[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 05:44.25 AM GMT ]
கடந்த வாரம் நடைபெற்ற தேசிய நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய பாதுகாப்புச் செயலாளர், பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் வெளிநாட்டுக்கு செல்ல உதவும் வகையில் கடிதத்தை வழங்கியமை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், விசாரணை நடத்தி வரும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்னவுக்கு விடுமுறை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
பாதுகாப்புச் செயலாளர் செய்துள்ள இந்த காரியங்கள் சரியானதல்ல எனவும் அவர் வழங்கிய கடிதத்தில் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் வெளிநாடு செல்வது அத்தியவசியமானது என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் தமயந்திக்கு பஸ்நாயக்க 6 மாதங்களுக்கு விடுமுறை வழங்கியுள்ளதுடன் அவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார்.
இந்த விடயங்கள் காரணமாக கடந்த வாரம் கூடிய தேசிய நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் பெரும் பரப்பரப்பு நிலவியது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, பாதுகாப்புச் செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோபமாக பேசியுள்ளார்.
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி வெளிநாடு செல்ல உதவும் வகையில் கடிதம் ஒன்றை வழங்கியமை தொடர்பில் சந்திரிக்கா, பாதுகாப்புச் செயலாளரிடம் வினவியுள்ளார்.
அத்துடன் விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமை அலுவலகத்திற்கு சென்று கடிதம் ஒன்றை தயார் செய்வது பாதுகாப்புச் செயலாளரின் பணியல்ல எனவும் சந்திரிக்கா, பஸ்நாயக்கவிடம் கூறியுள்ளார்.
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரது சட்டத்தரணி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மூன்று பக்கங்களை கொண்ட கடிதத்தை முன்னாள் ஜனாதிபதி கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUmx6G.html
13க்கு அப்பாலான தீர்வு திட்டத்தை வழங்க முடியாது: ரவி கருணாநாயக்க
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 05:52.01 AM GMT ]
அவ்வாறானதொரு தீர்வு திட்டத்தை அமுல்படுத்துவதற்கு இதுவரை எவ்வித யோசனைகளும் எட்டப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கமைய காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13வது அரசியலமைப்பை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயத்தின் போது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி அதற்கும் அப்பால் சென்று அரசியல் அதிகார பகிர்வை வழங்குமாறு தெரிவித்திருந்தார்.
இது குறித்து அமைச்சர் கருணாநாயக்க தனியார் வானொலி ஒன்று வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை இந்திய பிரதமர் மோடி தெரிவித்திருந்தமை குறித்து இந்திய ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தற்போதைய எமது அரசாங்கம் ஒரு கால எல்லைக்குள் செயற்படும் அரசாங்கமாக இருக்கின்றது.
எமது 100 நாள் வேலைத்திட்டத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கே நாங்கள் முன்னுரிமை வழங்கியுள்ளோம். அத்துடன் வெளிப்படையாக தெரியும் சில விடயங்களை மேற்கொண்டுள்ளோம்.
பல இன,மத மொழிகள், கலாச்சாரங்களை கொண்ட இலங்கையை உருவாக்கும் பயணத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இதனை இந்திய பாராட்டும் என நான் எண்ணுகிறேன் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், 1987 ஆம் ஆண்டு அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கையின் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதுடன் மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்டன.
மாகாண சபைகளுக்கு 13வது திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அதிகாரங்கள் அனைத்தும் அமுல்படுத்தப்பட்டன.
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கூட்டமைப்பு இதனை வலியுறுத்தியிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUmx6H.html
Geen opmerkingen:
Een reactie posten