கறுப்பு பணத்தை வெள்ளையாக்கிய குற்றத்திற்காக கோட்டபாய கைதாகலாம் !
[ Mar 16, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 12965 ]
நிதிச் சலவையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை நிதிச் சலவை சட்டத்தின் அடிப்படையில் கோதபாய ராஜபக்ஸவை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பணம் சட்டவிரோதமான வழிகளில் பரிமாறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆயுதங்கள் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களில் ஈட்டிய பணத்தை அரசாங்க கணக்குகளில் வைப்பிலிடாது, கோதபாய சொந்தக் கணக்கில் வைப்பிலிட்டுக்கொண்டுள்ளதாகவும் பல பில்லியன் ரூபா பணம் இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.கோதபாயவை கைது செய்யவது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் ஏற்கனவே சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.ரக்னா லங்கா நிறுவனம் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும், கொடுக்கல் வாங்கல்களின் மூலம் பாரியளவில் பணம் திரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கோதபாய ராஜபக்ஸ, பாரியளவில் பணத்தை சட்டவிரோதமான முறையில் ஈட்டியுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திரட்டியுள்ளனர்.இந்த நிறுவனம் அரசாங்கத்துக்கு சொந்தமானது என கோதபாய ராஜபக்ஸ வெளிக்காட்டிக்கொள்ள முயற்சித்த போதிலும் உண்மையில் இந்த நிறுவனம் கோதபாயவிற்கு சொந்தமான ஓர் தனியார் நிறுவனம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கொடுக்கல் வாங்கல்களில் தனியார் நிறுவனமொன்று ஈடுபட வேண்டுமாயின், பாராளுமன்றின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற போதிலும், ரக்னா லங்கா நிறுவனம் அவ்வாறான அனுமதியை பெற்றுக்கொள்ளவில்லை.
கோதபாய ராஜபக்ஸ பயங்கரவாதிகள் மற்றும் கடற் கொள்ளையர்களுடன் தொடர்புகளைப் பேணியமை தொடர்பில் சர்வதேச காவல்துறையினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இலங்கையிடமும் இது குறித்து உதவி கோரப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் வாரமளவில் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மகிந்தருக்கு "செக்" வைக்கும் திட்டம் ஆரம்பமா ? விசாரணைகள் தொடங்கியது !
[ Mar 16, 2015 04:44:26 PM | வாசித்தோர் : 7565 ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதம அதிகாரியான காமினி செனரத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். நிதி மோசடிச் சம்பவம் தொடர்பில் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது. பீபல்ஸ் லீஸிங் நிறுவனம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. காமினி செனரத்திடம் காவல்துறையினர் வாக்கு மூலங்களை பதிவு செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காமினி செனரத், பீபல்ஸ் லீசிங் நிறுவனத்தின் தலைவராக கடந்த 2013ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைவராக கடமையாற்றியுள்ளார். 2009ம் ஆண்டு முதல் காமினி செனரத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பிரதம அதிகாரியாக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/2604.htmlகாப்புலிக்கு காசு கொடுத்து என்னை போட்டு தள்ள உலகத் தமிழர் திட்டம்- கோட்டபாய !
[ Mar 16, 2015 05:04:04 PM | வாசித்தோர் : 12385 ]
கொழும்பில் தற்போது வெறும் 4 பேர்கொண்ட பொலிஸ் காவலோடு தான் கோட்டபாய ராஜபக்ஷ வாழ்ந்து வருகிறார். தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோட்டபாய கடந்த வாரம் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். ரணிலோடு நட்பு வட்டாரத்தில் உள்ள நபர் ஒருவர் மூலமாகவே இக்கொரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏன் நீங்கள் தானே அமெரிக்க கிறீன் கார்ட் வைத்திருக்கிறீர்கள். பேசாமல் அமெரிக்கவில் போய் செட்டில் ஆகி விடலாமே. அதற்கு நான் வேண்டும் என்றால் ஏற்பாட்டை செய்து தருகிறேன் என்று அன் நபர் கூறியுள்ளார்.
அதற்கு கோட்டபாய கொடுத்த விளக்கமே தனி ! அமெரிக்காவில் நான் சென்று குடியேறினால் , அங்கே உள்ள தமிழர்கள் என்ன சும்மா விடுவார்களா ? அன் நாட்டில் உள்ள ஏதாவது ஒரு ஆபிரிக்க இனத்தவருக்கு காசைக் கொடுத்தாவது என்னை கொலை செய்ய திட்டம் தீட்டுவார்கள். அமெரிக்கா எனக்கு பாதுகாப்பும் தரப்போவது இல்லை. என்று கோட்டபாய குமுறியுள்ளார். நான் அமெரிக்கா சென்றால் போதும், உடலே உலகத் தமிழர்கள் உண்டியலைக் குலுக்கி பெரும் தொகையான பணத்தை சேர்த்து என்னை போட்டு தள்ள ஆளை அனுப்புவார்கள். இது தேவையா ? இதனை விட நான் கொழும்பில் இருந்துவிடலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கோட்டபாய தெரிவித்த இக் கருத்தை , நேற்று முன் தினம் நடந்த களியாட்ட பார்டி ஒன்றில் குறித்த நபர் தனது நண்பர்களுக்கு பகிர்ந்து சிரித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/2605.html
Geen opmerkingen:
Een reactie posten