தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 maart 2015

சம்பூரில் 1052 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் மீளக்கையளிக்கப்படும்: அமைச்சர் சுவாமிநாதன்

துறைமுக நகரத்தின் சேதத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் எழுத்துமூல அனுமதி
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 04:13.12 PM GMT ]
தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரின் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தமக்கு அனுமதியளித்துள்ளதாக சீன நிறுவனமான சைனா கொம்யூனிகேசன் கொன்ஸ்ரக்சன் கொம்பனி லிமிடெட் (சிசிசிசி) தெரிவித்துள்ளது.
இந்த அனுமதி தொடர்பில் எழுத்துமூல அறிவித்தல் தமக்கு கிடைத்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரின் நிர்மாணப் பணிகள் அனைத்தும் கடந்த 6ஆம் திகதியன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதன்காரணமாக நகர நிர்மாணத்துக்காக மேற்கொள்ளப்பட்ட நீர்தடுப்பு நிர்மாணங்கள் பாதிக்கப்பட்டன.
எனினும் குறித்த நிர்மாணங்களின் நிலப்பகுதியை பாதுகாக்க முடியாமல் போனது.
எனவே பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி தருமாறு சீன நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியிருந்தது. இதனையடுத்து இலங்கை அரசாங்கம் குறித்த வேலைத்திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை துறைமுக நகரப்பணிகள் நிறுத்தப்பட்டமையால் நாள் ஒன்றுக்கு 380, 000 டொலர்கள் நேரடி நட்டம் ஏற்படுவதாகவும் நிறுவனம் முன்னதாக சுட்டிக்காட்டியிருந்தது.


சீகிரிய குன்றில் கிறுக்கிய தமிழ் யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 04:27.33 PM GMT ]
சீகிரிய குன்றின் சித்திரங்கள் மீது கிறுக்கிய யுவதிக்கு பொதுமன்னிப்பை வழங்குவது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதியமைச்சிடம் கேட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 14ஆம் திகதியன்று மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதி, சீகிரிய ஓவியங்கள் மீது கிறுக்கியிருந்தார்.
இந்தக் குற்றத்துக்காக குறித்த யுவதிக்கு இரண்டு ஆண்டுகள் கடுழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய அகழ்வாராச்சி பொருட்களை பாதுகாக்கும் அதேநேரம் அறியாமை காரணமாக உதயசிறி செய்த தவறை உணர வேண்டும் என்று ஏற்கனவே வெளியுறவுத்துறையின் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்திருந்தார்.
இதேவேளை தமது மகளின் அறியாமையை உணர்ந்து அவளை மன்னிக்குமாறு உதயசிறியின் 74 வயது தாயும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பூரில் 1052 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் மீளக்கையளிக்கப்படும்: அமைச்சர் சுவாமிநாதன்
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 04:21.15 PM GMT ]
திருகோணமலை சம்பூரில் 1052 ஏக்கர் காணி எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதியன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படும் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்த அறிவித்தலை விடுத்தார்.
சம்பூரில் பொதுமக்களை மீளக்குடியேற்றம் செய்வது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோவின் தலைமையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் சம்பூரில் முதலீட்டு வலயத்துக்காக ஒதுக்கப்பட்ட 814 ஏக்கர் காணி சொந்தக்காரர்களிடம் கையளிக்கப்பட்டு 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு மீள்க்குடியேற்றப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கான அனுமதியை அமைச்சரவையும் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் அதியுயர் பாதுகாப்பு வலயமாக கடற்படையினரால் பயன்படுத்தப்படும் 234 ஏக்கர் காணிக்கு பதிலாக வேறு காணி கடற்படையினருக்கு வழங்கப்பட்டு குறித்த காணி பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்
http://www.tamilwin.com/show-RUmtyDRUSUlrzA.html


Geen opmerkingen:

Een reactie posten