தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 maart 2015

முஸ்லிம்களின் நீதிக்காக ஜெனிவா செல்லும் முஸ்லிம் காங்கிரஸ்



யாழ்ப்பாணத்தில் பால் காய்ச்சிய மோடி
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 11:14.53 AM GMT ]
யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பொது நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிறகு வட மாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவுடன் மதிய போசன விருத்தில் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் கலாச்சார முறைபடி, பால் காய்ச்சி வீடுகளை கையளித்தார்.
இதன்போது, கே.கே.எஸ். வீதியின் இரு மருங்கிலும் மக்கள் பெருவாரியாகக் கூடி நின்று இந்தியப் பிரதமரை வரவேற்றனர்.
வீதிகள் தோறும் வாழை மரங்கள் நாட்டப்பட்டுள்ளதுடன், இலங்கை இந்தியக் கொடிகளைத் தாங்கியவாறு மக்கள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருக்கும் இந்தியப் பிரதமரை வரவேற்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw6E.html

அரசியலமைப்புத் திருத்தம்: ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இரு முக்கிய கூட்டங்கள்
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 11:45.47 AM GMT ]
நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்பட உள்ள உத்தேச அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான முக்கியமான இரண்டு பேச்சுவார்த்தைகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் எதிர்வரும் 15 ஆம் 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இது குறித்து தீர்மானங்களை எடுப்பதற்காக நாளைய தினம் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
அத்துடன் தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் திருத்திற்கான சட்டமூல ஆவணப்படுத்தும் செயற்பாடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் 19வது திருத்தச் சட்டம் குறித்து கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதுடன், அடுத்த வாரத்தில் அது வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை தற்போது அமுலில் இருக்கும் விகிதாசார தேர்தலுக்கு பதிலாக தொகுதி மற்றும் மாவட்ட விகிதாசாரத்தின் அடிப்படையிலான கலப்பு தேர்தல் முறை குறித்து நாளை மறுதினம் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாபடப் உள்ளது.
இதில் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மற்றும் அரசியலமைப்பு விவகாரம் தொடர்பான ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜயம்பதி விக்ரமரத்னவும் கலந்து கொள்ள உள்ளனர்.

முஸ்லிம்களின் நீதிக்காக ஜெனிவா செல்லும் முஸ்லிம் காங்கிரஸ்
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 11:51.16 AM GMT ]
இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் நிசாம் காரியப்பர், ஜெனிவா மனித உரிமை பேரவையில் உரையாற்ற தீர்மானித்துள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிசாம் காரியப்பர், கல்முனை மாநகர மேயராக பதவி வகித்து வருகிறார். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் உரையாற்ற போவது இதுவே முதல் முறையாகும்.
அந்த கட்சியின் தலைவரான அமைச்சர் ஹக்கீம் அரச தரப்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw6G.html

Geen opmerkingen:

Een reactie posten