தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 15 maart 2015

"தமிழக மக்கள் உணர்ச்சிவசப்படுவது இலங்கை தமிழர்களுக்கு பாதகமாகவும் முடியலாம்"முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

பாடசாலை மாணவியை கடத்திய பிரபல அரசியல்வாதியின் மகன்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 01:33.44 PM GMT ]
பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகன் 16 வயதான பாடசாலை மாணவியை பலவந்தமாக அழைத்துச் சென்று ஒரு வருடமாக தடுத்து வைத்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கலதாரி ஹொட்டலில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை கொழும்பு கிருளப்பனையை சேர்ந்த வர்த்தகரான காமினி ரணசிங்க மற்றும் அவரது மனைவியான தாமீனி இந்திரா ரொட்றிகோ ஆகியோர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமைச்சரின் மகன் அமைச்சுக்கு சொந்தமான வாகனத்தில் வந்து அப்போது 16 வயதில் இருந்த எமது பிள்ளைகளை கடத்திச் சென்றார்.
இது குறித்து கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிலும் முறைப்பாடு செய்தோம். எனினும் பலன் கிடைக்கவில்லை.
பிள்ளையை மீண்டும் ஒப்படைப்பத்து கல்வி நடவடிக்கைகளை தொடர இடமளிப்பதாக கூறினாலும், அவர்கள் அதனை செய்யவில்லை. தொடர்ந்தும் அவர்களின் பொறுப்பில் வைத்துள்ளனர்.
மகளை தொடர்பு கொள்ள எந்த வழியும் இல்லை என்பதால், நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றோம்.
பிள்ளையின் பொறுப்புரிமையை கோரி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளோம்.
மகளை போலி கடவுச்சீட்டில் வெளிநாட்டு அழைத்துச் செல்ல போவதாக தகவல் கிடைத்துள்ளது. எனினும் மகளின் கடவுச்சீட்டு எங்களிடமே உள்ளது.
எமக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க. பெண்கள் விவகார அமைச்சர் ரோசி சேனாநாயக்க ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
பெண் பிள்ளை என்பதால், இவ்வளவு நாள் பொறுத்துக் கொண்டிருந்தோம். கடந்த தேர்தல் நேரத்தில் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லுமாறு உறவினர்கள், நண்பர்கள் கூறினார். நாங்கள் அப்படி செய்யவில்லை.
தற்போது சம்பவத்தை வெளியில் கூறியுள்ளோம். எமக்கு அவமானம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என ரணசிங்க தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDSZSUmx3D.html

19ம் திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவையில் அங்கீகாரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 01:54.14 PM GMT ]
19ம் திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு 19ம் திருத்தச் சட்டம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது. 
19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் ஏற்பட்ட பிணைப்பு வேறு எந்த நாட்டிலும் ஏற்படவில்லை: இந்திய பிரதமர்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 01:44.20 PM GMT ]
உலகில் பல நாடுகளுக்கு சென்றிருந்தாலும் இலங்கை விஜயத்தின் போது இலங்கையிலும், அந்நாட்டு மக்களிடமும் ஏற்பட்ட பிணைப்பு வேறு எந்த நாட்டிலும் ஏற்படவில்லை என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த பிணைப்பை வேறு எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பும், விருந்தோம்பலும் தனக்கு விசேடமான அனுபவத்தை கொடுத்துள்ளதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமரின் இருநாள் விஜயத்தின் முடிந்து நாடு திரும்புவதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு வழங்கிய இராப்பேசனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSZSUmx3E.html


