தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 16 maart 2015

பிரதமர் மோடியால் வட-கிழக்கின் வான் பரப்பை இழந்ததா இலங்கை? வெளிவராத உண்மைகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 01:51.30 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே ஆதரவளிப்பதாக காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகேகம தெரிவித்துள்ளார்.
காலியில் ஒன்றுக்கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் வைத்து அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 40 பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இதன் போது மேலும் உரையாற்றிய முத்துஹெட்டிகம, மக்களால் நிராகரிக்கப்படுவதற்கு மஹிந்த ராஜபக்ச அரசியல்வாதியல்ல என்றும் குறிப்பிட்டார்.
எனவே மஹிந்த ராஜபக்சவை கொழும்புக்கு கொண்டு வந்து, தேர்தலில் போட்டியிட, வேட்பாளர் நிலையை பெற்றுக்கொடுக்க அனைவரையும் அழைப்பதாக அவர் இதன் போது தெரிவித்தார்.


பிரதமர் மோடியால் வட-கிழக்கின் வான் பரப்பை இழந்ததா இலங்கை? வெளிவராத உண்மைகள்
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 02:06.53 AM GMT ]
இந்தியப் பிரதமர் மோடியின் விஜயத்தின்போது இலங்கை மீது பல்வேறு அழுத்தங்களை இந்தியா பிரயோகித்துள்ளதாக சிரேஷ்ட அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஆதிக்கம் யாரிடம் உள்ளது, வட-கிழக்கின் வான் பரப்பை மோடியின் வருகையால் இலங்கை  இழந்ததா? போன்ற வெளிவராத உண்மைகளை ஆதாரத்துடன் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விபரிக்கிறார் எம்.எம்.நிலாம்டீன்.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUmx5F.html

மோடியின் இலங்கை விஜயம் குறித்து பாரதிய ஜனதாக்கட்சி பெருமிதம்
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 02:25.47 AM GMT ]
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. அத்துடன் அது இரண்டு நாடுகளுக்கு இடையிலும் பலமான உறவை பெற்றுக்கொள்ள உதவியுள்ளது என்று இந்திய பாரதிய ஜனதாக்கட்சி தெரிவித்துள்ளது
இதில் பிரதமர் மோடி தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்குக்கு மேற்கொண்ட விஜயம் மிகவும் வரவேற்கத்தக்கதாக இருந்ததாக பாரதிய ஜனதாக்கட்சியின் பேச்சாளர் நரசிம்மராவ் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் இலங்கை விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு பிரதமர் மோடி திரும்பிய பின்னரே இந்த கருத்தை பாரதிய ஜனதாக்கட்சி வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten