[ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2015, 09:10.24 AM GMT ]
கடந்த காலங்களில் கட்சித் தலைவர்கள் பதவி விலகிய போது முன்னுதாரணமான முறையில் நடந்து கொண்டனர்.
1977ம்ஆண்டு தோல்வியின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நேர்ந்த நிலைமை எனக்கு நன்றாகத் தெரியும். எதிர்காலத்தில் அவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெறுவதனை தடுக்க மனச்சாட்சிக்கு விரோதமின்றி அனைவரும் செயற்பட வேண்டும்.
நாடு எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை எதிர்நோக்க சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து செயற்பட வேண்டும். இனவாத கோசங்களினால் நாட்டை மீளவும் போரை நோக்கி நகர்த்தக் கூடாது. அவ்வாறு நடந்தால் அது பாரியளவிலான போராக மாறிவிடும்.
வரலாற்றில் முதல் தடவையாக வடக்கின் அனைத்து கட்சிகளையும் ஒரே மேடையில் இணைக்க என்னால் முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSbSUlo6F.html
ஜனாதிபதியின் மலசலகூடங்களுக்கு ஏ.சி உபயோகிப்பது தவறு: துல்மினி அத்தநாயக்க
[ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2015, 09:56.08 AM GMT ]
இவ்வாறு பிரபலமாகிவிட்டதன் பின்னர் திஸ்ஸ அத்தநாயக்கவின் மருமகன்மார்கள் முகப்புத்தகத்தின் ஊடாக தனி பக்கங்கள் உட்பட உருவாக்கியுள்ளார்கள் அவை தற்பொழுது இணையத்தளங்கள் ஊடாக பிரபல்யமாகிவிட்டது.
அதன் பின்னர் சமீப நாட்களாக அமைதியாக இருந்த துல்மினி அத்தநாயக்கவிடம், திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதியாகினால் எடுக்கும் நடவடிக்கை என்ன என்று சிங்கள் ஊடகம் ஒன்று அவரிடம் கேள்வியெழுப்பியுள்ளது.
அதற்கு பதிலளித்ததில் துல்மினி அத்தநாயக்க அதிகம் பேசியது குளிரூட்டப்பட்ட மலசலகூடம் பற்றியே, குறித்த ஊடகத்திடம் பின்வருமாறு பதிலளித்துள்ளார், ஜனாதிபதி என்பவர் பொது மக்களுக்கு சேவை செய்யும் பிரதான குடிமகன்.
நான் நினைக்கிறேன் பொது மக்களுக்கு தேவையானதை ஜனாதிபதி அதிகமாக பயன்படுத்த கூடாதென.
இலங்கையில் ஜனாதிபதி, மலசலகூடத்திற்கு உட்பட ஏ.சி உயயோகப்படுத்தி சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றால் இலங்கையில் மலசலகூடங்கள் இன்றி வாழும் அனேக மக்களின் நிலை என்ன? அவ்வாறான மக்களின் பணத்தை வீண்விரயம் செய்வது தவறு.
அப்பணத்தை வைத்து மக்களுக்கு ஏற்ற பல நல்ல காரியங்களை செய்யலாம் என துல்மினி அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த புலிகளை அடித்து கொன்றே நீங்கள் தப்பி வந்தீர்கள், நீருக்குள் நெருப்பு கொண்டு செல்லும் மகிந்தானந்த
[ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2015, 10:37.22 AM GMT ]
வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேதாசவுடனான களியாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பாடலொன்றை பாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சஜித்தும், பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்தவும் இணைந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ ஆகியோரை கேலியாக சித்தரித்து வித விதமான முறையில் பாடல்களை பாடியுள்ளனர்.
பொது மக்கள் மத்தியில் இருவருக்கும் இடையில் ஒத்துவராதது போல் நடித்து நாடகமாடும் நம்நாட்டு அரசியல்வாதிகள் இவ்வாறான களியாட்ட விடுதிகளில் எவ்வாறு ஒன்றிணைந்து முன்னாள் தலைவர்களை கேலி செய்கிறார்கள்.
நம் சமூகத்தில் வாழும் பாமர மக்கள் இவர்களின் போலி நாடகங்களை நம்பி சமூகத்திற்குள் கட்சி பிரிவினைவாதங்களை வளர்த்து கொண்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்கின்றனர்.
அரசியல்வாதிகளுக்கு ஆதரவு வழங்கும் நம் மக்கள் மாத்திரமே பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
ஆனால் அரசியல்வாதிகளோ மக்களின் ஆதரவை துச்சமாக கருதி அவர்கள் என்றும் போல் நட்புடனே பழகி வருகின்றனர்.
கோத்தா என்னுடைய மாடு உமது வெள்ளைக்கார ராணி இன்று வைத்தியசாலையில், மாடு எனது இறைச்சிக்கான மாடு உமது வெள்ளைக்கார ராணி வைத்தியசாலையில், என தனது கேலி பாடலை மகிந்தானந்த ஆரம்பிக்க,
மகிந்த என்னுயிர் மகிந்த உங்கள் நினைவில் வரும் வைத்தியசாலை, மகிந்த என்னுயிர் மகிந்த நீங்கள் முன்னரெல்லாம் சந்திரிக்காவின், என அமைச்சர் சஜீத் தொடர்ந்தார்.
