[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 04:55.50 PM GMT ]
பசில் ராஜபக்சவை அமெரிக்காவில் தேடிப்பார்த்ததாகவும் அவர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளதாகவும் அவர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த அரசாங்கம் கொள்ளையடிப்பதை நிறுத்துவதாகவும் அவ்வாறான செயல்களுக்கு இடமளிக்காத நல்லாட்சியொன்றை வழங்குவதற்கு முயற்சிப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
மோடியின் இலங்கை விஜயம், உள்ளூர் பிரச்சினையில் தலையீடாகும்: சீன ஆய்வாளர்
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 04:36.15 PM GMT ]
இது இலங்கை - சீன உறவு குறித்து சீனாவை சிந்திக்க வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் யாழ்ப்பாண விஜயத்தை பொறுத்த வரை, சீனாவின் அபிவிருத்தி திட்டங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை விடயத்தில் இந்தியாவின் கை ஓங்கியுள்ளமையை சுட்டிக்காட்டுவதாக ஷங்காய் நிறுவனத்தின் சர்வதேச கற்கை நெறியின் உதவி ஆராய்ச்சியாளர் லியு சொன்ங்யா தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையில் உடனடியான தீர்வுக்கு வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சீனாவின் நல்லெண்ணத்தை இலங்கை மதிக்க தவறினால், சர்வதேச சமூகத்தின் மதிப்பை பெறுவதில் கஷ்டம் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களின் மூலம் இந்தியா அண்டை நாடுகள் மத்தியில் அடக்கி ஆளும் முனைப்பை மேற்கொள்ளப் பார்க்கிறது என்றும் லியு சொன்ங்யா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRUSUlrzC.html
Geen opmerkingen:
Een reactie posten