ராஜபக்சவிற்கு ஐந்து வருடம் தண்ணீர்காட்டியது எப்படி?: சரத் பொன்சேகாவின் மருமகன் !
[ Mar 13, 2015 03:04:45 PM | வாசித்தோர் : 1200 ]
Q :உங்களைப் பற்றிச் சுருக்கமாகக் கூறமுடியுமா ?
A :எனது பெயர் தனுன திலகரட்னே, றோயல் கல்லூரியில் ஆரம்ப, இடைநிலைக் கல்வியின் பின் அமெரிக்காவிற்கு உயர்கல்விக்காகச் சென்றேன்.ஜ.ரி துறையில் பட்டம் பெற்ற பின்பு ஆலோசகராக ஜந்து வருடங்கள் பணியாற்றினேன்.பின்பு இலங்கை திரும்பி லங்கா அட்வேன்சர் றேடிங் கொம்பனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தேன்.
Q :எவ்வாறு சரத்பொன்சேகா குடும்பத்துடன் அறிமுகமானீர்கள் ?
A: எனது தந்தை இராணுவத்தில் பணிபுரிந்தவர், பிரிகேடியராக ஓய்வுபெற்றார்.நாங்கள் இராணுவச்சமூகத்துடனே தான் வளர்ந்தோம்.ஜெனரல் சரத்பொன்சேகாவை எனக்கு பன்னிரண்டு வயதிலிருந்தே தெரியும்.
Q: அவரது மகளை எப்போது திருமணம் செய்தீர்கள் ?
A: 2007 இல் எங்கள் திருமணம் நடந்தது.
Q:உங்கள் மீது ஆயுத வியாபாரத்தில் மோசடி செய்ததாகவும் அதற்கு உங்கள் மாமனார் உடந்தையாக இருந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டதே ?
A: ஆம், கடுமையான குற்றச்சாட்டு என்மீது வைக்கப்பட்டது. இக்குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நேரம்பற்றி நான் விளக்கமாகச்சொல்லலாமா ? அரசிற்கும் எங்களுக்குமான உறவு முறுகலடைந்தபோது இராணுவத்திற்கான தளபாடங்கள், ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய அரசு தனி நிறுவனம் ஒன்றை நிறுவ முடிவெடுத்தது. சட்டபூர்வமாக ஆயுதக்கொள்வனவிற்காக லங்கா லொஜிஸ்ரிக் என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆயுதக்கொள்வனவிற்கான அந்நேர நடைமுறையில் துல்லியமான ஆவணப்படுத்தல் தேவையிருந்தது. ஆயுதக்கொள்வனவிற்கான உத்தரவிலிருந்து அது வழங்கப்படும் வரை இந்த நடைமுறை பேணப்படவேண்டும். சட்டபூர்வமற்ற முறையில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்தல், இறக்குமதிசெய்தல் என்பனவற்றிற்கு இடமில்லை. ஓர் ஆயுதக்கொள்வனவில் நானோ என் நிறுவனமோ ஈடுபட்டிருந்தால் எனது பெயர் அல்லது நிறுவனத்தின் பெயர் ஆவணங்களில் பதிவாகியிருக்கவேண்டும். இந்தத் தகவல்கள் அப்போது பாரளமன்றத்தில் கூட வெளியிடப்பட்டவை.
Q:ஜந்து வருடகாலம் தலைமறைவாக இருந்திருக்கிறீர்கள். பிரபாகரனின் பதுங்குகுழி இருப்பிடத்தையே கண்டுபிடிக்க முடிந்த பாதுகாப்புப்படையினரால் உங்களை தேடிப்பிடிக்கமுடியாமல் போயிற்றா ?
A:இது பற்றி நான் நிறையச்சொல்ல இருக்கிறது. சில குழுக்கள் என்னைப் பாதுகாத்தன. எங்கள் இராணுவப் பின்ணணியால் சில தந்திரோபாயங்களை எங்களால் கடைபிடிக்க முடிந்தது.
ஒட்டுமொத்தத்தில் சரத் பென்சேகாவுக்கு நெருக்கமான ராணுவத்தினர் சிலடே தனுனவை இதுவரை காலமும் காப்பாற்றி மறைத்து வைத்திருந்துள்ளார்கள். மைத்திரி ஆட்சிக்கு வந்த உடனே சரத் பொன்சேகாவின் மருமகன் தற்போது வெளியே வந்துள்ளார். இப்படி தான் 5 வருடமாக மகிந்தருக்கு தண்ணி காட்டியுள்ளார் !
லண்டன் தமிழர் கொலை: உண்மையில் நடந்தது என்ன ? (2ம் இணைப்பு)
[ Mar 13, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 27900 ]
48 வயதுடைய அருணாச்சலம் அருனோதயன் என்னும் இலங்கை தமிழர் , பிரித்தானியாவின் கொவன்ரி பகுதியில் வைத்து கடந்த 4ம் திகதிகொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கனவே நாம் அதிர்வு இணையத்தில் செய்திகளை வெளியிட்டு இருந்தோம். அங்கே நடந்தது என்ன என்பது தொடர்பாக தகவல் அறியும் , சட்டத்தினூடாக நாம் பொலிசாரை வினவியபோது கிடைக்கப்பெற்ற தகவல். மற்றும் அவரது உறவினர் தந்த தகவல்களை இங்கே வெளியிடுகிறோம்.
