[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 05:29.27 PM GMT ]
ஐக்கிய பிக்குகள் முன்னணியின் தலைவர் மிட்டியாகொட குணரட்ன தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் தனிப்பட்ட ரீதியில் எவ்வித கோபமும் கிடையாது.
அவரது செயற்பாடுகளில் காணப்படும் பிழைகளை திருத்திக் கொள்ளுமாறு ஆலோனை வழங்கினோம். எனினும் ஆலோசனைகள் உரிய முறையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
சுயாதீனமான முறையில் நாட்டில் தேர்தல் நடத்தப்பட்டால் மாற்றத்தை கண்டறிந்து கொள்ள முடியும் என மிட்டியாகொட தேரர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZjo2.html
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தும்பளை மக்களை பா.உ சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டார்
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 05:51.07 PM GMT ]
நிலையில் பொதுநோக்கு மண்டபத்தில் தங்கியுள்ளனர்.
மக்களின் வாழ்விடங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிப்பதோடு, வெள்ளநீரோட்டம் மலசல கூடங்களையும் சேதப்படுத்தியுள்ளதால் தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன.
கடற்றொழிலை ஜீவாதாரமாக கொண்ட இம்மக்கள் சுனாமியாலும் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளற்ற மிகவும் வறுமையான நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். வெள்ள அனர்த்தம் மேலும் மக்களை பாதிப்படைய செய்துள்ளது.
இம்மக்களை இன்று நேரடியாக சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு சென்றதோடு அம்மக்களின் மின்சாரத் தேவைக்காக தும்பளை வட, கிழக்கு கடற்றொழிலாளர் சங்கத்திடம் 32000 காசோலை வழங்கினார். அத்தோடு வெள்ளப்பாதிப்பை கட்டுப்படுத்த தேவையான வடிகாலமைப்பினை செயற்படுத்த உரிய தரப்பினரோடு பேசி தீர்வினைப் பெற்றத்தருவதாக உறுதியளித்தார்.
இவருடன் வடமராட்சி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் இணைப்பாளர் திரு.லவன், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின வடமராட்சி இளைஞரணித்தலைவர் திரு.ப.சுரேஸ், கறுப்பு நட்சத்திரங்கள் விளையாட்டுக் கழகத்தலைவர் வைத்தியர் சிவகுமார் மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வடமராட்சி இளைஞரணி உப தலைவரும் கறுப்பு நட்சத்திரங்கள் விளையாட்டுக்கழகச் செயலாளருமான திரு.காண்டீபன், வடமராட்சிக் கிழக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அமைப்பாளர் க.சூரியகாந் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZjo4.html
சரத் பொன்சேகாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வேதனையுடன் பார்க்க நேரிட்டது!- மைத்திரிபால சிறிசேன
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 05:40.20 PM GMT ]
சரத் பொன்சேகா மீதான சித்திரவதைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற ரீதியில் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சரத் பொன்சேகாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக போராடக் கூடிய சக்தி இருக்கவில்லை.
எதிர்காலத்தில் சரத் பொன்சாகவை விடவும் மோசமான பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்நோக்க நேரிடும். எனினும் கோழையைப் போன்று வாழ்வதை விடவும் உண்மையை உறுதி செய்ய உயிரைத் தியாகம் செய்யவும் தயார்.
ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் நல்லாட்சியை ஏற்படுத்தல் ஆகியன தொடர்பிலேயே சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியிருந்ததாகவும் அதனை நான் ஏற்றுக்கொண்டேன்.
சரத் பொன்சேகாவிற்கு மறுக்கப்பட்டுள்ள சகல வரப்பிரசாதங்களும் மீளவும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சரத் பொன்சேகா உள்ளிட்டவர்கள் இன்று பங்கேற்றிருந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZjo3.html
Geen opmerkingen:
Een reactie posten