கொழும்பில் மிதக்கும் தலைகள் பின்னனி யார்…?
முன்னைய அரசாங்கத்தை சேர்ந்த பலருடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்த ஓரு பாதாள உலக புள்ளி,தற்போதைய அரசாங்கத்தை முக்கிய அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புவது குறித்தே இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டை காமினி
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேல்மாகாணசபை உறுப்பினர் சுனில்மென்டிசை கொலைசெய்த பின்னர் இந்தியாவிற்கு தப்பியோடிய கோட்டை காமினி என்ற பாதாள உலகப்புள்ளியும் தற்போது நாடு திரும்ப முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவருக்கு எதிராக சர்வதேச பிடியாணையொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை நகரசபை மைதானத்தில் படுகொலைசெய்ய முற்பட்ட விடுதலைப்புலிகளின் தற்கொலைபோரளிக்கு அடைக்கலம் கொடுத்தார் என கருதப்படும் ஹிம்புலாவெல குணாவும் இலங்கை திரும்ப முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவரிற்கு எதிராகவும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று அமெரிக்காவில் பதுங்கியிருக்கும் குடுலால்,இத்தாலியில் உள்ளகொஸ்கொட நந்துன்,போன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளும் இலங்கை வரவுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தை சேர்ந்த முக்கிய நபர்களுக்கு இவர்களுடன் தொடர்புள்ளதாகவும், இவர்களே பாதளஉலக புள்ளிகள் இலங்கை திரும்புவதற்கான தடைகளை நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கொழும்பு நகரை மீண்டும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக பாதளஉலகத்தினர் தங்களுக்கிடையில் மோதிக்கொள்ளவும் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த சிலவாரஙகளில்; கொழும்பில் ஈவிரக்கமன்றி படுகொலைசெய்யப்பட்ட சிலரின் உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்த கொலைகள் பாதள உலகத்தினரிற்கு இடையிலான மோதல்களுடன் தொடர்புபட்டவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பலாமரத்தடி சந்தியில் ஜனவர் 21 ம் திகதி பிரசாத் என்பவர் ஐவர்கொண்ட குழுவினால் படுகொலைசெய்யப்பட்டார்,இவர் மாளிகாவத்தையில்உடற்பயிற்சி நிலையமொன்றை நடத்திவந்தவர்,இவர் பாதளஉலகத்தினருடனும்ஈ பொலிஸாருடனும் தொடர்புகளை பேணிவந்தார்.
கொழும்பு து முகத்தில் நடைபெறும் ஏலங்களை அதனை பயன்படுத்தி தனக்கு சாதகமாக்கிவந்தார்.தேசிய அருங்காட்சியகத்தில் களவாடப்பட்ட பல பொருட்கள் அவரிடமிருந்தன.
தனது மோட்டார் சைக்கிளை சற்றுதொலைவில் நிறுத்திவிட்டு தொலைதொடர்பு நிலையமொன்றிற்குள் நுழைய முயன்ற வேளை அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அரைக்காற்சட்டைகளை அணிந்த 5 இளைஞர்கள் அவரைவெட்டிக்கொலைசெய்த பின்னர் பதட்டமின்றி அங்கிருந்து வெளியேறினர். புதிய பாதள உலக கும்பலொன்றே இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.கொலை நடைபெற்று இரண்டு மாதங்களாகி விட்டபோதிலும் இதுவரை எவரும்கைதுசெய்யப்படவில்லை.
கிரான்ட்பாஸில் திஸ என்பவர் கடத்தப்பட்ட சம்பவத்திற்கும் இந்த கொலைக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகங்கள் வெளியாகியுள்ளன.திச என்பவர் ஐக்கிய மக்கள்சுதந்திரக்ககூட்டமைப்பின் முன்னாள் மேற்மாகாண சபை உறுப்பினர் லாலின் செயலாளராக செயற்பட்டவர்.
துறைமுகத்தில் ஏலம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை இடம்பெற்ற சம்பவத்திலிருந்து தப்பியோடி திஸ்ஸ கடத்தப்பட்டார் பின்பு பிணமாக மீட்கப்பட்டார்.இந்த கொலைக்கு பதிலாகவே பிரசாத்தின் கொலை இடம்பெற்றுள்ளது.