சஜித்தை பின்தொடர்ந்த மகிந்தானந்தவின் கேலி பாடலில் நீங்கள் எங்களை விற்கிறீர்கள், என மகிந்தவை கேலி செய்கிறார்.
கடந்த காலங்களில் மகிந்தவின் அரசாங்கத்தில் அவருடன் இணைந்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை செய்த அரசியல்வாதிகள் இன்று அவரை கேலி செய்து பாடும் பாடல்கள் அவர்களின் ஊழல்களை திறைமறைவிற்குள் கொண்டு செல்வதற்கு இவ் அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவது போலுள்ளது.
மேலும் இவ்வாறான நீருக்குள் நெருப்பு கொண்டு செல்லும், நம் மத்தியில் வாழும் அரசியல்வாதிகளை நாம் வேருடன் பிடுங்கி களையெடுத்து, எதிர்வரும் பொது தேர்தலில் சிறந்த தலைமைகளை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmtyDSbSUlo7C.html
சந்திரிக்கா தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2015, 11:06.57 AM GMT ]
தற்போது வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எதிர்வரும் 19ம் திகதி நாடு திரும்பியதும் குறித்த பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு திரும்பியவுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாகவும் வேட்பு மனு தாக்கல் வாரியம் அமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மோசடி மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு இம்முறை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாதென கட்சி மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் கலந்துரையாடப்படவுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட எந்த தடையும் இல்லை: மனோவுக்கு ஜனாதிபதி மைத்திரி உத்தரவாதம்
[ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2015, 11:32.26 AM GMT ]
இது தொடர்பில் ஒரு சுற்றறிக்கை ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பி வைக்கப்படும். அதற்கு மேலதிகமாக தேசிய பாதுகாப்பு சபையிலும் இதுபற்றி அறிவிப்பேன் என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசனிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உறுதியளித்துள்ளார்.
இந்த உறுதிமொழி இன்றைய தேசிய நிறைவேற்று சபை கூட்டத்தின்போது, மனோ கணேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலாக ஜனாதிபதியால் வழங்கப்பட்டது. இது தொடர்பில் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது,
தேசிய கீதம் சிங்கள, தமிழ் மொழிகளில் ஒரே மெட்டில், ஒரே அர்த்தம் தொனிக்கும் வண்ணம் நீண்ட காலமாக பாடப்பட்டு வந்தது. கடந்த ஆட்சியின் போது இது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து அதை இனவாத நோக்கில் தடை செய்ய வேண்டும் என்ற கருத்தை விமல் வீரவன்ச மற்றும் அப்போது ஹெல உறுமய கட்சியில் இருந்த உதய கம்மன்பில போன்றவர்கள் முன்னெடுத்தார்கள்.
அந்நேரம் மொழி அமுலாக்கல் துறைக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் இது தொடர்பில் காத்திரமாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.
இது தொடர்பில் எவ்வளவு எடுத்து கூறியும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியான நிலைபாட்டை எடுக்காமல், இனவாதிகளின் கருத்துக்கு இடம் கொடுத்து வந்தார். இந்த குழப்ப நிமை காரணமாக ஒரு பிரிவு தமிழ், முஸ்லிம் சிவில் மற்றும் கல்வி அதிகாரிகளும் தன்னிச்சையாக இந்த தமிழ் மொழியிலான தேசிய கீதம் பாடப்படுவதை தவிர்த்து அல்லது தடுத்து வந்தனர்.
இதனால் தமிழ் பேசும் பிரதேச நிர்வாக நிகழ்வுகளிலும், நாடு முழுக்க தமிழ், முஸ்லிம் பள்ளிக்கூட நிகழ்வுகளிலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமிழ் மொழியிலான தேசிய கீதம் பாட முடியாத நிலைமை ஏற்பட்டது.
இந்த குழப்ப நிலைமை இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இனி நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் தமிழ் மொழியிலான தேசிய கீதம், நிகழ்வை நடத்துபவர்களின் விருப்பத்தின்படி பாடப்பட முடியும். இதை தடுக்க முயல்பவர்கள் சட்டத்தை மீறுபவர்கள் ஆவர் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSbSUlo7I.html
இந்தியாவின் செயற்பாடு முட்டாள்தனமானது: பெங்கமுவே தேரர்
[ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2015, 11:38.14 AM GMT ]
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
13வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பாலான தீர்வுத்திட்டமொன்று வழங்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
13வது அரசியலமைப்பு அமுல்படுத்தப்பட்டு வருவதாக இந்திய நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஈழம் வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரி வருகிறார் என அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் ஈழம் உருவாகும் பட்சத்தில் அது இந்தியாவுக்கு பாரியளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்த கூடும் எனவும், இதனை புரிந்து கொள்ளாமல் இந்தியா முட்டாள்தனமாக செயற்பட்டு வருகின்றது எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைக்க இந்திய உளவு பிரிவான றோ விஷேட வேலைத்திட்டங்களை செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நாடு ஐக்கியமான நாடு எனவும், அதிகாரப்பகிர்வு எனும் பேரில் நாட்டை பிளவுபடுத்த அனுமதிக்க முடியாது எனவும் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSbSUlpyA.html
Geen opmerkingen:
Een reactie posten