தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 18 maart 2015

நாட்டில் ஏற்பட்ட போராட்டம் காரணமாக வேற்று இனத்தவரின் ஆதிக்கம் எமது மண்ணில் அதிகரித்து விட்டது: பொன்.செல்வராசா

எந்த சந்தர்ப்பத்திலும் துறைமுக நகர திட்டத்தை நிறுத்தப் போவதில்லை: சீன துறைமுக பொறியியலாளர்கள் சங்கம்
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 10:46.34 AM GMT ]
கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பில் எப்போது வேண்டுமானாலும் இலங்கையுடன் கலந்துரையாடத் தயாராகவுள்ளதாகவும், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கொழும்பு துறைமுக நகர திட்டத்தை நிறுத்தப்போவதில்லை எனவும் சீன துறைமுக பொறியியலாளர்கள் சங்கத்தின் உப தலைவர் டந்க் டோலியன் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் ஊடகவியலாளர்கள் குழுவினர் இன்று டந்க் டோலியனை சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடிய சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுக நகர திட்டம் பற்றி அனைத்து அறிக்கைகளையும் இலங்கை அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுக்கவுள்ளதாக டந்க் டோலியன் கூறியுள்ளார்
கொழும்பு துறைமுகநகர திட்டத்திற்காக இலங்கை நிறுவனங்கள் சுற்றுசூழல் அறிக்கை பெற்றுக்கொள்வது அவர்களின் கடமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் எந்தவொரு அரசாங்கம் ஆட்சியில் செயற்பட்டாலும், அதன் கீழ் இணைந்து செயற்பட தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எந்தவொரு சூழ்நிலையிலும் கொழும்புத் துறைமுகத் திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடக்கும் மர்ம கொலைகள்: குழப்பத்தில் பொலிசார்
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 10:58.32 AM GMT ]
கொழும்பில் சில தினங்களாக பல பிரதேசங்களில் கை, கால்கள் இல்லாத சடலங்கள், கால் துண்டிக்கப்பட்ட சடலங்களின் பாகங்கள் மீட்கப்பட்டன.
எந்த காரணத்திற்காக இந்த கொலைகள் நடந்தன என்பது மர்மமாக இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அரசியல் ரீதியாக கடந்த அரசாங்க காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடந்தன. புதிய அரசாங்கம் பொறுபேற்றுள்ள நிலையில், ஏன் இவ்வாறான கொலைகள் நடக்கின்றது என்று மர்மமாக இருப்பதாக கூறப்படுகிறது.
உடல் பாகம் இல்லாத சடலம் ஒன்று மாதிவல தியவன்னா ஓயாவில் காணப்பட்ட நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலத்தில் ஒரு கை இருக்கவில்லை. இதற்கு முன்னர் தெமட்டகொடை பிரதேசத்தில் ஆறு ஒன்றில் இருந்து இரண்டு மனித கால்கள் மீட்கப்பட்டதுடன் வெலிக்கடை நாவல ஆற்றில் ஒரு மனித கை மீட்கப்பட்டது.
அத்துடன் தெமட்டகொட பிரதேசத்தில் எரிந்து போன சடலமும் மீட்கப்பட்டது. எவ்வாறாயினும் இது சம்பந்தமாக விசேட விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எக்னேலியகொட தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 11:43.08 AM GMT ]
ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலியகொட காணாமல் போனமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எக்னேலியகொட காணாமல் போனமை தொடர்பாக விசாரணை நடத்தும் அதேநேரம் அவரது குடும்பத்தின் நலன்புரி உதவிகளை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்தளளது என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