ஜனவரி 15 ம்திகதி தெமட்டகொடவில் உள்ள கால்வாய்க்குள் இரத்தம் வழிந்த நிலையில் இரு கால்கள் காணப்பட்டன,அருகில் சிறிய கடையொன்றை வைத்திருந்த பெண்மணியொருவர் சிலர் கால்களை கால்வாய்க்குள் வீசியெறிவதை கண்ணால் பார்த்துள்ளார்.எனினும் அச்சம் காரணமாக அவர் அவர்கள் குறித்த விபரங்களை வெளியிடவில்லை.
மோப்ப நாய்கள் சில சாவிகளை அந்த பகுதியில் கண்டுபிடித்த பின்னர் அந்த பெண்மணி நடத்தும் சிறிய கடையைநோக்கி ஓடின.தற்போது அவர் தகவல்களை மறைத்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட கால்களிற்கு சொந்தக்காரர் யார் என்பதை பொலிஸார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை,ஆறு மணித்தியாலத்திற்கு முன்னரே கால்கள்துண்டிக்கப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கு 24 மணித்தியாலங்களுக்கு பின்னர் நாவலவில் உள்ள கால்வாயிலிருந்து துண்டிக்கப்பட்ட கை மீட்கப்பட்டது. மிகமோசமான சித்திரவதைக்கு பின்னரே அந்த கை துண்டிக்கப்பட்டுள்ளது என்றனர் பொலிஸார்.
மார்ச் 17 ம் திகதி தெமட்கொட கறுத்தப்பாலத்திற்குள் தலையில்லாத மனித உடலொன்று காணப்பட்டது.
http://www.jvpnews.com/srilanka/102219.html
செய்வதறியாது வாழ்த்திய மகிந்த.
மாத்தறை தெலிஜ்ஜிவல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை இன்னும் கொஞ்ச காலத்தில் தெரிந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
என்னத்தை மைத்திரியுடன் கதைப்பது, முதல்வர் வெறுப்பு.
25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்படவுள்ள வசாவிளான் கிழக்குப்பகுதியை பார்வையிடுவதற்காக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்றிருந்தார்.
ஒட்டகப்புலம் அமல உற்பவ அன்னை ஆலயத்தில் மீளக்குடியேறவுள்ள மக்களை சந்தித்தபின், விடுவிக்கப்பட்ட காணிகளை அவர் பார்வையிட்டார்.
ஒட்டகப்புலம் அமல உற்பவ அன்னை ஆலயத்தில் மீளக்குடியேறவுள்ள மக்களை சந்தித்தபின், விடுவிக்கப்பட்ட காணிகளை அவர் பார்வையிட்டார்.
விடுவிப்பதாகக்கூறப்பட்ட 197 ஏக்கர் காணிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை கட்டுப்பாடு விதித்தனர். அதே கட்டுப்பாட்டை வடமாகாண முதலமைச்சருக்கும் இராணுவத்தினர் விதித்தனர். புதிய உயர்பாதுகாப்பு வலய வேலியை தாண்டி முதலமைச்சர் உள்ளே செல்ல இராணுவத்தினர் இடமளிக்கவில்லை. ஆனால், அந்த வேலி விடுவிக்கப்பட்ட காணிகளை உள்ளடக்கியதாகவே அமைக்கப்பட்டுள்ளது.
வசாவிளான் கிழக்குப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் உட்செல்ல விடாது இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியிருந்த நிலையில் அவர் ஊடகவியலாளர்களிடையே பேசினார்.
உண்மையை கண்டறியவேண்டும்.அரசு சர்வதேசத்தை ஏமாற்ற நாடகமாடினால் அதனை அம்பலப்படுத்த தவறமாட்டேன்.நாளை ஜனாதிபதி வருவது பற்றி எனக்கு ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து அறிவிப்பதாக தெரிவித்தனர்.கடைசியினில் அரச அதிபரிடமிருந்தே தகவல் வந்துள்ளது.நிச்சயமாக இந்த ஏமாற்றங்கள் பற்றி பேசுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/102200.html
Geen opmerkingen:
Een reactie posten