[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 11:10.03 PM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை முன்வைத்திருந்தது.
ஜனாதிபதி தேர்தலின் போது இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரியிருந்தது.
எனினும், இந்தக் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இந்தக் கோரிக்கையானது வாக்காளர் எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சதித் திட்டமாகும் என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.
பெரும் எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முகாம்களிலும், நண்பர்கள், உறவினர்களின் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இதேவேளை, புலம்பெயர் செயற்பாட்டாளர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையையும் அரசாங்கம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZjo5.html
புதிய ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதனால் நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்காது!– சரத் என் சில்வா
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 11:34.07 PM GMT ]
புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவதனால் நாடு தோல்வியடையக் கூடிய சாத்தியங்கள் எதுவும் கிடையாது.
அரசியல் அமைப்பில் அதற்கான சாத்தியங்கள் எதுவும் கிடையாது.
பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கு விஜயம் செய்யும் காலப்பகுதியில் புதிய ஜனாதிபதி நியமிக்கப்படுவதில் பிரச்சினைகள் கிடையாது.
நாட்டின் அரசியல் அமைப்பின் 31ம் சரத்தின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் ஒரு வெற்றியீட்டினால் அந்த நிமிடம் முதல் அவரே நாட்டின் ஜனாதிபதியாவார்.
அரசாங்கம், அமைச்சரவை, முப்படைகள், நிறைவேற்று அதிகாரம் போன்ற அனைத்திற்கும் தலைமை வகிப்பவராக திகழ்வார்.
பதவி வகித்து வரும் ஜனாதிபதிக்கு ஏதேனும் பதவிக் காலம் எஞ்சியிருந்தால் அது ரத்தாகும்.
பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் புதிய ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமையவே செயற்படும்.
எனவே பாப்பரசரின் இலங்கை விஜயமோ அல்லது வேறும் விசேட நிகழ்வுகளோ புதிய ஜனாதிபதி தெரிவினால் பாதிக்கப்படாது என சரத் என் சில்வா சிங்கள பத்திரிகையொன்றுக்கு விளக்கமளித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZjo7.html
துமிந்த திஸாநாயக்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு திடீர் இடமாற்ற உத்தரவு!
[ வியாழக்கிழமை, 04 டிசெம்பர் 2014, 12:11.07 AM GMT ]
ஆளும் கட்சியின் அமைச்சுப் பதவிகளை துறந்து எதிர்க்கட்சியுடன் அண்மையில் துமிந்த திஸாநாயக்க இணைந்து கொண்டிருந்தார்.
துமிந்தவின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 20 உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசியல் ரீதியான நோக்கங்களுக்காக இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தவர்கள், திடீரென தூரப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
துமிந்த திஸாநாயக்கவிற்கு பாதுகாப்பு அளித்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இடமாற்ற உத்தரவு பிறப்பிப்பது சட்டவிரோதமானது என்ற போதிலும், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துமிந்த திஸாநாயக்கவின் பாதுகாப்பு அதிகாரிகளாக கடமையாற்றியவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை மனித உரிமை மீறலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் இடமாற்றம் செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை வரையில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவிற்கு ஒரு பொலிஸ் உத்தியோகத்தரேனும் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCTYKZjpz.html
வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பயனற்றவர்கள்!- ஜே.வி.பி
[ வியாழக்கிழமை, 04 டிசெம்பர் 2014, 01:03.11 AM GMT ]
வெளிநாட்டு கண்காணிப்பாளர் இலங்கையில் வந்து சில நாட்கள் தங்கியிருந்து விட்டு போகும் போது அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து விட்டு சென்று விடுவர் என்று ஜே வி பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு இலங்கையை பற்றிய பூகோள மற்றும் அரசியல் அறிவு இருப்பதை எதிர்ப்பார்க்க முடியாது.
அத்துடன் ஒரு சிறியகுழு வந்து முழுநாட்டிலும் தேர்தல் கண்காணிப்பை மேற்கொள்வது என்பது சாத்தியமற்ற செயல் என்றும் அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே தேர்தல்கள் ஆணையாளர், ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய நாடுகள் மற்றும் ஆசியான் கண்காணிப்பாளர்களை தேர்தலுக்காக அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCTYKZjp1.html
Geen opmerkingen:
Een reactie posten