48 வயதுடைய அருணாச்சலம் அருனோதயன் தனது மனைவியோடு தங்கியிருந்த வீட்டிற்கு , அவரது நண்பர் ஒருவர் வந்துள்ளார். அவரோடு 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் கூடவே வந்துள்ளார். தாம் காதலிப்பதாகவும் , அதனால் குறித்த பெண் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டதாகவும் நண்பர் கூறியுள்ளார். அருனோதயன் வீட்டில் தங்கலாமா என்று கேட்டுள்ளார். அதற்கு அருனோதயன் ஒத்துக்கொள்ளவில்லை. குறித்த பெண்ணை அங்கே விட்டுவிட்டு, தாம் வேறு வீடு ஒன்று பார்த்துவிட்டு வருவதாக கூறி அந்த நண்பரும் அவரது 2 நண்பர்களுமான மூவரும் வெளியே சென்றுள்ளார்கள். இதேவேளை ஓடி வந்த இளம் பெண்ணிடம் அருனோதயன் ஏன் இவ்வாறு அப்பா அம்மாவை ஏமாற்றி விட்டு வீட்டை விட்டு ஓடி வந்தீர்கள் ? இது நியாயமா ? என்று கேட்டுள்ளார்.
அப்பா அம்மாவோடு பேசி , அவர்களை இணங்கச் செய்து குறித்த பையனக் கல்யாணம் செய்யலாம் தானே. இதுவரை காலமும் உங்களை வளர்த்த அப்பா அம்மாவை ஏன் ஏமாற்றுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். பின்னர் அவர் தூங்கச் சென்றுவிட்டார். இன் நிலையில் வீடு திரும்பிய தனது காதலன் மற்றும் அவரது 2 நண்பர்களிடம் , குறித்த இந்தப் பெண் ஓடிச் சென்று ,இவரே எங்களை காட்டிக்கொடுத்துவிடுவார் போல உள்ளதே என்று கோள்மூட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலன் மற்றும் அவனது 2 நண்பர்களும் , தூக்கத்தில் இருந்த அருனோதயனை பலமாக தாக்கியுள்ளார்கள். இதனால் அவர் கட்டில் இருந்து கீழே விழுந்து தலை அடிபட்டுள்ளது. அவரது மனைவி ஓடி வந்து , ஒன்றாக சாப்பிட்டீர்கள் பேசிப் பழகினீர்கள் , இப்ப வயசு வித்தியாசம் பார்காமல் அடிக்கிறீர்களே என்று கதறியுள்ளார்.
காதலனும் அவன் சகாக்களும் பின்னர் வீட்டில் இருந்து ஓடிவிட்டார்கள். தனக்கு தலை சுற்றுவதாக கூறிய அருனோதயன் தான் ,தூங்கப்போவதாகவும் தூங்கினால் சரியாகிவிடும் என்றும் மனைவியிடம் கூறியுள்ளார். பின்னர் எழுந்து நடக்க முற்பட்டவேளையும் மீண்டும் நிலத்தில் விழுந்துள்ளார். பின்னர் அவர் தன்னை எழுப்பவேண்டாம் என்று சொல்லி தூங்கிவிட்டார். சில மணி நேரம் கழித்து அவர் எழுந்திருக்கவில்லை என்று , அவரது மனைவி சென்று பார்த்தவேளை அவர் மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டு , உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். உடனடியாக அம்பூலன்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளார்கள் இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி , அவர் பரிதாபமாக இறந்துபோனார்.
இந்த அடி , தடி கலாச்சாரம் தமிழர்கள் மத்தில் எப்போது குறையும் ? வெளிநாட்டிற்கு வந்து குடியேறிய பின்னர்கூட காட்டுமிராண்டிகள் போல சிலர் இருப்பது ஏன் ? என்று தெரியவில்லை. காதலித்து தனது காதலியோடு வாழாமல் சிறையில் அடைபட்டுள்ளார்கள். இதில் வீட்டை விட்டு ஓடிவந்த காதலியையும் பொலிசார் கைதுசெய்து விசாரித்துள்ளார்கள். அருனோதயனை தாக்கிவிட்டு இவர்கள் , அங்கிருந்து ஓடிச் சென்றவேளை , வெளியே வீதியில் உள்ள CCTV கமராவில் இந்த 4 பேரது முகங்களும் பதிவாகியுள்ளது. பிரித்தானியப் பொலிசாரை ஏமாற்றுவது என்பது எவ்வளவு கஷ்டமான விடையம் என்று எமக்கு முதலில் புரியவேண்டும். எமது இளைஞர்கள் இவ்வாறு நடந்துகொள்ள அவர்களை வளர்க்கும் பெற்றோரும் ஒரு காரணமா தெரியவில்லை.
அதிர்வுக்காக
கண்ணன்.
http://www.athirvu.com/newsdetail/2563.html
Geen opmerkingen:
Een reactie posten