தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 maart 2015

அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவு: சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: 200 பேர் கைது

ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முயற்சி
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 06:14.39 AM GMT ]
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
கொழும்பு ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் கடந்த பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட திறைசேரி பிணைப்பத்திர ஏல விற்பனை தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாரியளவில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிணைப்பத்திர விற்பனை தொடர்பிலான மோசடிகளுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டுமென கோரியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபாலவின் அரசாங்கத்தில் அங்கம் வகித்து வரும் முக்கிய அமைச்சர் ஒருவரை பிரதமராக நியமிக்க சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw3J.html

நிலுவை ஓய்வூதியக் கொடுப்பனவை பெற்றுக்கொண்ட பொன்சேகா!
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 07:25.53 AM GMT ]
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நிலுவை ஓய்வூதியக் கொடுப்பனவை பெற்றுக் கொண்டுள்ளார்.
ஆறு ஆண்டுகளும் ஒன்பது மாதங்களுக்கான நிலுவை ஓய்வூதியப் பணத்தை மொத்தமாக 38 லட்ச ரூபாவாகப் பெற்றுக்கொண்டுள்ளார்.
2009ம் ஆண்டு முதல் ஓய்வூதியக் கொடுப்பனவு கணக்கிடப்பட்டுள்ளது. மாதாந்தம் பொன்சேகாவிற்கு 62000 ரூபா ஓய்வூதியமாக கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவு: சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: 200 பேர் கைது
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 06:48.28 AM GMT ]
அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாக செயற்படுகின்றது என தெரிவித்து சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்த 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்முற்றுகை போராட்டம் இன்று இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றது எனவும்,
யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை மேற்கொண்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும் கால வரையறை நீடிக்கப்பட்டமைக்கு அமெரிக்காதான் முற்றுமுழுதாக காரணம் எனவும் வலியுறுத்தியே இம்முற்றுகை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மேலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, மற்றும் மே 17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புக்களே இம்முற்றுகை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw4C.html

Geen opmerkingen:

Een reactie posten