தமது மகள் Down syndrome என்ற வளர்ச்சிக் குறைப்பாட்டால் பீடிக்கப்பட்டிருந்ததால், அவுஸ்திரேலிய அரசாங்கம் தற்காலிக விசா வழங்க மறுத்து விட்டதென இலங்கைத் தம்பதியினர் தெரிவித்துள்ளார்கள்.
எட்டு வயது நிரம்பிய எலிஸா பொன்சேகாவின் தாய் தந்தையர், அவுஸ்திரேலியாவின் பின்தங்கிய பிரதேசத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பிரச்சனைத் தீர்வு மையத்தில் வேலை செய்ய விரும்பியிருக்கிறார்கள்.
இருவரும் அவுஸ்திரேலியாவில் தற்காலிகமாக வேலை செய்ய விசாக்களை விநியோகித்த குடிவரவுத் திணைக்களம், எலிஸாவிற்கு விசா வழங்க மறுத்துள்ளது. மருத்துவ பராமரிப்பு என்று வருகையில், அந்தப் பிள்ளை அவுஸ்திரேலிய சமூகத்திற்கு பாரமாக இருப்பாளென குடிவரவுத் திணைக்களம் அறிவித்திருக்கிறது.
ஏலிஸாவின் தந்தை அஞ்சலோ பொன்சேகா தகவல் தருகையில், தமது மகள் ஆரோக்கியமாக இருக்கிறாள் எனவும், அவள் மருந்தியில் தங்கிருக்கவில்லை எனவும் தெரிவித்தார். எதுவித மருத்துவ செலவினங்களையும் சமாளிக்கக்கூடிய தனியார் மருத்துவக் காப்புறுதி தமக்கு உண்டெனவும் அவர் கூறினார்.
இந்தக் குடும்பம் பேர்த் நகரில் இருந்து 800 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஷார்க் பே பிரதேசத்திற்கு சென்று, அங்குள்ள பிணக்குத் தீர்வு நிலையத்தில் பணியாற்றத் திட்டமிடுகிறது. இந்த நிலையத்தின் ஊடாக வறிய மக்களுக்கு உணவு, உறைவிடம் முதலான உதவிகள் வழங்கப்படுகின்றன.
http://www.jvpnews.com/srilanka/102045.html
Geen opmerkingen:
Een reactie posten