[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 11:48.59 AM GMT ]
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ரணில் விக்ரமசிங்கவும் மைத்திரிபால சிறிசேனவும் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்பாடு எனவும் அந்த கட்சி குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1977 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன கொண்டு வந்த தற்போது அமுலில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் இதுவரை 18 தடவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆட்சியாளர்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்தவே இது திருத்தங்கள் செய்யப்பட்டன. மக்களின் நலன்களுக்காக திருத்தங்கள் செய்யப்படவில்லை.
100 நாள் வேலைத்திட்டத்தில் அரசியலமைப்பில் திருத்தங்களை செய்ய நாடாளுமன்ற ஆலோசனை குழு நியமிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எனினும் இதுவரை அப்படியான சபை நியமிக்கப்படவில்லை.
அவ்வாறான சபை ஒன்று நியமிக்கப்படுமாயின் அதில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாட்டாளர்கள் இருக்க வேண்டும்.
இந்த நிலையில், வாக்குறுதியில் கூறிய சபையை ஏற்படுத்தாது ஒரு சிலரின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியலமைப்பு திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறி அரசாங்கம் தற்போது திருத்தம் பற்றி பேசுகிறது.
இந்த திருத்தமும் ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இருக்கின்றன. ஜனாதிபதி தனக்கு தேவையான அதிகாரங்களை வைத்து கொண்டு சிறிய மாற்றங்களை செய்துள்ளார்.
ஜனாதிபதி பதவிக்காலத்தை நான்கரை ஆண்டுகளாக குறைத்தது மாத்திரமே 19வது திருத்தச் சட்டத்தில் உள்ள நன்மையாகும் எனவும் துமிந்த நாகமுவ குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDScSUlp4I.html
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானங்கள் அடுத்த சில தினங்களில்: மகிந்த அமரவீர
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 01:13.54 PM GMT ]
கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு அழைத்து வருவது தொடர்பான பிரச்சினைக்கு குறித்த முக்கிய தீர்மானங்களில் தீர்வு கிடைக்கும்.
மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வலியுறுத்தும் அடுத்த கூட்டம் இரத்தினபுரியில் நடைபெறவுள்ளதுடன் அதற்கு முன்னர் இந்த தீர்மானங்கள் எடுக்கப்படும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாக பிளவுபடும் என்று ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பியின் ஆசைகள் ஈடேறாது.
சுதந்திரக் கட்சியின் தீர்மானங்களின் பின்னர், இந்த கட்சிகள் இரண்டும் உடனடியாக தேர்தலை நடத்துமாறும் கோரும் எனவும் முன்னாள் அமைச்சருமான மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: 3 கடற்படையினர் கைது
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 12:25.47 PM GMT ]
2006 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ரவிராஜ் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றதுடன், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பின் நலன் கருதி சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராஜா ஆஜராகியிருந்தார்.
இந்தக்கொலை சம்பவம் தொடர்பாக மூன்று கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று கடற்படையினரில் முதலாவது நபர் ஏற்கனவே பல குற்றங்களுடன் தொடர்புடையவர் என நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது சம்பந்தமான மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்�
http://www.tamilwin.com/show-RUmtyDScSUlp5D.html
Geen opmerkingen:
Een reactie posten