[ வியாழக்கிழமை, 19 மார்ச் 2015, 08:34.06 PM GMT ] [ பி.பி.சி ]
மஹர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவை பார்க்கச் சென்றிருந்த போதே மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் தன்னுடன் மிக நெருக்கமாக இருந்த நபர்கள் முறையற்ற விதத்தில் கைதுசெய்யப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
'இது நல்லாட்சி அல்ல' என்று கூறியுள்ள மகிந்த ராஜபக்ஷ, பொலிஸாரின் கைது நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்பட வேண்டாம் என்று பொலிசாரையும் அவர் கேட்டுக்கொண்டார்.
'மக்கள் காட்டிக்கொடுக்க மாட்டார்கள்'
இதனிடையே, போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பற்றி உள்நாட்டு விசாரணை நடத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருப்பது பற்றி மகிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
உறுதி மொழிகளை வழங்கினால் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் 'இது அவர்களின் அரசாங்கம், அவர்களால் எதுவும் செய்ய முடியும்' என்றும் கூறினார் மகிந்த ராஜபக்ஷ.
இவ்வாறு உள்நாட்டு விசாரணை நடத்தப்பட்டால் போரில் ஈடுபட்ட ராணுவத்தினர் காட்டிக்கொடுக்கப்படுவார்கள் என்று எதிர்தரப்பினர் முன்வைக்கும் விமர்சனங்களை சுட்டிக்காட்டி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
'அரசாங்கம் அவர்களை காட்டிக் கொடுக்கக் கூடும். ஆனால் மக்கள் இராணுவத்தினரை காட்டிக் கொடுக்க மாட்டார்கள்' என்று மகிந்த ராஜபக்ஷ பதில் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSdSUlq3D.html
பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற, சில கூட்டமைப்பு சார்ந்த சிலரினால் வதந்திகள் பரப்பப்படுகின்றது.. -"புளொட்" தலைவர் த.சித்தார்த்தன்!
[ வியாழக்கிழமை, 19 மார்ச் 2015, 08:31.26 PM GMT ]
எதிர்வரும் பொதுத்தேர்தலில் சித்தார்த்தனை வன்னி மாவட்டத்தில் போட்டியிடுமாறு கூட்டமைப்பில் உள்ள தனிநபர்கள் தரப்புக்களால் வலியுறுத்தப்படுவதாக வெளியாகி வருகின்ற செய்திகள் தொடர்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘பொதுத் தேர்தல் தொடர்பில் எந்தவிதமான கலந்துரையாடல்களோ, தீர்மானங்களோ கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்குள் இதுவரை மேற்கொள்ளப் படவில்லை. இதுபோன்ற வதந்திகள் கூட்டமைப்பில் போட்டியிட விரும்பும் சில தனிப்பட்ட நபர்களினால் மேற்கொள்ளப்படும் தந்திரோபாய நடவடிக்கை என்றே நான் கருதுகிறேன்.
பொதுத்தேர்தல் தொடர்பில் தேசிய கட்சிகளே பல்வேறு அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகின்றன. ஆகையால் பொதுத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பதே தெளிவாகவில்லை.
ஆனால் பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற சில கூட்டமைப்பு சார்ந்த சிலரினால் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. அவற்றை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று தெரிவித்தார்.
மேலும், மாகாணசபை உறுப்பினர்களுக்கு இம்முறை பொதுதேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என்று சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பில் கருத்து தெரிவித்த சித்தார்த்தன், ‘இவ்வாறான செய்திகளும் வெளியாகின்ற போதிலும், கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் இதனை தெரிவிக்கவில்லை. மாறாக ஒரு சிலர் தங்களது தேவைகளுக்காக இவ்வாறு பேசி வருகின்றனர். இது கூட்டமைப்பின் ஒற்றுமைக்கும், எதிர்காலத்திற்கும் ஆரோக்கியமானதாக இருக்காது’ என்றும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSdSUlq3C.html
Geen opmerkingen:
Een reactie posten