தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 december 2014

TNAயின் உள்ளுராட்சி மன்றங்களுக்கு பசில் வலை விரிப்பு…

முழுக்க நனைந்த பின் றிசாட்டிற்கு முக்காடு எதற்கு?

ஜனாதிபதித் தேர்தலில் அரசை ஆதரிக்க முடிவெடுத்த அ.இ.ம.கா கிழக்கு மாகாண சபையில் தனித்து இயங்கப் போகுறதாம்.முடிவுகளை சுயாதீனமாக ஆராய்ந்து எடுக்கப் போகிறார்களாம்.அப்படியானால்,இவ்வளவு நாளும் சுயாதீனமாக எடுக்க வில்லையோ?என்ற வினா எழுகின்ற போதும் இம் முடிவு எதற்கு என்பதை சற்று யூகித்துக் கொள்ள முடியும். முழுமையாய் நனைந்த பின் முக்காடு எதற்கு?
தற்போதைய முஸ்லிம்களின் மனோ நிலைகள் தற்போதைய அரசிற்கு எதிராக உள்ளது யாவரும் அறிந்ததே!ஜனாதிபதித் தேர்தலில் அ.இ.ம.கா அரசிற்கு ஆதரவளித்தால் மக்கள் மனோ நிலை அ.இ.ம.கா இற்கு எதிராக மாறும் மாறாவிட்டாலும் மாற்றுப் படும் என்பதனை அ.இ.ம.கா நன்கே அறியும்.இதனை எதிர் கொள்ளும் வழி முறைகளையும் அ.இ.ம.கா மக்கள் செய்தாக வேண்டும்.கிழக்கு மாகாண சபையில் சுயாதீனமாக இயங்கப் போகிறோம் எனக் கூறினால் தாங்கள் அரசிற்கு முற்றாக ஆதவானவர்கள் அல்ல தற்போது அரசிற்கு ஆதரவளிப்பதே தகுந்த தீர்மானம் என்ற மனோ நிலை மக்களிடையே உருவாக்கப்பட்டு மக்களை தங்களோடு தோடர்ந்து இணைத்துப் பயணிக்க ஏதுவாக அமையும்.
அஸ்வர் எம்.பி யினது பாராளுமன்ற பதவியினை மாகாண சபை உறுப்பினர் அமீர் அலிக்கு வழங்கி அரசு அழகு பார்க்க எத்தனிப்பது அ.இ.ம.கா ஜனாதிபதியுடன் இணைவதற்கு எவ்வாறான ஒப்பந்தங்களை செய்திருக்கும் என்பதனை சற்று யூகித்துக் கொள்ளலாம்.
அ.இ.ம.கா தங்களுக்கு ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கை ஜனாதிபதிற்கு மிகைத்து இருந்ததால் அ.இ.ம.கா இனை தங்களோடு இணைத்துக் கொள்ள அதீத பிரயத்தனம் எடுக்காத போதும் தங்களை இவ் விடயத்தில் பெரிய ஒரு மதிப்புள்ள கட்சியாக வெளிக்காட்ட அ.இ.ம.கா அதீத பிரயத்தனங்களை செய்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியை ஆதரவளிக்க முடிவெடுத்தால் ஆதரிக்க வேண்டியது தான்.மக்களை திசை திருப்பும் முயற்சிகள் தற்போது எடுபடும் அளவு மக்கள் அரசியல் அறிவு குன்றியவர்களாக இல்லை.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் (சம்மந்துறை)
http://www.jvpnews.com/srilanka/88803.html

மைத்திரியின் 27 முக்கியஸ்தர்களுக்கு கோத்தாவின் கைவரிசை….

இந்த பணிப்புரையை செயற்படுத்தவென இலங்கை பொலிஸின் மிரிஹான ஒலிபரப்பு கோபுரத்தின் பிரிவு 3ஐ பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவில் பணியாற்றும் நபர்களுக்கு தங்களது கையடக்கத் தொலைபேசியை அங்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 3ம் பிரிவில் 8 மணிநேர வேலை அடிப்படையில் தொலைபேசி ஒட்டுக்கேட்டல் மற்றும் பதிவு செய்தல் இடம்பெறுகிறது.
முன்னர் புலனாய்வு பிரிவு சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீர, நிமார் சிறிபால, ரத்ணசிறி விக்ரமநாயக்க, தி.மு.ஜயரத்ன, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் தொலைபேசி அழைப்புக்களை ஒட்டுக் கேட்டு பதிவு செய்த போதும் இறுதி வரையில் பொது வேட்பாளர் யார் என கண்டிபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் பழைய முறைபடி கையில் எழுதியே பொது வேட்பாளர் தொடரபான தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளாக புலனாய்வு பிரிவு தற்போது கண்டிபிடித்துள்ளது. மேற்குறிப்பிட்ட நபர்களின் குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் செய்திகளை புலனாய்வு பிரிவு கள்ளத்தனமாக படித்த போதும் பொது வேட்பாளர்கள் குறித்து அவர்களால் அறிய முடியவில்லை. இந்த தகவலை அரச புலனாய்வு பிரிவு முன்னாள் பிரதானி சந்திர நிமார் வாகிஸ்ட ஜனாதிபதிக்கு அறிவித்த போது ஜனாதிபதி அவரை தாக்க முனைந்துள்ளார்.
இதனால் அரச புலனாய்வு பிரிவு பிரதானி கடந்த வாரம் தொடக்கம் பதவி விலகியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/88807.html

TNAயின் உள்ளுராட்சி மன்றங்களுக்கு பசில் வலை விரிப்பு…

யுத்த குற்றவாளி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில், இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது. இதன்படி புலனாய்பு பிரிவினரால், கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டோ அல்லது ஆசை காட்டியோ, அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்திக்க செய்கின்றனர்.
பின்னர் அவர்களுக்கான சலுகைகளை வழங்குவதாகவும், அல்லது அவர்களை கைது செய்து தண்டிக்கவிருப்பதாக அச்சுறுத்தியும் அரசாங்கத்தில் இணைய வலியுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அம்பாறை – திருகோவில் பிரதேச செயலகப்பிரிவைச் சேர்ந்த ஒருவர் அச்சுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/88810.html

Geen opmerkingen:

Een reactie posten