தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 maart 2015

தாய்லாந்தில் நிலவும் பதற்ற நிலை! ஈழத்தமிழர் உட்பட 400ற்கும் அதிகமான அகதிகள் கைது!

பாராளுமன்றில் மோடி ஆற்றிய உரை! மனவேதனையில் இராதாகிருஷ்ணன்
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 12:49.39 PM GMT ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளை மறந்து, பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு மலையக மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் மிகவும் மனவருத்தம் அடைகின்றேன் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்து, நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அவர் இவவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
எங்களை அவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பாக நாம் பல எதிர்பார்ப்புகளுடன், பாராளுமன்றத்திற்கு அவருடைய உரையை கேட்பதற்கு சென்றிருந்தோம்.
ஆனால் எமது சமூகத்தைப் பற்றியோ அல்லது எமது வரலாற்றை பற்றியோ எந்தவிதமான கருத்தையும் வெளியிடாமையானது, நான் அந்த சமூகத்தை சார்ந்தவன் என்ற வகையில் எனது மனவேதனையை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேவேளை அவரை நேரில் சந்திக்கின்ற பொழுது இதுதொடர்பாக அவருடைய கவனத்திற்கும் கொண்டு வரவுள்ளேன் என குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSXSUmwzJ.html

மோடியைச் சந்தித்த கூட்டமைப்பு
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 01:09.56 PM GMT ]
இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரே சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அக்குழுவில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இந்திய மீனவர்கள் 86 பேரும் விடுதலை
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 01:32.09 PM GMT ]
எல்லைதாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 86 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவுக்கமைவே இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 27ஆம் திகதி பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து 43 பேரும், திருகோணமலைக் கடற்பரப்பில் வைத்து 43 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்களை யாழில் உள்ள இந்தியத் துணைத்தூரக அதிகாரிகள் பொறுப்பேற்றனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDSXSUmw0B.html


தாய்லாந்தில் நிலவும் பதற்ற நிலை! ஈழத்தமிழர் உட்பட 400ற்கும் அதிகமான அகதிகள் கைது!
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 01:52.53 PM GMT ]
கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தாய்லாந்தின் பாங்காக் நகரில் இடம்பெற்று வரும் தொடர் தேடுதல் வேட்டையில் நானுறுக்கும் அதிகமான அகதி அந்தஸ்து கோரியவர்களும் அகதிகளும் கைதாகி உள்ள நிலையில் மீண்டும் தேடுதல் வேட்டை தொடர்ந்த வண்ணமும் உள்ளது
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
வருகின்ற ஆவணி மாதம் தாய்லாந்தில் தேர்தல் நடைபெற இருப்பதன் எதிரொலியாக கடந்த வாரம் பாங்காக் நகரின் குற்றத்தடுப்பு நீதிமன்ற முன் வளாகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு மற்றும் கடந்த மாதம் சியாம் பரகன் என்ற சுற்றுலா மையமான அங்காடியில் ஏற்பட்ட குண்டு வெடிப்புக்கான இரு சந்தேக நபர்களை கைது செய்த தாய்லாந்து காவல்துறை அவர்கள் கொடுத்த தகவலின் பிரகாரம் உண்மையான குற்றவாளிகளை தேடி தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
சிவில் உடையில் பாங்காக் நகர்ப்புறம் உள்ள தொடர் மாடிகள் எங்கும் தமது வலையை விரித்து பல அகதி தஞ்சம் கோரிய பாகிஸ்தான் நாட்டவர்கள், சோமாலியா, ஈரான் போன்ற நானுறுக்கு அதிகமான வெளிநாட்டவர்களை கைது செய்த அதே நேரம் ஐந்து ஈழத்தமிழர்களையும் கைது செய்துள்ளனர்.
பாங்காக் நகர்ப்புறமான சுத்திசான் என்னும் பகுதியில் மூன்று தமிழர்களும் புற நகர்ப்புறமான ஒம்சாய் என்னும் பகுதியில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். .
தினமும் சிவிலில் குறிப்பிட்ட தொடர்மாடிகளுக்கு கீழே வந்து காத்திருப்பதும் கண்ணில் படும் அகதிகளை கைது செய்வதுமாக தொடர்கின்ற இந்த தேடுதல் வெட்டையினால் அங்கு அகதிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது.
BRC எனப்படுகின்ற பாங்காக் அகதிகள் மையத்தின் பாடசாலை மற்றும் டின்டாங் பகுதியில் உள்ள பாடசாலைகள் யாவும் இவ்வாரம் முழுவதும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
டின்டாங் பகுதியில் இன்றும் இருநூறுக்கு மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மிகுந்த அச்சத்தில் வீடுகளை பூட்டி உடைகளை வெளியே உலர்த்தாமல் அவதானமாக இருக்குமாறும் கூட்டமாக வெளியே செல்ல வேண்டாம் என்று தாய்லாந்தின் ஐ நாவுக்கான அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் அகதி மக்களை எச்சரித்துள்ளது.
இருநூறுக்கும் அதிகமான ஈழத்தமிழ் அகதிகள் அங்கு அகதித் தஞ்சம் அடைந்திருப்பதும் மீள்குடியேற்றத்திற்காக காத்திருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
http://www.tamilwin.com/show-RUmtyDSXSUmw0C.html

Geen opmerkingen:

Een reactie posten