மந்துவில் கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், சனசமூக நிலையங்கள், விளையாட்டுக்கழகம், பாலர் பகல் பராமரிப்பு நிலையம், சிறுவர் கழகம், சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கம், மந்துவில் கிழக்கு ஆகியன இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தன.
கிராம அபிவிருத்தி சங்க தலைவர் நடராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன், அ.பரஞ்சோதி, வே.சிவயோகன், சாவகச்சேரி பிரதேச சபை தலைவர் சி.துரைராசா, சபை உறுப்பினரகளான சி.இரத்தினசிங்கம், க.பரஞ்சோதி, யாழ் டிறிபேக்கல்லூரி அதிபர் அருந்தவபாலன், கற்பக காவலர் க.நடராசா உட்பட மந்துவில் கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், சமூக முன்னோடிகள் என பலர் கலந்து ெொண்டனர்.
இந்த நிகழ்வில் ஓய்வு நிலை கூட்டுறவு அபிவிருத்தி அலுவலர் சி.சபாரத்தினம் உட்பட சமூக முன்னோடிகள் சேவையாளர்கள் மதிப்பளிகப்பட்டதுடன், கல்வித்துறையில் திறம்பட செயற்படும் மாணவர்களும் மதிப்பளிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் பிரபல சமூக சேவையாளரும் பனம்பொருள் அபிவிருத்தி நிறுவனங்களின் ஆரம்பகர்த்தாவுமான கற்பக காவலர் க.நடராசா உரையாற்றும்போது,
எமது மண்ணின் வளத்திலும் பொருளாதாரத்திலும் பலத்திலும் பங்காற்றும் கிராமங்களில் இந்த மந்துவில் கிராமமும் ஒன்று.
இடர்பல கடந்து இந்தக் கிராமம் மீண்டும் எழுச்சி பெறத்துடிக்கும் பொழுதுகளாக இவை இருக்கின்றன.
கடந்த காலங்களை நினைத்துப் பார்க்கும்போது எமது மக்களிடம் இருந்த உழைப்புத்திறன் இப்பொழுது இல்லை. அதற்கு உலகமயமாக்கலின் விளைவுகள் போர் உட்பட்ட பல்வேறு காரணங்கள் உண்டு.
மாறிவருகின்ற உலகிற்கு எமது மக்கள் தயாராவதற்கு நீண்ட காலங்கள் திணிக்கப்பட்ட ஆதிக்கம் போர் பிரச்சினை என்பன எமது மக்களை உலகளாளவிய போட்டிக்கு தயாராவதை தடுத்துவிட்டது.
ஆனாலும் போர்க்காலத்திலும் எமது மக்களிடம் இருந்து பாரம்பரிய பழக்கவழக்கங்கள், உணவு நடைமுறைகள், சுயபொருளாதார நடிவடிக்கைகள் இப்பொழுது அருகியிருக்கின்றது.
எனது அனுபவத்தில் எமது மண்ணின் முக்கிய வளமாக கருதக்கூடிய பனைவளத்தை முன்பு தகுந்த விதத்தில் பொருத்தமான அமைப்புக்கள் ஊடாக முகாமைத்துவம் செய்த நிலையில் கணிசமான குடும்பங்கள் ஒரு நிரந்தர வருமானத்தை பெறுகின்றவர்களாக சேமிப்பை கொண்டிருந்தவர்களாக மாறியிருந்தார்கள்.
ஆனால் பிற்காலத்தில் அரசியல் அதிகாரங்களின் துஸ்பிரயோகங்கள் காரணமாக பனை வளம் சார்ந்த தொழிலாளர்களால் கட்டியெழுப்பபட்ட ஒரு பொருளாதார கட்டமைப்பு சிதைக்கப்பட்டு தங்கள் சுயலாபங்களுக்கு அன்னியர்களுக்கு விற்கும் துயரநிலை ஏற்பட்டது.
இப்படித்தான் எமது மண்ணில் கடல் நில வளங்களும் சிதைக்கப்பட்டுள்ளன. தன்னிறைவாய் நாம் வாழும் நிலையில் இருந்து கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.
எனவே இத்தகைய கிராமிய எழுச்சிகள், கலந்துரையாடல்கள் மூலம் மீண்டும் எமது காலத்தை உருவாக்கப்பாடுபட வேண்டியவர்களாக இருக்கின்றோம். நவீன முறைகள் ஊடாக எமது வளங்களை பயன்படுத்த அதிலிருந்து பயன்பெற நாம் வளர வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSbSUlpyC.html
Geen opmerkingen:
Een reactie posten