[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 03:38.49 PM GMT ]
கடந்த 3ஆம் திகதியன்று பிரதமரின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக்கூட்டத்தில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தகவல்களின்படி தற்போது 49 விடுதலைப்புலிகளே வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்துக்கான நிரந்த வழி வகைகளை உறுதிப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன் போது அதிகாரிகளுக்கு பணித்தார்
ஆரையம்பதியில் உலக நாச்சியின் சிலை விசமிகளால் உடைப்பு
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 05:21.10 PM GMT ]
இது தொடர்பாக தெரியவருவதாவது,
கிழக்கின் முதற் பெண் சிற்றரசியான உலக நாச்சி வாழ்ந்த இடமாக ஆரையம்பதி கோவில்குளம் சிகரம் பகுதியில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளருமாகிய பூ.பிரசாந்தன் தலைமையில் ஆரையம்பதி ஆலயங்களின் ஒன்றியம், ஆற்றல்பேரவை மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் இணைந்து கடந்த 2014.09.15 திகதி குறித்த சிலை நிர்மாணிக்கப்பட்டது.
இந்த உலக நாச்சியின் திருவுருவச்சிலையின் வாள் ஏந்திய கையினையும், வாள் பகுதியினையும் நேற்று நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் உடைத்து சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.
சிலை உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இன்று காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
உலக நாச்சி வாழ்ந்த இடமும், காசிலிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த இடிபாடுகளும் இப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றது.
இப் பகுதியினை தொல் பொருள் திணைக்களம் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தி ஆய்வு செய்யுமாறு கோரி ஊர் மக்களாலும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை அடுத்து, இப்பகுதியில் அத்துமீறி அமைக்கப்பட்ட பள்ளிவாசல்கள் மற்றும் வீட்டுத்திட்டங்கள் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச சபையினால் நிறுத்தப்பட்டதும் 2015 ஜனவரி ஜனாதிபதி ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்ட வேலைகள் தொடர்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUlo2H.html
ஜனாதிபதி மைத்திரியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பணிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை
[ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2015, 12:33.04 AM GMT ]
அதிகார துஸ்பிரயோகம், ஊழல் மோசடிகள், கப்பம் கோரல்கள், கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஜனாதிபதியினால் விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதவான் பிரியசாத்டெப்பின் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. எனினும், இந்த ஆணைக்குழு தமது பணிகளை செவ்வனே மேற்கொள்ள உரிய வசதிகள் எதனையும் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் பணிகளை முன்னெடுக்க பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஓர் இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் பணிகளை முன்னெடுப்பதற்கான காரியாலய ஆளணி வளம் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இதுவரையில் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.
ஐந்து பேர் காரியாலயத்தில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாதாந்தம் 20,000 ரூபாவிற்கு மேற்படாத சம்பளம் வழங்கப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆணைக்குழுவிற்கு இன்னமும் செயலாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.
முறைப்பாடுகள் தொடர்பில் ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒரு தடவையும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் இளைஞர்கள் கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடு, அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தவே இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டது.
உரிய வசதிகள் இல்லாத காரணத்தினால் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyDSbSUlo3D.html
Geen opmerkingen:
Een reactie posten