முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அரச சொத்துக்களை திரும்ப பெறுவதற்காக ஜனாதிபதி செயலணி குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரத்ன, அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் .இலங்கை கடவுச்சீட்டுகளில் உயிரியல் தகவல்கள் உள்ளடக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், இலங்கை கடவுச்சீட்டுகளில் கைவிரல் உள்ளடக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSdSUlq1B.html
Geen opmerkingen:
Een reactie posten