[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 09:50.31 AM GMT ]
யாழ். பொது நூலகம் முன்பாக கடந்த 12ம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று காலை 10.00 மணியளவில் மயக்கமடைந்ததால் அம்புலன்ஸ் மூலம் அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் கைதிகள், கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் விடுதலை, எல்லை தாண்டும் மீனவர்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணுதல், யுத்தத்தில் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு இழப்பீடு வழங்குதல், விதவைகள், அநாதைகள் மற்றும் காயமடைந்தோருக்கான உதவிகள் வழங்கல், வடக்கு - கிழக்கு பிள்ளைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவிகள் வழங்கல்,
இடம்பெயர்ந்த, புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு சொந்த காணிகளை கிடைக்கச் செய்தல், உள்ளூரில், சர்வதேசத்தில் மற்றும் தமிழகத்தில் அகதிகளாகவுள்ள மக்களின் மீள்குடியேற்றம், தொழில், வீட்டு வசதி ஏற்படுத்தல், போரில் இறந்தவர்களை நினைவுகூற நினைவுச் சின்னம் மற்றும் நினைவுத் தூபிகளை பிரகடனப்படுத்தல், ஐக்கிய நாடுகள் பேரவையின் தீர்மானத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தல், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை ஏற்படுத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே சகாதேவன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw5H.html
ஆட்சி மாற்றத்தை குறி வைத்து தமிழர்களை நாடு கடத்துகிறது அவுஸ்திரேலியா
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 10:29.44 AM GMT ]
அவுஸ்திரேலியாவிலுள்ள அகதி முகாமொன்றில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதியொருவரே இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாகவே அவுஸ்திரேலிய அரசாங்கம் இவ்வாறான நடைமுறைகளை பின்பற்றுவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த அகதி முகாம்களுக்கு அண்மித்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி நிலையங்களிலிருந்து அகதிகள் சார்ந்த அமைப்புகளுக்கு அழைப்பு ஏற்படுத்துவதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த அகதி குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள அகதிகளை கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்புவதாகவும், அவர்களின் தொழில் உரிமைகள் மற்றும் வைத்திய சான்றிதழ்களையும் பறித்து கொள்கின்றனர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளதுடன்,
இது தொடர்பில் முறையிடுவதற்கு மனித உரிமை ஆணைக்குழுவிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் அங்குள்ள அகதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw6C.html
Geen opmerkingen:
Een reactie posten