தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 maart 2015

மோடி யாழ் விஜயம்: போராட்டத்தில் குதித்த மக்கள்



மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பில் நடந்தது என்ன? - விளக்குகிறார் செல்வம் எம்.பி.!
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 08:39.36 PM GMT ]
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று சந்தித்தது.
இச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது என்ன.....
தொடர்புடைய செய்தி
http://www.tamilwin.com/show-RUmtyDSXSUmw1E.html

நாளை அவசர அமைச்சரவைக் கூட்டம்
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 03:14.52 AM GMT ]
அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சில முரண்பாட்டு நிலைமைகளை களையும் நோக்கில் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக 19ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த 12ம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
19ம் திருத்தச் சட்டத்தை அவசரமாக நிறைவேற்ற வேண்டுமென பிரதமரும் நீதியமைச்சரும் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும், அவசரமாக சட்டத்தை நிறைவேற்ற முடியாது எனவும் விவாதம் செய்யப்பட வேண்டுமெனவும் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரட்ன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மோடி யாழ் விஜயம்: போராட்டத்தில் குதித்த மக்கள்
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 05:56.50 AM GMT ]
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வருகையை முன்னிட்டு யாழ் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் இன்று காலை 10 மணியளவில் யாழ் நகரில் கவனயீர்ப்புப்  போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வடபகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வலியுறுத்தியே இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டமானது யாழ் நகரிலே ஆரம்பமாகி நடை பவனியாக இந்தியத் துணைத்தூதரகத்தைச் சென்றடைந்தது.
போராட்டகாரர்களால் இந்தியத் துணைத்தூதரகத்தில் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
அவ் மகஜரிலே குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தங்களின் வருகையின் மூலம் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு துன்பங்களுக்கு விடிவு கிட்டுமென்று நாம் நம்புகின்றோம்.
இலங்கை அரசாங்கத்திற்கு தாங்கள் அழுத்தம் கொடுத்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் அத்துடன் தாங்கள் நேரடி கவனம் எடுத்து தீர்க்க வேண்டிய பிரச்சனைகளும் உண்டு என்பதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.
நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் தீர்க்க்படாத பிரச்சினையாக தமிழ் மக்களின் அரசியல்ப் பிரச்சினையாக இருந்து வருகின்றது.
இவ்அரசியல்ப் பிரச்சினை காரணமாக நாட்டில் எற்பட்ட போர்ச்சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் அந்த போர்ச்சூழலுக்குள்ளும் பொருளாதார நெருக்கடிக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு வாழ்ந்து வரும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை தாங்கள் காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்பதே தங்களின் வருகையை முன்னிட்டு நாம் எதிர்பார்க்கும் விடயமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw3H.html

Geen opmerkingen:

Een reactie posten