இந்தியப் பிரதமரின் வருகையின் மூலம் தமிழ் மக்களின் உரிமை பற்றிய நம்பிக்கை தெரிகிறது: மாவை, சுமந்திரன்.
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 02:07.14 PM GMT ]
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமராட்சி கிழக்கிற்கான பணிமனையான நெய்தலகம் இன்று தாளையடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு வடமராட்சி கிழக்கு கட்சியின் அமைப்பாளர் சூரியகாந் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினராக தமிழரசு கட்சியின் தலைவரும் பா.உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா மற்றும் பா.உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான ஆனோல்ட், சயந்தன், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், வடமராட்சி கிழக்கு மக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் மாவீரரின் தாயார் மங்கள விளக்கேற்றியதை தொடர்ந்து நெய்தலகம் பெயர்பலகையினை பா.உறுப்பினர் மாவை.சேனாதிராஜா திரைநீக்கம் செய்துவைத்தார்.
அத்துடன், பா.உறுப்பினர் சி.சிறீதரனுடன் இணைந்து நெய்தலகத்தின் கணணி நிலையம், நூலகம் பணிமனை என்பவற்றை நாடாவெட்டி திறந்து வைத்து பணிகளை ஆரம்பித்து வைத்தார் மாவை சேனாதிராஜா.
வரவேற்புரையையும் வடமராட்சி கிழக்கு பற்றிய ஓர் அறிமுக உரையையும் சமூக ஆர்வலர் சசிகரன் வழங்கினார்.
அவர் தனது உரையில்,
வடமராட்சி கிழக்கிற்கு உரிய மக்கள் பிரநிதித்துவங்கள் வீதி, கல்வி, போக்குவரத்து, வாழ்வாதாரம் போன்றவற்றில் காணப்படுகின்ற குறைபாடுகள் தேவைகள் பற்றி விரிவாக குறிப்பிட்டிருந்தார்.
இங்கு சிறப்புரைகளை பா.உறுப்பினர் மாவை.சேனாதிராஜா, பா.உறுப்பினர் சி.சிறீதரன், பா.உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர் ஆனல்ட் ஆகியோர் நிகழ்த்தி இருந்தனர்.
இங்கு பா.உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை.சேனாதிராஜா தனது உரையில்,
வடமராட்சி கிழக்கில் எமது மக்களின் நலன்கருதி ஒரு கட்சிக் காரியாலயத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இனி இந்த பணிமனையின் ஊடாக மக்கள் தங்கள் தேவைகளை கருத்துக்களை எமக்கு தெரிவிக்க சந்தர்ப்பமாக அமைக்கின்றது.
நெய்தலகம் என்பது எமது பாரம்பரியத்தோடு ஒழுக்கத்தோடு ஒட்டியதாக அமைகின்றது. சங்ககாலத்தின் நில ஒழுக்கங்களில் ஒன்றாக நெய்தலின் பண்பு நம்மோடு பயணிக்கின்றது.
இந்த மண் நமது உரிமைப் போராட்டத்தில் நிறைந்த அர்ப்பணிப்புக்களை செய்த மண். அந்த அடிப்படையில்தான் இந்தி விழாவின் ஆரம்பித்திலேயே அர்ப்பணித்த குடும்பத்தை சேர்ந்த தாய் சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார்.
நமது அர்ப்பணிப்புக்கள் வீண் போக கூடாது.நாம் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் பணி செய்யவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். அது மக்களின் கைகளில்தான் இருக்கின்றது.
இந்த நாட்டிலே ஒரு அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தன் மூலம் எமது மக்கள் தலைமையுடன் இணைந்து மிக நேர்த்தியான தீர்மானிப்பவர்களாக மாறியிருக்கின்றார்கள்.
அதன் அடைப்படையில் இன்று மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. எமது நிலத்திற்கு இந்திய பிரதமர் வந்துபோயிருக்கின்றார். அது ஒரு நல்ல சமிக்ஞை.
கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கலந்து கொண்ட நிகழ்வுகளில் எமது உணர்வுகள் உரிமைகள் தொடர்பாக புரிந்து கொண்டதன் அடிப்படையில் தன் கருத்துக்களை சாதகமாக வெளியிட்டிருக்கின்றார்.
தான் சில இடங்களில் மனம் நெகிழ்ந்துபோனதாக கூறியிருக்கின்றார். சமஸ்டி அடிப்படையிலான தீர்வின் நன்மைகள் இந்தியாவோடு ஒப்பிட்டு ஒரு சேதியை சொல்லி சென்றிருக்கின்றார்.
இந்த சந்தர்ப்பத்தில் இந்தியப் பிரதமரின் வருகையின் பின்னரான ராஜதந்திர நகர்வுகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
நாமே அவர் வரவுக்கு அதாவது, தமிழ் மக்களின் தீர்மானங்கள்தான் அவரின் இலங்கை வரவுக்கு காரணம். குறிப்பாக ஜனாதிபதியை மாற்றியது. நாம் மோடி அவர்களை சம்மந்தன் அவர்களின் தலைமையில் சந்தித்தபொழுது அவர் எம்மிடம் கேட்டார் நீங்கள் இந்தியாவை நம்புகிறீர்களா என்று, நாம் ஆம் என்றோம்.
அதன்படி எமது மக்களின் உரிமைகள் வாழ்வாதாரம், பொருளாதார தேவைகள் பற்றி வேண்டிக் கொண்டோம். அதற்கு இந்திய பிரதமர் நம்பிக்கை ஊட்டும் பதில்களை தந்துள்ளார் என தெரிவித்தார்.
நெய்தலகம் திறப்பு விழாவிலே கலந்து கொண்ட பா.உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது உரையில், 
வடமராட்சி கிழக்கு குடத்தனையை பிறப்பிடமாகக் கொண்டவன் என்ற வகையில் இந்த பணிமனை திறக்கப்படுவது மகிழ்ச்சி தருகின்றது.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்று சொல்வார்கள். போரால் பாதிக்கபட்ட மக்களின் மீள் நிமிர்வுக்கு இத்தகைய பணிமனை வழிவகுக்கும் என்ற அடிப்படையில் இந்த பணிமனையின் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்தவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
நாம் தோற்கடிக்கப்பட்டவர்கள் சொல்லப்படுகின்ற நிலையில் இருந்து ஒரு வித்தியாசமான பொறிமுறையினடாக பயணித்து நாம் மீள நிமிரவேண்டும்.
ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்டது என சொல்லப்பட்டால் ஆம் அப்படியே இருக்ககட்டும். அது ஒரு வீர சரித்திரம். அதில் இருந்து நாம் எழுகின்ற தந்திரத்தை கொண்டவர்களாக பொருளாதார ரீதியில் தொழில்நுட்ப ரீதியில் எமது அறிவைப் பயன்படுத்தி நாம் வெல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இது வித்தியாசமான காலம். இதில் ஒரு வித்தியாசமான பொறிமுறையை நாம் கையாள வேண்டும். சற்றுப்பின் தள்ளிப் பார்த்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எமது மக்களுக்கு சரியான தலைமைத்துவத்தை கொடுத்து வந்திருப்பதை நாம் அவதானிக்கலாம்.
இப்பொழுதும் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சரியான தலைமைத்துவத்தை மக்களின் எண்ணங்கள் உணர்ந்து கூட்டமைப்பு வழங்கியுள்ளது.
இனியும் சோரம் போகாத உரிமைகளை விட்டுக் கொடுக்காத ராஜதந்திரம் மிக்க தலைமைத்துவத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கொடுக்கும். அதற்கு மக்களாகிய உங்களின் நம்பிக்கையும் ஆதரவும் அவசியம்.
மக்கள் தெளிவாக இருப்பதை நான் சந்திப்புக்களின்போது உணர்ந்துள்ளேன். நாம் ஆற்றைக் கடக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இப்பொழுது படகில் ஏறி அமர்ந்துள்ளோம். படகை கவிழ்க்காமல் கரை சேருவது நம்கையில்தான் இருக்கின்றது. நாம் அவசரப்பட முடியாது நிதானம் வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSZSUmx3G.html

