் ஆசிரியர்களுடன் ஒத்துழைத்து ஆதரவு வழங்கவும் இந்த பாடசாலை சமுகம் சார்ந்த அனைவரையும் புதிய பழைய மாணவர் சங்க நிர்வாகம் அழைப்பு விடுகின்றது.

http://www.tamilwin.com/show-RUmtyDRWSUls0I.html

Geen opmerkingen:

Een reactie posten