தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 17 maart 2015

தொகுதி ரீதியான தேர்தல்! கூட்டமைப்பினுள் இழுபறி நிலை ஏற்படலாம்: சிரேஸ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெட்ணம்

எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது: வடக்கு முதல்வர் காட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2015, 03:05.23 PM GMT ]
தமிழ் மக்களுக்கு வீடுகளையும், வீதிகளையும், குடிநீர் வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக உங்களை சந்திக்க முயற்சித்த மலேசிய பிரதமரின் விசேட பிரதிநிதியை எதற்காக சந்திக்கவில்லை? என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் காட்டமாக பதிலளித்துள்ளார்.
முதலமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டதாவது, 
கடந்த மாதம் 17ம் திகதி எமக்கு தொலைநகல் ஒன்று கிடைத்தது. அதில் மலேசிய பிரதமரின் பிரதிநிதி டத்தோ ஸ்ரீ எஸ்.சாமிவேல் என்னை சந்திப்பதாகவும் இந்தச் சந்திப்பு 27ம் திகதி நடைபெறும் எனவும் கூறப்பட்டிருந்தது.
பின்னர் 20ம் திகதி குறித்த மலேசிய நாட்டின் வெளிவிவகார அமைச்சிலிருந்து பேசிய சுசி என்பவர் என் செயலாளரிடம் கேட்டிருந்தார்.
சாமிவேல் யாழ்ப்பாணம் வருவதற்கு தேவையான வாகன ஒழுங்குகளை செய்கிறீர்களா? என அதற்கு எனது செயலாளர், அந்த வாகன ஒழுங்குகளை மலேசிய வெளிவிவகார அமைச்சு மேற்கொள்ளாதா? அவ்வாறு செய்ய முடியாது என்றால்,  அதற்குப் பின்னர் முதலமைச்சர் அந்த வாகன ஒழுங்குகளை செய்வார் என கூறியிருந்தார்.
பின்னர் எந்த தொடர்பும் இல்லை. நான் 27ம் திகதி காலையில் நீண்ட நேரம் காத்திருந்தபோதும் அவர் வருகைதரவில்லை. பின்னர் நாம் அந்த சுசி என்பவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது சந்திப்பதற்கான அனுமதி எழுத்துமூலம் கேட்கவில்லை.
எனவே சந்திப்பு இல்லை என கூறினார். பின்னர் நாம் கேட்டோம். எழுத்துமூலம் அனுமதி கேட்குமாறு யாரும் கேட்கவில்லை.
எனவே அதைக் கேட்டிருந்தால் நாங்கள் கொடுத்திருப்போமே என. ஆனால் சந்திப்பு இல்லை என்பதே அவர்களுடைய முடிவு. எனவே இதில் என்னுடைய தவறு ஒன்றும் இல்லை.
இந்த விடயத்தில், நான் சந்திக்கவில்லை என்பதை வெளிநாட்டு பிரதிநிதிகள் கேட்கலாமே தவிர, எதிர்க்கட்சி தலைவர் என்னிடம் கேட்க முடியாது.
மேலும் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. ஆனால் வெளிநாட்டவர்களும், மக்களும் என்னைக் குறித்து தவறாக விளங்கிக் கொள்ள கூடாது என்பதற்காகவே இதனை நான் கூறினேன் என பதிலளித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSbSUlpyH.html

தொழில்கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட மஹிந்த தீர்மானம்
[ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2015, 03:42.07 PM GMT ]
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தாம் தொழில்கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானம் எடுத்துள்ளார்.
தொழில் கட்சியின் தலைவர் ஏ.எஸ்.பி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.
தமது கட்சியினரும் அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரும் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பர் என்று லியனகே குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தகரான லியனகே ஏற்கனவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதுடன், அரச ஊடகங்களில் மஹிந்தவுக்காக பிரசாரங்களிலும் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையும் பொதுஜன ஐக்கிய முன்னணி தலைமையும் பறிபோயுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை - இந்திய மீனவர்கள் விவகாரம்! ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்
[ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2015, 04:30.59 PM GMT ]
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறுவதை தடுக்கும் வகையில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும் நடவடிக்கை தொடர்பில் தேசிய நிறைவேற்று சபை இன்று தீர்க்கமாக ஆராய்ந்தது.
இந்திய மீனவர்களின் அதிகளவான அத்துமீறல்கள் காரணமாக இலங்கை நாட்டின் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றமை குறித்து இதன் போது ஆராயப்பட்டது.
இதனையடுத்து ஜனாதிபதியின் தலைமையில் எதிர்வரும் திகதி ஒன்றில் கலந்துரையாடுவது என்று தீர்மானிக்கப்பட்டதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொகுதி ரீதியான தேர்தல்! கூட்டமைப்பினுள் இழுபறி நிலை ஏற்படலாம்: சிரேஸ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெட்ணம்
[ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2015, 04:33.05 PM GMT ]
இலங்கையில் தொகுதி ரீதியான தேர்தலும் மாவட்ட ரீதியான தேர்தலும் வருகின்ற போது யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரச்சினைகள் எழக் கூடிய வாய்ப்பு உள்ளதாக சிரேஸ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்..
இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கான வர்த்தமானி  அறிவித்தல் வெளியாகியுள்ளது இது தொடர்பாக லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொகுதி ரீதியான தேர்தல் என்பது பெரிய கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் சிறிய கட்சிகளுக்கிடையில் பாதிப்புக்கள் ஏற்படக் கூடிய நிலை காணப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான்கு கட்சிகள் இணைந்துள்ளன. இந்தக் கட்சிகளுக்கிடையில் பிளவுகள் ஏற்படும். நிச்சயமாக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலை ஏற்படலாம்.
மாவட்ட ரீதியான தேர்தல் எனும் போது ஒரு குறிப்பிட்ட வேட்பாளர் பட்டியலை சமர்ப்பிக்கக் கூடிய வாய்ப்பபு இருக்கின்றது.
ஆனால் தொகுதி ரீதியான தேர்தல் வருகின்றபோது தொகுதிக்கு ஒருவரைத் தான் நியமிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஆகவே 4 கட்சிகளுக்கிடையில் சிலவேளைகளில் தொகுதிப் பங்கீட்டில் பிரச்சினைகள் எழலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSbSUlpzC.html

Geen opmerkingen:

Een reactie posten