எக்னேலியகொடவின் இரண்டு மகன்களின் கல்வியை தொடர வருமானம் இருக்க வேண்டும் என்பதால், மாதம் கொடுப்பனவு ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனவும் ஊடகத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட போராட்டம் காரணமாக வேற்று இனத்தவரின் ஆதிக்கம் எமது மண்ணில் அதிகரித்து விட்டது: பொன்.செல்வராசா
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 11:25.50 AM GMT ]
இந்த நாட்டில் ஏற்பட்ட போராட்டத்தின் காரணமாக வேற்று இனத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து எல்லைக்கிராமங்களில் உள்ள தமிழ்மக்களின் பூர்வீக நிலங்கள் அவர்களின் கைகளில் இருந்து பறிபோன வரலாறுகள் இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
நேற்று மட்.பட்டிருப்பு குறுமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி வித்தியாலய அதிபர் க.சத்தியமோகன் தலைமையில் குறுமண்வெளி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் விசேட அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா, விசேட அதிதிகளாக பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.ந.புள்ளைநாயகம், சிறப்பதிதிகளாக கல்முனை தமிழ்பிரதேச பிரதேச செயலாளர் க.லவநாதன், உதவித்திட்ட பணிப்பாளர் பே.இராஜகுலேந்திரன் மற்றும் கௌரவ, அழைப்பு அதிதிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இங்கு நடைபெற்ற கொடூர யுத்தத்தின் காரணமாக தமிழர்கள் தங்களுடைய சில கிராமங்களை தாரைவார்த்து கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது, குறிப்பாக எல்லைக்கிராமங்களான 25 ஆம் கிராமம் முற்றிலுமாக தமிழர்கள் வாழ்ந்த பிரதேசம் ஆனால் இன்று அந்த இடம் முழுமையாக சிங்களவர் வாழும் இடமாக மாற்றம் பெற்று காணப்படுகின்றது.
யுத்தகாலத்தின் போது இடம்பெயர்ந்து எழுவான்கரையில் தங்களது இருப்பிடங்களை அமைத்து தங்களது பிள்ளைகளை இங்குள்ள பாடசாலைகளில் சேர்த்து விட்டு மீண்டும் அங்கு செல்வதற்கு முடியாத நிலையிலே இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் உரியவர்கள் இங்கு சென்று தங்களது இடத்தினை உறுதிப்படுத்தி இங்கு வாழும் வரை இவ்வாரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து நடந்து கொணடுதான் இருக்கும்.
இதன்காரணமாக எமது எல்லைக்கிராமங்கள் தங்கள் வசமிருந்து பறிபோகும் நிலையை தடுத்து நிறுத்த முடியாமல் போகும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. குறுமண்வெளி மக்கள் வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட 16ஆம் கிராமம், பூச்சுக்கூடு போன்ற எல்லைக்கிராமங்களில் தங்களது ஜீவனோபாயத்தினை மேற்கொண்டு வருவதன் காரணமாக அந்த இடங்களை இன்றும் காப்பாற்றி வருகின்றார்கள்.
பாடசாலைகளை தரமுயர்த்துவதென்பது மிகவும் இலகுவான காரியம், ஆனால் தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளில் சிறந்த கற்றல் செயற்பாட்டை மேற்கொள்ள முடியுமா என்பதனை பரிசீலிக்கவேண்டும்.
இன்று படுவான்கரையில் உள்ள இரண்டு பாடசாலைகளை வன் ஏ.வி பாடசாலையாக தரமுயர்த்த வேண்டும் என எண்ணியிருக்கின்றோம் அது தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பரிசீலித்து அதனை செய்து விஞ்ஞான கல்வியின் முக்கியத்துவத்தினை எமது எதிர்கால சந்ததியினருக்கு இட்டுச்செல்ல வழிவகைகள் செய்ய வேண்டியது எமது கடமையாகும்.
பிரித்தானியர் இந்த நாட்டை ஆண்ட காலத்தில் தமிழர்கள் தான் அதி உச்சமான பதவிகளை வகித்தார்கள் அன்று கொடிகட்டிப்பறந்தவர்கள் தமிழர்கள் அந்த நிலை மீண்டும் வரவேண்டும் அதற்காக நாம் கற்றல் நடவடிக்கையில் தொடர்ந்து அதி உச்ச நிலையை அடைய முயற்சிக்கவேண்டும் எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyDScSUlp4F.html


Geen opmerkingen:

Een reactie posten