"தமிழக மக்கள் உணர்ச்சிவசப்படுவது இலங்கை தமிழர்களுக்கு பாதகமாகவும் முடியலாம்"
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 02:12.59 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் உணர்ச்சிகரமாகச் செயற்படுகின்ற தமிழக மக்கள், அவதானத்துடன் செயற்படுவது பயனுள்ளதாக இருக்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரச்சினை பற்றிய முடிவுகளை மேற்கொள்வதற்கு முன்னர், அங்கு என்ன நடக்கின்றது, என்பதைக் கவனத்திற் கொண்டு, ஏதேனும் முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் தங்களுடன் பேசுவது பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கின்றார்.
சில நேரங்களில், உணர்ச்சிகள் - நாங்கள் விரும்புகின்ற முடிவைப் பெற்றுத் தராது. அதுவே பல சமயம் எதிர்மறையான விளைவயும் ஏற்படுத்திவிடக் கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வடமாகாணத்திற்கு மேற்கொண்ட விஜயம் குறித்த, இந்திய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த விக்னேஸ்வரன், "இதுவரை காலமும் வட இந்தியார்களுக்கு, இலங்கையின் வட பகுதியின் கஸ்டமான நிலைமைகள் குறித்து, பெரிய அளவில் கரிசனை கிடையாது என்ற கருத்துத் தோற்றமே இங்கு நிலவியது. ஆனால் இந்தியப் பிரதமர் இங்கு நேரடியாக வந்து நிலமைகளை கண்டு, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் எனும் உறுதியை அளித்திருப்பது, எமக்குப் பெரிய ஆறுதலை அளித்துள்ளது. அவர் வருகைக்கு முன்னர் இருந்ததை விட, மோடி அவர்கள் இங்கு வந்து சென்றதன் பின்னர், இந்தியாவிடம் எங்களின் நம்பிக்கை கூடியுள்ளது." என தெரிவித்துள்ளார்.
போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றசாட்டுக்கள் பற்றிய விசாரணைகள், மீள்குடியேற்றம், நல்லிணக்கம் போன்ற விஷயத்தில் பொறுமை காக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் தெரிவித்துள்ளது பற்றி பதிலளித்த அவர், "பொறுமை என்பது அவசியம் ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் முடியவில்லை. அதேவேளை அழுத்தம் கொடுத்தால் மட்டுமே இலங்கை அரசாங்கம் சிறூபான்மையினருடைய சில விஷயங்களையாவது செய்யும் என்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம்.
கடந்த 67 ஆண்டுகளாக இந்த நாட்டில் சிறுபான்மையினர் பொறுமையாகக் காத்திருந்தனர். எனவே நன்மைகள் ஏற்படுமாக இருந்தால், இன்னும் சில மாதங்கள் காத்திருப்பதில் தவறில்லை." என கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSZSUmx3H.html

Geen opmerkingen:

Een reactie posten