[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 05:36.44 AM GMT ]
புத்தசான அமைச்சர் கரு ஜயசூரியவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பஸ்நாயக்க நிலமே ஒருவரை நியமிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக இருப்பது தகுதியற்றது என பௌத்த விகாரை கட்டளை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் கடந்த கால அரசாங்கம் இதனை இரத்து செய்திருந்தது.
பஸ்நாயக்க நிலமேயின் பதவிக்காலம் 5 வருடங்களாகும், அதனை மேலும் இரு வருடங்களாக நீடிப்பதற்கு ஜனாதிபதிக்கு அங்கீகாரம் காணப்படுகின்றது.
இந்த நடைமுறை கடந்த காலங்களில் செயற்படுத்தப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் அவற்றை அதிகாரமற்றதாக மாற்றுமாறு ஜனாதிபதி புத்தசாசன அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி, வட பகுதிக்கான விஜயத்தை ஆரம்பித்தார்
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 05:14.10 AM GMT ]
இதன்போது அனுராதபுரம் செல்லும் பிரதமர், ஸ்ரீமாஹா போதி, றுவன்வெலிசாய ஆகிய பகுதிகளுக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபடுவார்.
இதனைத் தொடர்ந்து மன்னார் சென்று, தலைமன்னாருக்கான ரயில் சேவைகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
1990ம் ஆண்டு முதல் தலைமன்னாருக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு முதல் மதவாச்சியில் இருந்து மன்னார் - தலைமன்னார் வரையிலான ரயில் பாதை, இந்தியா அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வந்தது.
இதற்கான ரயில் சேவையை இந்திய பிரதமர் ஆரம்பித்து வைப்பார்
இதனை அடுத்து யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்வார்.
அங்கு கலாசார மத்திய நிலையத்துக்கான அடிக்கல்லை நாட்டுவதுடன், இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கவுள்ளார்.
ஸ்ரீமஹா போதியில் வழிப்பாடுகளில் ஈடுபட்டார் இந்திய பிரதமர்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து அனுராதபுரத்திற்கு சென்றதுடன் ஸ்ரீமஹா போதியில் உள்ள புனித வெள்ளரசு மரம் அமைந்துள்ள பகுதியில் வழிப்பாடுகளில் ஈடுபட்டார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள இந்திய பிரதமர் மோடி, நான் அனுராதபும் போகிறேன், அத்துடன் தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணத்திற்கும் இன்று விஜயம் செய்கிறேன். இன்றைய நாள் மிக சிறப்பான நாள் என்று கூறியுள்ளார்.
ஸ்ரீமஹா போதியில் உள்ள வெள்ளரசு மர கிளை அசேகா சக்கரவர்த்தியின் புதல்வி சங்கமித்தையால் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு நடப்பட்டது.
கௌதம புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரச மரத்தின் கிளை என இந்த வெள்ளரச மரத்தை கூறுகின்றனர்.
அனுராதபுரத்தில் இருந்து தலைமன்னாருக்கு செல்லும் மோடி, மதவாச்சி – தலைமன்னார் இடையிலான ரயில் பாதையை திறந்து வைக்க உள்ளார்.
இதனையடுத்து யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.
போர் நடைபெற்ற பிரதேசத்திற்கு விஜயம் செய்யும் இரண்டாவது உலக அரச தலைவர் மோடியாவர். இதற்கு முன்னர் 2013 ஆம் ஆண்டு நம்பர் மாதம் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
இலங்கை தமிழர்களின் இதய பூமியான யாழ்ப்பாணத்தில் விஜயம் செய்யும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw3D.html
தமிழின அழிப்பிற்கான நியாயம் வேண்டும்: உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் புகழேந்தி, சந்தானம் அறைகூவல்
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 05:06.31 AM GMT ]
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நியாயம் வழங்க வேண்டும் என தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரும், திரைப்பட இயக்குனருமான புகழேந்தி தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனீவாவில் வருடந்தோறும் இடம்பெறும் ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 16ம் திகதி ஜெனீவாவிலுள்ள ஐ.நா பேரவை கட்டடத்தொகுதியில் நடைபெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழர்கள் தமக்கு சாதகமாக்கி கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் சமூகத்திற்கு எதிராக இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு நியாயம் வழங்குமாறு கோரி முன்னெடுக்கப்படும் போராட்டங்களையடுத்து,
ஐ.நா மனித உரிமை பேரவையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை இந்தியாவும், மேற்குலக நாடுகளும் சதி செய்து தள்ளி வைத்துள்ள நிலையில், தொடர்ந்தும் அதனை மூடிமறைக்க கூடாது.
ஜெனீவாவில் எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் பங்கேற்று ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நாவில் சமர்பிக்கப்படவுள்ள விசாரணை அறிக்கையில் திட்டவட்டமான முடிவை தெரிவிக்கும் அளவு அமைய வேண்டும்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பதாகைகளையும், புலிக்கொடிகளையும் தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வருமாறும் அவர் அனைத்து தமிழ் மக்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.
இதேவேளை இப்போராட்டத்தில் உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இனப்படுகொலைக்கு நீதி கேட்டு போராட வேண்டும் என தமிழகத்தின் ஓவியர் சந்தானம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெருப்பாக , புயலாக ,கடலின் அலையாக ஜெனீவா திடலில் கூடுங்கள் – உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அழைப்பு
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw3C.html
Geen opmerkingen:
Een reactie posten