தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 maart 2015

குடிநீரில் நஞ்சு கலந்தோரைக் கைது செய்யுமாறு கோரி ஏழாலையில் ஆர்ப்பாட்டம்



யாழில் இந்திய பிரதமரை நெருக்கிய இளைஞன்! பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சர்ச்சை
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 03:46.35 PM GMT ]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்த போது பாதுகாப்பு ஏற்பாட்டில் காணப்பட்ட குறைப்பாடு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் மோடியின் நிகழ்வுகள் இடம்பெற்றவேளையில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மோடியுடன் கைகுலுக்க முனைந்துள்ளார்.
எனினும் உடனடியாக அவர், இந்திய பிரதமரின் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த 14ஆம் திகதியன்று மாலை 4 மணியளவில் இந்திய பிரதமர் மோடி, இளவாலையில் பயனாளிகளுக்கு வீட்டு சான்றிதழ்களை வழங்கிய பின்னர் மேடைக்கு பின்புறமாக சென்ற போது, அங்கு பாதுகாப்புக்களை மீறி 20 வயதான இளைஞர் ஒருவர் மோடியுடன் கைகுலுக்க முனைந்துள்ளார். எனினும் அதனை மோடியின் பாதுகாப்பு தரப்பினர் தடுத்தனர்.
இதனையடுத்து பாதுகாப்புக்கு மத்தியில் எவ்வாறு அந்த இடத்துக்கு வந்தார் என்பது குறித்த விசாரித்த போது, அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கொன்சோலின் அதிகாரி உட்பட்ட பலரின் பெயர்களையும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவரை இலங்கை பொலிஸார் விடுதலை செய்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRUSUlryI.html



குடிநீரில் நஞ்சு கலந்தோரைக் கைது செய்யுமாறு கோரி ஏழாலையில் ஆர்ப்பாட்டம்
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 03:25.35 PM GMT ]
யாழ்.ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் மாணவர்கள் குடிக்க பயன்படுத்தும் தண்ணீர் தாங்கியில் நஞ்சு கலக்கப்பட்டமையினைக் கண்டித்தும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிய வலியுறுத்தியும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
யாழ்.சுன்னாகம் பகுதியில் காலை 10மணி தொடக்கம் சுமார் ஒன்றரை மணிநேரம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட பொலிஸ் படை அமைக்கப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டு, குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கின்றது.
குறித்த ஆர்ப்பாட்டம் ஏழாலை மக்களால் ஒழுங்கமைக்கப்பட்ட நிலையில் இதில் பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRUSUlryH.html


Geen opmerkingen:

Een reactie posten