[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 01:24.44 AM GMT ]
மட்டக்களப்பைச் சேர்ந்த உதயசிறி சின்னத்தம்பி என்ற தமிழ் யுவதிக்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு அல்லது விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அறியாமல் செய்த தவறுக்காக அரசியல் சாசனத்தின் 34ம் சரத்தின் பிரகாரம் மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று மூலம் கோரியுள்ளார்.
அரிசி ஆலையொன்றில் பணியாற்றி வரும் குறித்த யுவதிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காரணத்தினால் குறித்த யுவதியின் 74 வயதான தாய் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 14 ம் திகதி சிகிரியாவிற்கு குறித்த யுவதி சுற்றுலா சென்றிருந்த போது கண்ணாடிச் சுவரில் கிறுக்கியதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 2ம் திகதி இந்த யுவதிக்கு அனுராதபுரம் நீதிமன்றம் இரண்டாண்டுகால தண்டனை விதித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRUSUlq4A.html
வடக்கிலுள்ள இராணுவம் அகற்றப்படுமா, இல்லையா?: பிரதமரிடம் கேள்வியெழுப்பும் சீ.வி.விக்னேஸ்வரன்
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 04:25.18 AM GMT ]
வானொலி செய்தி சேவை ஒன்றுக்கு நேற்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் நிலைக்கொண்டுள்ள இராணுவத்தை அகற்றுவது தொடர்பாக ஸ்தீரனமான முடிவினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிக்க வேண்டுமென அவர் இதன் போது வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர் வடக்கில் உள்ள இராணுவத்தை அகற்றுவதில்லை என வணக்கத்திற்குரிய மதகுருமார்களிடம் அறிவித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் என்னிடம் அவர் இவ்வாறானதொரு கருத்தை கூறவில்லை.
இது தொடர்பாக தெளிவான பதில் ஒன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிக்க வேண்டும் என வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRUSUlq4F.html
Geen opmerkingen:
Een reactie posten