தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 maart 2015

உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் செல்ல விக்னேஸ்வரனுக்கு இராணுவம் தடை

100 நாட்கள் என்பது முக்கியமல்ல: அமில தேரர்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 11:00.44 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய 100 நாள் வேலைத்திட்ட வாக்குறுதிகளை 100 நாட்களுக்குள் மட்டுப்படுத்த தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் அமில தேரர் தெரிவித்துள்ளார்.
வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்வேலைத் திட்டத்தில் மிக முக்கியமாக நிறைவேற்றப்பட வேண்டியது பொது தேர்தல் அல்ல மக்களின் எதிர்பார்ப்புகளே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
100 நாட்கள் என்பது முக்கியம் அல்ல மேலதிகமாக 200 நாட்கள் அல்லது 300 நாட்களை எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே முக்கியம் என அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது தேர்தலுக்கு தற்பொழுது எவ்வித அவசரமும் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUls0A.html

பாரிய நிதிமோசடியில் ஈடுபட்ட பசில் ராஜபக்சவின் மனைவி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 11:17.41 AM GMT ]
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா ராஜபக்சவும் பாரிய நிதிமோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புஸ்பா ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட புஸ்பா ராஜபக்ச நிதியத்தின் மூலமே இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 150,000 டொலர்களை வைப்புச் செய்திருந்தார் என்ற குற்றச்சாட்டே அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முறையீடு கோட்டை நீதிவான் முன்னிலையில் பொலிஸாரால் முறையிடப்பட்டுள்ளது. இதனையடுத்து புஸ்பா ராஜபக்சவின் வங்கிக்கணக்கு விபரங்களை பெறுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச தற்போது அமரிக்காவில் இருந்து வியட்நாமுக்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் அங்கும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாடாளுமன்றத்தில் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


பீல்ட் மார்சலாக தரம் உயர்த்தப்பட்டார் சரத் பொன்சேகா
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 11:31.24 AM GMT ]
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் ஜனாதிபதியினால் “பீல்ட் மார்சல்” தரத்துக்கு உயர்த்தப்பட்டார்.
பாதுகாப்பு அமைச்சின் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அரசாங்க பிரதிநிதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள், முப்படைகளின் அதிகாரிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUls0C.html

சுதந்திரக் கட்சியை ஐ.தே.கட்சியின் வாலாக மாற்றியுள்ளனர்: விமல் வீரவன்ஸ
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 12:09.49 PM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டு தேசிய அரசாங்கத்தில் இணைந்ததன் மூலம் தமக்கு வாக்களித்த சக்திகளை காட்டிக்கொடுத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்கியதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் வாலாக மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏனைய கட்சிகளின் வாக்குகளினால், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவாகவில்லை.
ரணில் விக்ரமசிங்க, ஆர். சம்பந்தன், ரவூப் ஹக்கீம், அனுரகுமார திஸாநாயக்க, சம்பிக்க ரணவக்க போன்றவர்களினால், அவர் ஜனாதிபதியானார்.
இதனால், தன்னை ஜனாதிபதி பதவியில் அமர்த்திய, குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவுக்கு நம்பிக்கையில்லா தீர்மானங்களில் வீழ்த்த முடியாத ஸ்தீரமான அரசாங்கத்தை ஏற்படுத்து கொடுக்கும் தேவை மைத்திரிபால சிறிசேனவுக்கு இருக்கின்றது.
பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவிக்கு தெரிவாகவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சரவைக்குள் கொண்டு வந்து, ஏனையோருக்கு ராஜாங்க அமைச்சர் பதவிகளை வழங்கி, தேர்தலுக்கு முன்னர், மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் ஏற்படுத்தி கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க பார்க்கின்றனர். இதுவே அதன் ஒரே நோக்கம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வைத்து கொண்டுள்ளது. இது மிகவும் ஆச்சரியமான வேலை.
அமைச்சு பதவிகளை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தம்மிடம் வைத்து கொண்டு அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியை தன்வசம் வைத்து கொண்டு தான் செல்லுப்படி நடக்கும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர்.
இப்படியான நிலைமையில், எதிர்க்கட்சித் தலைவர் எப்படி அரசாங்கத்தை விமர்சிப்பார்?. அது கண்ணாடிக்கு எதிரில் சென்று தன்னை தானே விமர்சிப்பதற்கு ஒப்பானது.
அரசாங்கத்தின் ஜனாதிபதியும், அமைச்சர்களும் தமது கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கும் போது எப்படி அரசாங்கத்தை விமர்சிக்க முடியும் எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் செல்ல விக்னேஸ்வரனுக்கு இராணுவம் தடை
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 01:10.20 PM GMT ]
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் உட்செல்ல விடாது இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வடமாகாண முதலமைச்சர் 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்படவுள்ள வசாவிளான் கிழக்குப் பகுதியை பார்வையிடுவதற்காக இன்று அப்பகுதிக்குச் சென்றுள்ளார்.
விடுவிப்பதாகக் கூறப்பட்ட 197 ஏக்கர் காணிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில், இன்று அப்பகுதிக்குச் சென்ற வடக்கு முதலமைச்சரையும் இராணுவத்தினர் செல்ல விடாது தடுத்துள்ளனர்.
இராணுவத்தினரால் போடப்பட்ட புதிய உயர்பாதுகாப்பு வலய வேலியை தாண்டி முதலமைச்சரை உள்ளே செல்ல இராணுவத்தினர் இடமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை,  விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் காணிகளை உள்ளடக்கியதாகவே இராணுவத்தினரால் புதிய வேலி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUls0F.html

Geen opmerkingen:

Een reactie posten