இந்தியாவைச் சேர்ந்த ரந்திர் கவுர் (34) என்ற பல் மருத்துவ மாணவி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ தினத்தன்று ரந்திர் கவுர் சான் பிரான்சிஸ்கோ நகரிலுள்ள சீக்கிய கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.
கோவிலிலிருந்து ரந்திர் கவுர், பே அடுக்குமாடி பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டதாக சான் பிரான்சிஸ்கோ நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரந்திர் கவுர் பயன்படுத்திய பொருட்கள் அவர் பிணமாக கிடந்த வீட்டிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள குப்பைத்தொட்டியில் கிடந்தமை பொலிஸாரின் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
வீட்டில் கிடந்த அவரது பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்த பொலிஸார், இந்த கொலை தொடர்பான தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
அவுஸ்திரலேயாவின் சிட்னி நகரில் வேலை பார்த்த பெங்களூரைச் சேர்ந்த மென்பொறியாளரான பிரபா கடந்த 7ஆம் திகதி இரவு வீட்டுக்கு சென்று கொண்டிருக்கையில் மர்ம நபரால் குத்திக் கொல்லப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் இந்திய மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டுள்ளமை வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
India-ladys-murder