தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 16 maart 2015

போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விசேட வீடமைப்பு திட்டம்!

மஹிந்தவை பிரதமராக்கும் முயற்சிகள் கைவிடப்பட மாட்டாது: உதய கம்மன்பில
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 02:56.21 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் முயற்சிகள் கைவிடப்பட மாட்டாது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 26ம் திகதி ரத்தினரபுரியில் மஹிந்தவை பிரதமராக்கும் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
அண்மையில் கண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றதிலும் அமுனுகம நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்படுவதனை எதிர்த்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரத்தினபுரி கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அவர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்சியின் யாப்பிற்கு முரணான வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக நிச்சயமாக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் அமைச்சருமான நத்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUmx5I.html

தேர்தல் முறைமை மாற்றம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் விசேட கூட்டம் இன்று
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 03:16.23 AM GMT ]
தேர்தல் முறைமையில் மாற்றம் செய்வது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால, இன்று சகல அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து தேர்தல் முறைமை மாற்றம் குறித்து பேச உள்ளார்.
தேர்தல் செயலகத்தில் இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட சில முக்கிய அரச அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
தேர்தல் முறைமையில் மாற்றம் செய்தல், இம்முறை பொதுத் தேர்தலை புதிய முறைமையின் கீழ் நடாத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.
தேர்தல் முறைமை மாற்றம் குறித்து ஏற்கனவே ஜனாதிபதியும் தேர்தல் ஆணையாளரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முறைமையில் மாற்றம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் தேவையற்ற அதிகாரங்களை குறைத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது, பொதுத் தேர்தல் நடத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விசேட வீடமைப்பு திட்டம்!
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 03:30.28 AM GMT ]
போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக விசேட வீடமைப்பு திட்டமொன்றை இராணுவம் அறிமுகம் செய்ய உள்ளது.
போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
 சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். போரில் உயிரிழந்த படைவீரர்களின் சில குடும்பங்களுக்கு இதுவரையில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை.
 அவ்வாறான குடும்பங்கள் குறித்து கண்டறிந்து துரித கதியில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட உள்ளது. உயிரிழந்த படைவீரர் கடமையாற்றிய படைப் பிரிவு வீடுகளை அமைப்பதற்கு 75 வீத பங்களிப்பினை வழங்கும் எனவும் மிகுதி 25 வீதத்தை உயிரிழந்த படைவீரரின் குடும்ப உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUmx6B.html



Geen opmerkingen:

Een reactie posten