தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 maart 2015

அமெரிக்காவுக்கு ஒரு ‘கோல்’ போதும் என்கிறார் சமரசிங்க!

“ஐ.நாவில் சீனா, ரஷ்யா முதலான நாடுகள் இருந்தாலும் அழுத்தம் கொடுக்கக்கூடிய ஒரே நாடு அமெரிக்காதான். இதற்கு அந்நாட்டு ஜனாதிபதி பேசத் தேவையில்லை. வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியின் ஒரு ‘கோல்’ (தொலைபேசி அழைப்பே) போதும்.

ஜெனிவாவில் இதை நான் நேரில் கண்டேன்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சரும் மனித உரிமை விவகாரங்களுக்கான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க எம்.பி. தெரிவித்தார்.
செப்ரெம்பர் மாதம் வரை ஐ.நா. அறிக்கை பிற்போடப்பட்டிருக்காவிட்டால் சர்வதேச ரீதியில் இலங்கை பெரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
எனவே, செப்ரெம்பர் மாத கூட்டத்தொடருக்கு முன்னதாக இலங்கை அரசு சர்வதேசத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய பெரும் நடவடிக் கையை முன்னெடுத்திருக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், சர்வதேச விவகாரங்களைக் கையாளுவதில் தமது மஹிந்த அரசின் இயலாமையை ஒப்புக்கொண்ட அவர், எதிர்வரும் செப்டெம்பர் மாத கூட்டத் தொடரில் தமது அரசே பங்கேற்கும் என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தின் ஒழுங்குவிதிகள் தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- “மார்ச் மாத கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவிருந்த இலங்கை தொடர்பான ஐ.நா. அறிக்கையை செப்டெம் பர் மாதம் வரை பிற்போடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை நாம் பாராட்ட வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியாவிலும், பிரிட்டனிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. பிரிட்டிஷ் மகாராணி 30 நிமிடம் வரை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியிருந் தார். அந்நாட்டின் பிரதமர், ஜனாதிபதி மைத்திரியை வெளியே வந்து வரவேற்றார். இவற்றை நாம் பார்த் தோம். இது எமக்குப் பெருமையாக உள்ளது. உள்ளக விசாரணைக்கு நாம் ஐ.நாவிடம் கால அவகாசம் கோரினோம். பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், உங்களால் அது முடிந்துள்ளது.
மார்ச் மாதத்தில் ஐ.நாவின் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தால் இலங்கை பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டிருக்கும். இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பாரிய பிரேரணைகளைக் கொண்டுவர இருந்தனர். ஐ.நா. என்பது மனித உரிமைகள் விவகாரத்தைக் கையாளும் இடம் மட்டுமல்ல, அரசியல் தீர்மானங்களும் எடுக்கும் இடமாகும்.
அங்கு அரசியல் அழுத்தங்களின் அடிப்படையிலேயே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. 2009ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேர ணையில் நாம் வென்றெடுத்தோம். ஆனால், அதன் பயனைப் பெற்றுக் கொள்ள எம்மால் முடியாமல் போனது. அதனால்தான் 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் எமக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாட்டின் ஆட்சி மற்றும் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியாமல் போனது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் எம் முடன் இருந்தாலும் அவற்றால் எமக்கு ஒரு வாக்கைக்கூட பெற்றுக் கொடுக்க முடியவில்லை. ஐ.நாவில் அழுத்தம் கொடுக்கக்கூடிய ஒரே நாடு அமெரிக்காதான்.
இதற்கு அந்நாட்டு ஜனாதிபதி பேசத் தேவையில்லை. வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியாலேயே அந்த அழுத்தத்தைக் கொடுக்கமுடியும். இதனை நான் ஜெனிவாவில் நேரில் கண்டேன். அப்படியான நிகழ்வு 2012ஆம் ஆண்டு நடந்தது.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா முதலான நாடுகள் எமக்கு உதவி புரிந்தன. இதனை மறக்காது அந்த நாடுகளையும் இணைத்துக் கொண்டு செயற்பட்டால்தான் சாதக மான பிரதிபலன்களை நாம் பெற முடியும். செப்டெம்பர் மாதத்துக்குள் நாம் பாரிய வேலைகளை செய்துமுடிக்க வேண்டும்.
செப்டெம்பர் மாத ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்பது நீங்களா? நாங்களா? நாங்கள்தான் போகவேண்டும் என்று நான் நினைக்கின்றேன். செப்டெம்பர் மாதத்துக்குள் முக்கிய நடவ டிக்கைகளை செய்துமுடிக்கவேண்டும்.
அவற்றை செய்தே ஆகவேண்டும். எவராவது தவறு இழைத்திருந் தால் அவர்களைத் தண்டிப்பதற்கும் உண்மையைக் கண்டறிவதற்கும் எமக்குப் பொறுப்புள்ளது. அது நாட் டின் நடப்புக்கு மிக முக்கியமாகும். நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சர்வதேசத்தின் நம்பிக்கையை வெல்ல வேண்டும் – என்றார்.
http://www.jvpnews.com/srilanka/101821.html


Geen opmerkingen:

Een reactie posten