தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 maart 2015

அமெரிக்காவே ஆட்சி மாற்றத்திற்கான சூத்திரதாரி: தேசிய சுதந்திர முன்னணி குற்றச்சாட்டு- புதிய அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டனர்: மொஹமட் முஸம்மில்

ஐ.நா.வின் உதவிச் செயலாளர் இன்று விக்கினேஸ்வரனுடன் சந்திப்பு
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 01:21.20 AM GMT ]
இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மென் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாணம் செல்லும் இவர் இன்று காலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டுள்ள நிலையில் இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் அரசியல் விவகார உதவிச் செயலாளர் வடபகுதி நிலைமையினை ஆராயும்பொருட்டே இன்று யாழ்ப்பாணம் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறுதி யுத்தத்தின்போது இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்று வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் முதலமைச்சருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க விசேட குழு
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 01:30.27 AM GMT ]
வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளை உண்மையான உரிமையாளர்களிடம் ஒப்படைக்க விசேட குழுவொன்று நிறுவப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்ட காணிகளின் உண்மையான உரிமையாளர்களை கண்டுபிடிப்பதே குழுவின் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதனினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர், மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்க உள்ளனர்.
விடுவிக்கப்பட்ட 1000 ஏக்கர் காணியை உரியவர்களிடம் ஒப்படைத்தல் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை கிரமமாக்குதல் ஆகியன இந்தக் குழுவின் பிரதான பணிகள் என தெரிவிக்கப்படுகிறது.
மூன்று வார காலத்திற்குள் இந்த குழு, அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டுமென அமைச்சர் சுவாமிநாதன் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பு!
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 03:20.24 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.
அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரட்ன இது குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். உத்தேச தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பிலான பரிந்துரைகளை அமுலாக்கம் செய்வது குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட உள்ளது.
தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட 100 நாள் வேலைத் திட்டத்தின் ஓர் வாக்குறுதியாகும் என ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குப் பொருத்தமான ஒர் தேர்தல் முறைமை அமுல்படுத்தப்படும். பழைய தொகுதிவாரி முறைமையையும் தற்போதைய விருப்பு வாக்கு முறைமையையும் உள்ளடக்கிய ஓர் புதிய தேர்தல் முறைமை உருவாக்கப்படும்.
தேர்தல் தொகுதி நிர்ணய நடவடிக்கைகள் அவ்வளவு கடினமான காரியமன்று. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து கேள்விகள் எழுப்பியிருந்தேன். தேசிய நிறைவேற்றுப் பேரவையிலும் இது குறித்து கருத்து வெளியிட்டிருந்தேன்.
தேவையென்றால் தேர்தல் தொகுதி நிர்ணய நடவடிக்கைகள் 40 நாட்களில் மேற்கொள்ள முடியும் எனவும் ராஜித சேனாரட்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறையை மாற்ற வேண்டும்: ராஜித வலியுறுத்து
தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையை மாற்றியமைக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை மன்ற கல்லூரியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
100 நாட்களுக்குள் தேர்தல் முறைமையை மாற்றியமைக்காவிட்டால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இதனை மாற்றியமைக்க முடியாத நிலை ஏற்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தேர்தல் முறைமையில் மாற்றங்கள் இடம்பெறாவிடில் இன்னும் 10 வருடங்களில் பாராளுமன்றத்தில் வெறும் முதலாளிமாரின் ஆதிக்கமே காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் காலங்களில் மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்து விட்டு தேர்தல் வெற்றியின் பின்னர் அதனை செயற்படுத்த மறந்து விடும் நிலையே வழமையாகி வருகின்றது.
எனினும் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் பெற்ற வெற்றியானது நாட்டின் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து பெற்ற வெற்றியாகும்.
எதிர்வரும் பொது தேர்தலில் யார் வெற்றி பெற்று அட்சியமைக்க போகின்றார்கள் என்பது முக்கியமல்ல, இந்த 100, 120, மற்றும் 150 நாட்களில் தற்போதைய அரசாங்கம் என்ன செய்ய போகின்றது என்பதே முக்கியமானது.
இந்த மாற்றங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றுதல், தேர்தல் முறைமையை மாற்றுதல் என்பனவே முக்கிய பங்கு வகிக்கின்றன.
1977ம் ஆண்டு முதலிருந்தே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறைமையை ஒழிப்பதற்காக போராடி வருகின்றோம்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் அவர் அந்த அதிகாரங்களை பயன்படுத்திய விதத்தினால் இம்முறைமை நீக்கப்பட வேண்டும் என்பது முன்னுரிமை பெற்றது.
இதனை வலியுறுத்திய மக்களுடன் நாங்களும் ஒன்றிணைந்து வெற்றி பெற்றோம் வெற்றி கண்டிராவிட்டால் நாங்கள் இன்று சிறைவாசம் அனுபவத்திருப்போம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையில் ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை காட்டிலும் அரசியலமைப்பு திருத்த விடயத்தில் நல்ல நிலைப்பாட்டில் உள்ளது என அவர் தெரிவித்ததோடு,
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை எனவும், விரைவில் இது குறித்து தீர்மானம் எடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு போட முடியாது, பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூறாமல் பாராளுமன்றம் எடுக்கும் தீர்மானங்களை ஜனாதிபதி சவாலுக்கு உட்படுத்த முடியும் உள்ளிட்ட விடயங்களை கட்டாயமாக நீக்க வேண்டும்.
அத்துடன் தற்போதைய ஜனாதிபதிக்கும் சில அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி காலத்துக்கு பின்னர் ஜனாதிபதி முறையை முற்றாக நீக்கி விட்டு இந்தியாவிலுள்ளது போன்றதொரு ஜனாதிபதி முறைமையை கொண்டு வரலாம் என அமைச்சர் ஆலோசனை கூறியுள்ளார்.

