தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 15 maart 2015

ஐ.நா அறிக்கையின் பின் உள்நாட்டு விசாரணை: வெளிவிவகார அமைச்சர்



புதிய தேர்தல் முறை தொடர்பில் விளக்கமளிக்கும் மலையக மக்கள் முன்னணியின் கூட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 12:03.10 PM GMT ]
புதிய தேர்தல் முறை தொடர்பில் விளக்கமளிக்கும் மலையக மக்கள் முன்னணியின் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலையில் நடைபெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
இதில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் மற்றும் தோட்ட மாவட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.


இந்தியப் பிரதமருடனான சந்திப்புக் குறித்து ஆறுமுகன் தொண்டமான் கருத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 12:14.35 PM GMT ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம், மற்றும் பலர் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது மோடியிடம் 3 விடயங்கள் முன்வைக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
இச்சந்திப்பு நன்மையானதாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSZSUmx2I.html

ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும்! - 19ம் திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவையில் அங்கீகாரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 12:57.03 PM GMT ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் யோசனைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியிடப்பட உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
19வது அரசியல் அமைப்புத் திருத்தமாக வெளியிடப்படும் இந்த வர்த்தமானி அறிவித்தல் வழமை போல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்திய பின்னர் நிறைவேற்றப்பட உள்ளது.
அவசர சட்டமூலமாக இந்த யோசனை கொண்டு வரப்பட மாட்டது. புதிய திருத்தங்களின் அடிப்படையில், நாடாளுமன்றம் ஒன்று தெரிவு செய்யப்பட்ட பின், நான்கு ஆண்டுகள் பூர்த்தியாவதற்கு முன்னர், நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரம் நீக்கப்பட உள்ளது.
இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது. சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்படும். முப்படைகளின் தளபதி, அமைச்சரவையின் தலைவர், அமைச்சரவையை நியமிக்கும் அதிகாரம் என்பன ஜனாதிபதியிடம் தொடர்ந்தும் இருக்கும். அதேவேளை தேர்தல் முறை திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருந்து நீக்கப்படுவதுடன் ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலத்தில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற சட்டமும் நீக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது
19ம் திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவையில் அங்கீகாரம்
19ம் திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு 19ம் திருத்தச் சட்டம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது. 
19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDSZSUmx3A.html


ஐ.நா அறிக்கையின் பின் உள்நாட்டு விசாரணை: வெளிவிவகார அமைச்சர்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 01:22.03 PM GMT ]
இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் விசாரணைகளின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே இலங்கையின் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றம் தொடர்பிலான உள்நாட்டு விசாரணை ஒரு மாத காலத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என வெளியாக தகவல்கள் குறித்து இந்திய ஊடகம் ஒன்று வினவிய போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். 
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் விசாரணைகள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட பின்னர், அதில் குற்றம் சுமத்தப்படும் நபர்கள் தொடர்பாக ஆராய்ந்து பார்க்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் விசாரணைகளின் இறுதி அறிக்கை எதிர்வரும் 25 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்படவிருந்தது.
எனினும் அது எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyDSZSUmx3C.html

Geen opmerkingen:

Een reactie posten