நிதிக் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமெரிக்கா, இந்தியா, பிரிட்டனின் உதவி பெறப்படும்: ரணில்
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 03:33.29 AM GMT ]
கடந்த அரசாங்கத்தினால் பாரியளவில் நிதி மோசடிகள் ஊழல்கள் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரிட்டனின் உதவி பெற்றுக்கொள்ளப்படும்.
இவ்வாறு வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளனர்.
உலக வங்கி, அமெரிக்க நீதித் திணைக்களம், இந்திய மத்திய வங்கி, லண்டன் மோசடி தவிர்ப்பு பிரிவு ஆகியவற்றின் ஒத்துழைப்பு ஏற்கனவே கோரப்பட்டுள்ளது.
கொலைக் குற்றச் செயல் ஒன்று தொடர்பிலான விசாரணைகளைப் போன்று இந்த மோசடி விசாரணைகளை நடத்த முடியாது.
இதற்கு சில கால அவகாசம் தேவைப்படுகின்றது.
கடந்த அரசாங்கத்தைப் போன்று எவ்வித சாட்சியமும் இன்றி சந்தேக நபர்களை இந்த அரசாங்கம் கைது செய்யாது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஒழுக்க விதியொன்றை சட்டமாக்க வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 03:52.35 AM GMT ]
தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் சுயாதீனக் குழுக்கள் மற்றும் அதன் வேட்பாளர்கள் பின்பற்றப்பட வேண்டிய ஒழுக்க விதிகள் குறித்து தெளிவுபடுத்தும் வகையில் இந்த ஒழுக்கக் கோவை அமைய வேண்டும்.
இந்த ஒழுக்கக் கோவை சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஓர் சட்டமாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
தேர்தலை சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் நடத்தும் நோக்கில் 2012ம் ஆண்டில் தேர்தல் திணைக்களத்தினால் இந்த ஒழுக்கக் கோவை முன்வைக்கப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டு இந்த ஒழுக்கக் கோவை தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மஹிந்த அரசு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக கண்துடைப்பு செய்தது: ஹக்கீம் குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 04:25.17 AM GMT ]
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் உடனான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டதாகவும்,
தெற்கில் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட்ட பொதுபல சேனாவிற்கு அரசாங்க உயர் மட்ட தரப்பினரிடமிருந்து அனுசரணை கிடைத்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தை வெற்றி கொண்ட இறுமாப்பில் இருந்த முன்னாள் ஜனாதிபதி, இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை குறைப்பதற்கும், விரிசலை நீக்குவதற்கும் வெறும் கண் துடைப்பிற்காக சில காரியங்களைச் செய்தாரே தவிர உண்மையாக எவ்விதமான பயனுள்ள முன்னெடுப்புகளையும் அவர் மேற்கொள்ளவில்லை.
இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
அத்துடன் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவராக செயற்பட்ட இடதுசாரி அரசியல் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண கூட இத்தெரிவுக்குழுவில் தெரிவு செய்யப்படவில்லை.
சிறுபான்மையினத்தவருக்கு எதிராக தெற்கில் இனவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்ட நிலையில் பொதுபல சேனா மற்றும் பேரினவாதச் சக்திகளுக்கு அப்போதைய அரசாங்க உயர்மட்டத்தினரின் அனுசரணை கிடைத்தது.
இனவாதம் மாத்திரமல்லாது ஊழல் மோசடிகள் நிறைந்த அப்போதைய அரசாங்கத்திற்கு முடிவு கட்டுவதற்கு சிறுபான்மையினர் உள்ளிட்ட நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் முன்வந்தனர்.
எனினும் புதிய ஆட்சியில் பாராளுமன்ற சமநிலைப் பேணுவதில் நிலவும் கருத்து வேறுபாடுகள், முன்னாள் ஜனாதிபதியின் விசுவாசிகளின் செயற்பாடுகள் என்பன சவாலாக இருந்த போதிலும்,
100 நாள் வேலைத்திட்டத்தின் பின்னர் பாராளுமன்றத் தேர்தலொன்றை நடத்தி தேசிய அரசாங்கத்தை கட்டியெழுப்பி நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் முயற்சித்து வருகின்றனர் என அமைச்சர் ஐ.நா பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தினார்.
மேலும் தான் நீதியமைச்சராக பதவி வகித்த போது பாராளுமன்றத்தில் சட்டமாக்க கொண்டுவரப்பட்ட முக்கிய சட்டங்களை கடந்தகால ஆட்சியில் தடுத்தி நிறுத்தி வைக்கப்பட்டது எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTWSUnx4F.html
Geen opmerkingen:
Een reactie posten