அமெரிக்காவே ஆட்சி மாற்றத்திற்கான சூத்திரதாரி: தேசிய சுதந்திர முன்னணி குற்றச்சாட்டு- புதிய அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டனர்: மொஹமட் முஸம்மில்
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 03:26.37 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த படையினர் பழிவாங்கப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
மனிதாபிமான மீட்புப் பணிகளில் முக்கிய பங்களிப்பினை வழங்கியவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர் என தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹம்மட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
இதன் ஓர் கட்டமாகவே அண்மையில் முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கே.பி.தஸாநாயக்க புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் தேவைகளுக்கு அமையவே நாட்டில் தற்போது ஆட்சி நடத்தப்படுகின்றது. நல்லாட்சி அரசாங்கம் அமெரிக்காவை திருப்திப்படுத்துவதில் அக்கறை காட்டி வருகின்றது.
கடந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்டதன் பிதான சூத்திரதாரி அமெரிக்காவே.
அமெரிக்காவே திரை மறைவில் இருந்து கொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டனர்: மொஹமட் முஸம்மில்
100 நாள் வேலை திட்டத்தில் 50 நாட்கள் கடந்துவிட்டன எனினும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை தற்போதைய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மோஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
100 நாட்களுக்குள் செய்வதாக கூறிய வேலை திட்டங்களில் பல இன்னமும் நிலுவையில் உள்ளன. வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக கூறினார்கள் எனினும் குறித்த நிவாரணம் மக்களுக்கு இன்னும் சென்றடையவில்லை.
இதேவேளை தேயிலை,இறப்பர்களுக்கான விலையில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது. நெல்லுக்கான விலை குறைவாக காணப்படுகின்ற நிலையில் அரசி விலை மிகவும் உயர்வடைந்துள்ளது.இதைப்போன்றே பல்வேறு விடயங்கள் நிலுவையில் உள்ளன.
இதன் மூலம் நல்லாட்சியில் வழங்கிய வாக்குறுதிகளை புதிய அரசாங்கம் நிறைவேற்ற தவறியுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTWSUnx3H.html

Geen opmerkingen:

Een reactie posten