[ வியாழக்கிழமை, 19 மார்ச் 2015, 10:03.07 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பதவி உயர்வினை வழங்கியுள்ளார்.
பீல்ட் மார்ஷல் பதவியை பெற்றுக்கொள்ளும் நிகழ்வு எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இராணுவத்தின் அதியுயர் பதவியாக பீல்ட் மார்ஷல் பதவி கருதப்படுகின்றது.
இலங்கையில் பீல்ட் மார்ஷல் தரத்தில் ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
நிறுத்தி வைக்கப்பட்ட பஸ் மீது இனந்தெரியாதோர் தீ வைப்பு!
[ வியாழக்கிழமை, 19 மார்ச் 2015, 10:52.16 AM GMT ]
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக குற்றங்களை விசாரணை செய்யும் சொகோ பொலிஸ் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
புல்லுமலையைச் சேர்ந்த வரதராஜசிங்கம் சகாயராஜா என்பவருக்கு சொந்தமான பஸ் வண்டியே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான குறித்த பஸ் வண்டி தீ வைப்பு சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மோடி வந்து என்ன செய்தார்: வீரகுமார திசாநாயக்க கேள்வி
[ வியாழக்கிழமை, 19 மார்ச் 2015, 10:57.02 AM GMT ]
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தேசிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் இலங்கை பாராளுமன்றத்தில் 13ம் திருத்த சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வு வழங்குவதாக தெரிவித்துள்ளார் எனவும்,
வடக்கிற்கு சென்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் திருத்த சட்டம் தொடர்பில் இந்திய பிரதமர் நம்பிக்கை அளித்துள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியான சூழலை தோற்றுவித்துள்ள நிலையில் மோடி இலங்கைக்கு வந்து என்ன செய்தார் என அவர் கேள்வியெழுப்பியதுடன்,
யுத்தத்தினால் காயமுற்று நலிவடைந்த மக்களின் இதயங்கள் தற்போது குணமடைந்து வரும் நிலையில், இந்திய பிரதமரின் இச்செயற்பாடு நாட்டை நேசிக்கும் அரசியல் கட்சியான தம்மால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வீரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSdSUlq0H.html
சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த கையெழுத்து இயக்கம் ஆரம்பம்
[ வியாழக்கிழமை, 19 மார்ச் 2015, 11:40.22 AM GMT ]
ஒரு மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்துக்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள கையெழுத்து இயக்கமானது நியூயோர்கில் ஐ.நா தலைமைகத்துக்கு முன்னாலும், ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலிலும் தொடங்கப்பட்டது.
நியூயோர்க்கில், முதற்கையெழுத்தினை அமெரிக்காவின் முன்னாள் தலைமை அரசு வழக்கறிஞர் ராம்சே கிளார்க் அவர்கள் ஒப்பமிட்டு தொடக்கி வைத்திருந்தார். கையொப்ப மனுவினை நிவேதா ஜெயக்குமார், சூமியா கருணாகரன் ஆகிய இளந்தலைமுறையினர் வாசித்தனர்.
நியூயோர்க்கில், முதற்கையெழுத்தினை அமெரிக்காவின் முன்னாள் தலைமை அரசு வழக்கறிஞர் ராம்சே கிளார்க் அவர்கள் ஒப்பமிட்டு தொடக்கி வைத்திருந்தார். கையொப்ப மனுவினை நிவேதா ஜெயக்குமார், சூமியா கருணாகரன் ஆகிய இளந்தலைமுறையினர் வாசித்தனர்.
'போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்குப் முற்றிலும் எந்தப் பொறுப்பேற்பும் இல்லை என்பதால், சிறிலங்காவில் தற்போதைய சூழ்நிலை ஐ.நா.சாசனம் அத்தியாயம் 7 பிரிவு 39 இன் கீழ் 'அமைதிக்கான அச்சுறுத்தல்' தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையை உள்ளடக்கியதாக இருக்கிறது' என்று இந்த கையொப்ப மனுவில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மனு தமிழ், சிங்களம், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, உட்பட 15 மொழிகளில் தொடங்கப்பட்டுள்ள இக்கையெழுத்து இயக்கத்தில் www.tgte-icc.org என்ற இணையத்தளத்தின் வழியே உலகெங்கும் உள்ளவர்கள் ஒப்பமிட்டுக்
கொள்ளலாம். அத்தோடு இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக சர்வதேசக் குற்றங்களை, சர்வதேச மன்றங்களிலும் - அயல்நாடுகளில் உள்ள உள்நாட்டுத் தீர்ப்பாயங்களிலும் முன்னிறுத்துவதற்கும், வழக்குப் பணிகளுக்கான நிதியைத் திரட்டுவதற்கான வேண்டுகோளும் முன்வைக்கப்படுகிறது.
கொள்ளலாம். அத்தோடு இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக சர்வதேசக் குற்றங்களை, சர்வதேச மன்றங்களிலும் - அயல்நாடுகளில் உள்ள உள்நாட்டுத் தீர்ப்பாயங்களிலும் முன்னிறுத்துவதற்கும், வழக்குப் பணிகளுக்கான நிதியைத் திரட்டுவதற்கான வேண்டுகோளும் முன்வைக்கப்படுகிறது.
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையால் குறிப்பிடப்பட்டுள்ளது போல தமிழர்களுக்கான நீதி கிடைக்க ஏதுவான அரசியல் சூழல் அங்கு இல்லை என்பதையும் இந்த மனு சுட்டிக்காட்டுகிறது. சிங்களர்கள் மேலாதிக்கம் பெற்றுள்ள ஒரு நீதித்துறை சிங்கள இராணுவ அதிகாரிகளை விசாரிக்க முயற்சி செய்வது நீதியைக் கொண்டு வராது என்றும், இது கடந்தகால விசாரணை ஆணையங்களின் சான்றால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த மனு வாதிடுகிறது. 1983 இனப் படுகொலைகளைத் தொடர்ந்து நாங்கள் விசாரணை நடத்துவோம் என்று ஐ.நா.விடம் சிரிலங்காத் தூதர் அளித்த வாக்குறுதியைக் குறிப்பிட்டு அந்த வாக்குறுதி ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை என்பதும் கையொப்ப மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் முன்னால் படைத் தலைவர் தற்போதைய அரசாங்கத்தின் ஓர் உறுப்பினராக இருக்கிறார் என்பதும், புதிய அதிபர் சிறிசேனாவின் உள்ளார்ந்த குற்றத்தன்மை நீதி வழங்கப்படுவதற்கு உகந்ததாக இருக்காது என்பதும் எந்த விதத்திலும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துவது தவிர வேறு வழியில்லை எனபதும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDSdSUlq1C.html
Geen opmerkingen:
Een reactie posten