தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 maart 2015

மகிந்தரின் "லைக் ஷியார்" எகிறவில்லையாம் பெரும் சூழ்ச்சி என்கிறார் உதய கம்பம்பெல !

ராஜபக்ஷர்கள் நாளை முதல் கிடு நடுங்க ஆரம்பித்துவிடுவார்கள் போல இருக்கே ?

[ Mar 22, 2015 08:03:03 PM | வாசித்தோர் : 13410 ]
முன்னைய அரசாங்கத்தை சேர்ந்தவர்களால் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பெருந்தொகை பணம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ள உள்நாட்டு விசாரணையாளர்களுக்கு உதவுவதற்காக அடுத்த வாரமளவில் உலகவங்கியின் விசேட குழுவினர் இலங்கை வரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணம் குறித்த விசாரணைக்காக உலகவங்கியின் களவாடப்பட்ட சொத்துக்களை மீட்கும் பிரிவினரின் உதவியே நாடப்பட்டுள்ளது, அவர்கள் இலங்கை வரவுள்ளனர்.இலங்கை அதிகாரிகள் தங்கள் விசாரணைகளை பூர்த்திசெய்து ஆதாரங்களை அவர்களிடம் கையளித்த பின்னர் அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுப்பர் என பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோன்ற குழுவொன்று சில வாரங்களுக்கு முன்னரும் இலங்கை;கு விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. தற்போது இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொலிஸ் நிதி குற்றப்புலனாய்வு பிரிவினரே நிதிமோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மிக்விமான கொள்வனவில் மோசடி.வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்களில் ஊழல்,கொள்ளுப்பிட்டியில் ஏழு நட்சத்திர விடுதியை அமைப்பதற்கான தனியார் காணிகொள்வனவில் மோசடி போன்ற விடயங்கள் குறித்து குறிப்பிட்ட பிரிவினர் தற்போது விசாரித்து வருகின்றனர். மிக் விமான கொள்வனவில் 10.5 மில்லியன் மோசடி இடம்பெற்றுள்ளது.அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்ட விலையை விட குறைந்த விலைக்கு குறிப்பிட்ட விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன, அதன் மூலம் கிடைத்த பணம் மிக முக்கிய புள்ளி ஒருவரின் தனியார் வங்கிக்கணக்கிற்கு சென்றுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்பகுதி அதிவேகநெடுஞ்சாலை அமைக்கும் பணிகளில் 2.5பில்லியன் டொவர் மோசடி இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட திட்டம் முன்னாள் ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.கொள்ளுப்பிட்டியில் காலி வீதிக்கு அருகாமையில் சர்வதேசநிறுவனம் ஓன்றிற்காக ஏழு நட்சத்திர ஹோட்டலொன்றறை அமைப்பதற்கான இடம்பெற்ற காணிகொள்வனவில் இடம்பெற்ற மோசடி குறித்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதேவேளை பத்தரமுல்லயில் புதிய இராணுவதலைமையகத்தை அமைக்கும் நடவடிக்கைகளிலும் மோசடி இடம்பெற்றுள்ளதாக நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/2653.html

மைத்திரி - ரணில் - சந்திரிக்கா இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள் !

[ Mar 22, 2015 08:17:57 PM | வாசித்தோர் : 4510 ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் வி;க்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இரகசிய பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் நோக்கில் இந்த இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் 15 அமைச்சுக்களை பொறுப்பேற்று வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
19ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏனைய சிறிய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/2654.html

மகிந்தரின் "லைக் ஷியார்" எகிறவில்லையாம் பெரும் சூழ்ச்சி என்கிறார் உதய கம்பம்பெல !

[ Mar 22, 2015 08:51:09 PM | வாசித்தோர் : 5010 ]
முன்னாள் அதிபர் மஹிந்தவிற்கும் அவருடன் இணைந்துள்ளவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விமல் வீரவன்ச உள்ளிட்டவர்களுக்கும் தனக்கும் எதிராக மேற்குலக நாடுகள் சூழ்ச்சி செய்து வருவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ, விமல் வீரவன்ச மற்றும் தனது பேஸ்புக் புத்தக விருப்பங்கள்(லைக் ஷியார்) கடந்த சில நாட்களாக குறைவடைந்து வருவதாகவும் இது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் மேற்குலக நாடுகளின் சூழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் சொல்லாமல் சொல்வது அமெரிக்காவை தான். கம்மன்பிலவின் கருத்துபடி பேஸ்புக் உரிமையாளர் மார்க் சுக்கர்பர்க் மற்றும் அவரது நிறுவனமும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக கொண்டுவரும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பேஸ் புக் உரிமையாளருக்கு வேறு வேலை இல்லைப்போல இருக்கு. மகிந்தரின் பேஸ்புக் பக்கத்தில், உள்ள லைக்கை குறைத்து வருகிறாரா என்ன ? மக்கள் மத்தியில் மகிந்த செல்வாக்கை மேலும் மேலும் இழந்து வருகிறார் என்பது தெரிகிறது. இதன் காரணமாகவே மக்கள் அவர் பக்கத்தில் தம்மை அன் லைக் செய்துள்ளார்கள்.
http://www.athirvu.com/newsdetail/2655.html

Geen opmerkingen:

Een reactie posten