தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 maart 2015

தேசிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் மஹிந்த!

பொதுமகனை தாக்கிய கருணாவிடம் வாக்குமூலம் பெற பொலிஸார் முயற்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 03:22.21 PM GMT ]
மட்டக்களப்பு வாழைச்சேனையில் உள்ள பொதுமகன் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தம்மை தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பொதுமகன் வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த போது அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் அவரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தாக்குலுக்கு உள்ளானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் சம்பவம் குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் கிரானில் உள்ள கருணாவின் சகோதரியின் வீட்டுக்கு சென்றபோது அங்கு எவரும் இருக்கவில்லை.
எனினும் தொடர்ந்தும் சம்பவம் குறித்த வாக்குமூலத்தை கருணாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள பொலிஸார் முயற்சிப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUls1A.html

மஹிந்தவை ஓரங்கட்ட நடவடிக்கை! தேசிய அரசாங்கம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கலந்துரையாடல்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 03:38.02 PM GMT ]
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட அமர்வு ஒன்று தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நடைமுறை அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து 10 அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் தேசிய அரசாங்கத்தில் பங்கேற்கவிருக்கிறது.
நடைமுறை தேசிய அரசாங்கத்தில் இணைந்துக்கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை தவிர ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் இணக்கத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருடன் இணைந்து அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கம், எதிர்வரும் ஜூனில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல் வரை பதவியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இந்த தேசிய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் பிரவேசத்தை 2 ஆண்டுகளுக்கு தடுக்கும் வகையில் எதிர்வரும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்: அரசாங்கம் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 04:00.51 PM GMT ]
இலங்கையில் நான்கு வருடங்களுக்கு பின்னர் நாளை முதல் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒழுங்குத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார்.
இரட்டை குடியுரிமைக்காக இதுவரை சுமார் 300 பொதுமக்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களின் விண்ணப்பங்களும் புதிய விண்ணப்பங்களுடன் பரிசீலிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களின்போது வயது வந்தவர்களுக்கு 250, 000 ரூபா அறிவிடப்படும். முன்னர் இது 5 இலட்சமாக இருந்தது.
22 வயதுக்கு குறைந்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபா அறிவிடப்படவுள்ளது. இந்தநிலையில் இரட்டை குடியுரிமைக்கான தகுதிகள் தொடர்பான விபரங்கள் குடிவரவு, குடியகல்வு திணைக்கள இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இரட்டை குடியுரிமை பெற்றுள்ள சுமார் 2000 பேர் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதன்போது எவராவது குற்றமுள்ளவராக இனங்காணப்பட்டால் அவரின் இரட்டைக் குடியுரிமை ரத்துச் செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.


ரணில், மைத்திரி, சந்திரிக்கா நாளை யாழ்.விஜயம்! எனக்கு எதுவும் தெரியாது: விக்கி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 04:32.32 PM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் தனக்கு எதுவுமே தெரியாது என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மயிலிட்டி கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கும், வலி.வடக்கு வலி.கிழக்குப் பிரதேச மீள்குடியமர்வு நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நோக்கிலும் நாளை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோர் விஜயம் செய்யவுள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருவது தொடர்பாக எதுவும் தனக்கு தெரியாது என தெரிவித்துள்ள வடக்கு முதல்வர்,  அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUls1F.html

தேசிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் மஹிந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 04:18.22 PM GMT ]
தேசிய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இன்று மாத்தறை தெலிஜ்ஜவில தஹாம் பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கு இலச்சினை அணிவிக்கும் நிகழ்வில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் நான் ஓய்வு பெற்றுக் கொள்கின்றேன்.  அரசியல் ரீதியான தீர்மானங்கள் எதனையும் எடுக்கப் போவதில்லை.
போர் இடம்பெற்ற காலத்தில் தேசிய அரசாங்கம் பற்றி பேசிய போது சிலர் கேலி செய்தனர். சிரித்தார்கள். இன்று நிறுவப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்திற்கு அவ்வாறான விமர்சனங்களை வெளியிடப்போவதில்லை.
தேசிய அரசாங்கத்திற்கு நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUls1E.html

Geen opmerkingen:

Een reactie posten