[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 06:03.55 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994 – 2005 வரை ஜனாதிபதியாக செயற்பட்டவர்.
இவர் டுபாயில் நடைபெற்று வரும் கல்வி மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பிரித்தானிய ஊடகத்திற்கு அளித்துள்ள விசேட செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா,
தமது நாடு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சர்வதேச விசாரணை நடத்துவதை இலங்கை மக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் அவமானமாக கருதுவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் சர்வதேச விசாரணையை முழு நாடும் எதிர்ப்பதாகவும் உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடுவதை அவமானமாக கருதுவதாகவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
பி.பி.சி செய்தி சேவை போர்க்குற்ற ஆதாரங்கள் தொடர்பான காட்சிகளை நம்பவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ள கருத்து தொடர்பில் சந்திரிக்காவிடம் வினவிய போது,
அதற்கு பதிலளித்தவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறாக புரிந்துக் கொண்டுள்ளார் என்றும் ஆவணத் தயாரிப்பாளர்கள் ஆதாரத்தை காண்பிக்கும் போது விசாரணையாளர்களிடம் ஆவணங்கள் கையளிக்கப்பட வேண்டும்.
ஆவணங்கள் முன்வைக்கப்பட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை பார்வையிட முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUmx7A.html
ஒரு புறம் கைகொடுத்து, மறுபுறம் முதுகில் குத்துகிறது இலங்கை கடற்படை: கருணாநிதி
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 06:26.13 AM GMT ]
அவர் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணம் வரையிலும் சென்று ஈழத்தமிழர்களை சந்தித்து, அவர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை கையளித்து, அவர்களின் சமவுரிமை குறித்து இலங்கை பாராளுமன்றத்தில் இந்திய பிரதமர் உரையாடியது குறித்தும் நம்முள் ஏற்பட்டுள்ள மனமகிழ்ச்சி நீர்குமிழி போன்றது என நிரூபிக்கும் வண்ணம் இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை கடற்படையினர் துப்பாக்கியினால் சுட்டு விரட்டியுள்ளதுடன், இதன் போது மீனவர்கள் இருவர் காயமடைந்துள்ளமை மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு சென்ற நாளிலேயே தமிழக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது 5 ரோந்து படகுகள் மூலம் 30ற்கும் மேற்பட்ட கடற்படையினர் ஆங்கு வந்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த மீனவர்கள் கடற்படையினரை கண்டதும் செல்ல முற்படுகையில் தமிழக மீனவர்களின் படகு உரிமையாளர் மற்றும் 6 மீனவர்களை கயிற்றால் கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டதுடன், மீனவர்களின் வலைகளை அறுத்து, மீன்பிடி சாதனங்களையும் கடலில் எறிந்துள்ளனர்.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எவ்வளவு முற்பட்டாலும் இவ்வாறான வன்முறைகளினால் இரு நாடுகளுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தவே வழிவகுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவர்களின் இச்செயல் ஒரு புறம் கைகொடுத்து, மறுபுறம் முதுகில் குத்துவது போல் காணப்படுகின்றது எனும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே இலங்கை கடற்படையினருக்கு இலங்கை ஜனாதிபதி தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும் என இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUmx7D.html
படகுகளை மீட்க தமிழக மீனவர்கள் இலங்கை வருகை
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 07:14.27 AM GMT ]
இந்த குழு நேற்றைய தினம் இலங்கைக்கு வந்துள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதுக்கோட்டை, கோட்டைப்பட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய குறித்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீனவர்களின் வாழ்வாதாரமாக கருதப்படும் படகுகளை அவர்களிடம் மீள ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்தமையையடுத்து தமிழக மீகவர்களின் படகுகளை திருப்பியனுப்புமாறு உத்தரவிட்டார்.
இதன்படி கோட்டைபட்டினத்தை சேர்ந்த 15 விசை படகுகளில் 12 படகுகளும், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 9 விசைபடகுகளில் 7 படகுகளும், மேலும் இரு நாட்டு படகுகளும் ஒப்படைக்கப்படவுள்ளன.
இதேவேளை காரைக்கால் மீனவர்களின் படகுகளை மீட்பதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என அந்நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடற்படைக்கு எல்லை மீறும் மீனவர்களை சுடும் அதிகாரம் உண்டு: NDTVக்கு மீண்டும் கூறிய பிரதமர்
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 07:15.47 AM GMT ]
இந்தியாவின் NDTV ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் வெற்றியளித்துள்ளதாகவும் மோடி இலங்கை மக்களை வெற்றிகொண்டுள்ளதாகவும் மக்களுக்கும் மோடிக்கு பதிலளித்துள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சகல பகுதிகளிலும் உள்ள கடற்பரப்பில் அத்துமீறுவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் அதிகாரம் இலங்கை கடற்படையினருக்கு உள்ளதாகவும் அது ஒன்றும் புதிய விடயமல்ல என்றும் பிரதமர் ரணில் கூறியுள்ளார்.
அண்மையில் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இந்திய மீனவர்கள் எல்லைத் தாண்டலை தடுக்க வேண்டும் என கூறியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
இந்தியா வடக்கு பகுதியை மாத்திரம் கவனத்தில் கொள்ளாது முழு இலங்கையையும் கவனத்தில் கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தியாவின் ´தந்தி´ ஊடகத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய நேர்காணலில் இந்த கருத்தை தெரிவித்ததால் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் பாதிய எதிர்ப்பு கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUmx7J.html
Geen opmerkingen:
Een reactie posten