[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 06:14.02 AM GMT ]
19வது திருத்தச் சட்டம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தான அச்சுறுத்தலாக அமையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், அதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை முற்றாக ஒழிப்பதற்கு பதிலாக தன்னிச்சையாக செயற்படும் வகையில் இருக்கும் அதிகாரங்களை நீக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறவில்லை. சர்வஜன வாக்கெடுப்பை நடத்தது நிறைவேற்று அதிகாரத்தில் மாற்றம் செய்ய முடியாது என அவர் கூறியிருந்தார்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து விட்டு சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்துவது போதுமானதல்ல. தேர்தல் முறையிலும் மாற்றம் செய்ய வேண்டும்.
தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் விருப்பு வாக்கு முறையை ஒழிக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRUSUlq5C.html
நாட்டின் தேசிய கீதத்தை தமிழில் பாடுவது மிகப்பொருத்தமாக இருக்கும்: ராவண பலய
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 06:14.31 AM GMT ]
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில நாடுகளில் தேசிய கீதத்தை பிரதான மொழியில் பாடுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை ஒரு சிறிய நாடெனவும் வெவ்வேறு மொழிகளில் தேசிய கீதத்தை கேட்பதனால் ஏற்படும் கொந்தளிப்பில் இருந்த விலகிக்கொள்வதற்கு தமிழ் மொழியில் மட்டும் பாடுவது சிறந்ததென அவர் யோசனையை முன்வைத்துள்ளார்.
சிங்களவர்கள் அதற்கு தயக்கம் காட்டாமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRUSUlq5D.html
Geen opmerkingen:
Een reactie posten