தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 18 maart 2015

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை குறித்து மீளாய்வு: பாராளுமன்றில் மங்கள

உரையாற்ற நேரம் ஒதுக்கப்படுவதில்லை: முன்னாள் பிரதமர் முறைப்பாடு
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 01:31.00 PM GMT ]
நாடாளுமன்ற விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்கு எதிர்க்கட்சி தனக்கு நேரத்தை ஒதுக்குவதில்லை என முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன இன்று நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர், முன்னாள் பிரதமர் உரையாற்ற 10 நிமிடங்கள் வழங்கப்படும் என எதிர்க்கட்சியின் கொறடாவான ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, அரசாங்கத்தின் நேரத்தில் 5 நிமிடத்தை முன்னாள் பிரதமருக்கு வழங்கினார்.
ஐக்கிய நாடுகளின் சட்டமூலத்தின் கீழ் உத்தரவுகள் தொடர்பில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது ஆசனத்தில் இருந்து எழுந்த முன்னாள் பிரதமர், இன்றைய விவாதத்திலும் தனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.
உரையாற்ற நேரம் ஒதுக்கவில்லை என்றால், தான் சபையில் இருப்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் கூறினார்.


புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை குறித்து மீளாய்வு: பாராளுமன்றில் மங்கள
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 02:16.26 PM GMT ]
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை நீக்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் தொடர்பில் பாராளுமன்றில் இன்று விசேட அறிக்கையொன்றை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்து உரையாற்றினார்.
அவர் தனது உரையில்,
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைய முற்படுவதாக பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு, பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபடுத்தி அந்த அமைப்புக்கள் மீது முன்னைய அரசாங்கம் தடை விதித்தது.
ஆனால் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நேரடி தொடர்புகளைப் பேணியது தொடர்பில் எந்தவிதமான உறுதியான சான்றுகளும் முன்வைக்கப்படவில்லை.
இதேவேளை இந்தத் தடைப் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள சில தமிழர்கள் ஏற்கனவே இறந்துவிட்டவர்களாகவும் இருக்கின்றனர்.
நாட்டில் வாழும் அனைத்து இனங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் முயற்சியில் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதுடன், அதற்கான முதல் நடவடிக்கையாக புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்ய தீர்மானித்துள்ளார்.
புலம்பெயர் நாடுகளில் வாழும் சிங்களவர்களோ, தமிழர்களோ அல்லது முஸ்லிம்களாகவோ இருந்தாலும், அவர்கள் நல்லிணக்க முயற்சிக்கு மிகவும் முக்கியமான பங்களிப்பை ஆற்றக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
அத்துடன், இலங்கையை ஒரு தேசமாக முன்நோக்கி நகர்த்துவதற்கு புலம்பெயர் சமூகங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இதற்கு பல்லின,கலாசார, மொழி, மதங்களைக் கொண்ட ஜனநாயகக் கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது கட்டளைச் சட்டத்திற்கமைய 2012 ஆம் ஆண்டு ஐ.நா பாதுகாப்புச் சபையின் 1373 ஆவது தீர்மானத்தை முன்னிறுத்தி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்ததுடன், புலம்பெயர் நாடுகளில் வாழும் 424 தனிநபர்கள் மீதும் தடை விதித்தது.
இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலை் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDScSUlp5J.html

Geen opmerkingen:

Een reactie posten