[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 11:53.30 AM GMT ]
ஏப்ரல் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு ஜூன் மாதம் தேர்தல் நடத்தப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
தேர்தல் முறையில் மாற்றம் செய்வது தொடர்பாக நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முறையில் திருத்தம் ஏற்படும் வரை காத்திருக்க முடியாது எனவும் முதலில் தேர்தலை நடத்தி விட்டு, அதன் பின்னர் தேர்தல் முறையை நாட்டுக்கு அறிமுகம் செய்ய முடியும் எனவும் ரணில் தெரிவித்துள்ளார்.
மோடியின் விஜயம்: ஊடக சுதந்திரம் பறிப்பு
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 11:55.09 AM GMT ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ் பொது நூலகத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது ஆங்கு செய்தி சேகரிப்பதற்காக நூலகத்திற்குள் சென்ற ஊடகவியலாளர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், இந்திய பிரதமரின் தனிப்பட்ட ஊடகவியலாளருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியிடம் வினவிய போது, யாழ் நூலகத்திற்குள் காணப்படும் இடப்பற்றாக்குறை காரணமாகவே ஊடகவியலாளர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என விளக்கமளித்துள்ளார்.
இந்திய பிரதமரின் இவ்விஜயத்தின் போது ஊடக சுதந்திரம் பறிபோனமையை குறித்து ஊடகவியலாளர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw6I.html
முறைப்பாடு தொடர்பாக கலந்துரையாட ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு: அனுரகுமார
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 12:18.49 PM GMT ]
பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அனுரகுமார திசாநாயக்க,
ஜனநாயக சுதந்திரம், ஊழல் மோசடிகளுக்கான தண்டனையாகவே மகிந்த அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. அதிகாரத்திற்கு வந்த இரண்டே நாட்களில் பசில் நாட்டை விட்டு ஓடினார்.
ஏன் இதுவரை ஊழல் மோசடிக்காரர்களை கைது செய்யவில்லை என மக்களிடம் கேள்வி உள்ளது. காரணம் அரசியல்வாதிகளின் குழுவொன்றே இன்று அரசாங்கமாக இருக்கின்றது.
இதேவேளை ஊழல்கள் தொடர்பில் தாம் முன்வைத்த முறைப்பாடுகள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆதாரத்துடன் அனைத்து ஆவணங்களையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தேசிய நிறைவேற்று சபையில் பிளவு
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 12:59.36 PM GMT ]
தேசிய நிறைவேற்று சபையின் அண்மைய கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக யோசனை முன்வைக்கப்பட்ட போது எதிராகவும் ஆதரவாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதால், இறுதி தீர்மானத்திற்கு வர முடியாமல் போனதாக தெரியவருகிறது.
தேர்தல் முறையில் மாற்றம் செய்யாது, உறுதியளிக்கப்பட்டது போல், 100 நாள் முடியும் ஏப்ரல் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஏனைய சில சிறிய கட்சிகளும் யோசனை முன்வைத்துள்ளன.
எனினும் அரசாங்கத்தை ஏற்படுத்த உதவியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களும், ஜாதிக ஹெல உறுமய கட்சியை சேர்ந்தவர்களும் தேர்தல் முறையை மாற்றிய பின்னர் தேர்தலை நடத்தலாம் எனவும் அதற்கு 100 நாட்கள் போதவில்லை எனில் தேவையான காலத்தை எடுத்து கொண்டு அதனை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
அதேவேளை நிறைவேற்று சபையில் எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படுவதால், சபையை நடத்திச் செல்வதில் தடையேற்பட்டுள்ளதாக அதன் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி- பிரதமரை பிளவுபடுத்த ஊடகம் சூழ்ச்சி
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 12:30.34 PM GMT ]
குறித்த சூழ்ச்சி திட்டமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விகரமசிங்க இடையே விரிசலை ஏற்டுத்தி தேசிய அரசாங்கத்தை கவிழ்த்தி நல்லாட்சியை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியென தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தையை ராஜபக்ச ஆதரவு ஊடகவியலாளர்கள் அண்மையில் நடத்தியுள்ளார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
குறித்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர், சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் ஆற்றும் உரைகளை பத்திரிகைகளில் முன்னுரிமை அளித்து பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் அமைச்சர்கள் சிலருக்கு எதிராக முன்வைக்கும் கருத்துக்கு பத்திரிகையில் முன்னுரிமை அளிப்பட்டுள்ளது.
மூன்று பிரதான சிங்கள தேசிய பத்திரிகைகள் ஊடாக அமைச்சர்களை நேர்காணல் எடுத்து அதில் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான விமர்சனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி, பிரதமரை விமர்சிக்கும் உள்ளூர் அரசியல்வாதிகளையும் தேசிய தலைவர்களாக நினைத்து அவர்களுக்கு பத்திரிகையில் முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw7A.html
Geen opmerkingen:
Een reactie posten