தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 4 december 2014

மகிந்தரின் மாளிகையில் உள்ள சமையல் அறையில் வேலைசெய்வது ராணுவத்தினரே !

நான் இந்த நாட்டின் தலைவரான பிறகு, மிகவும் பொறுப்புடன் கடமைகளை முன்னெடுப்பேன். அலரி மாளிகையின் சமையலறையில் உள்ள இராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாப்பேன். பாதுகாப்பு தரப்பிலுள்ள அனைவரதும் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அட அப்படி என்றால் என்ன அர்த்தம் என்று புரிகிறதா ? மகிந்தரின் மாளிகையில் கூட ராணுவத்தினர் தான் சமையல்காரர்களாக இருக்கிறார்கள் என்பதனை மைத்திரி இவ்வளவு நாசுக்காக மற்றும் நாகரீகமாகச் சொல்லியுள்ளார். அடிக்கடி பரபரப்பு தகவலை வெளியிடாமல், இப்படி சின்ன சின்னதாக இவர் சில தகவல்களை கசிய விட்டு வருகிறார். பலே கில்லாடி தான் !
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க ஜாதிக ஹெல உறுமய கட்சி தீர்மானித்துள்ளது அல்லவா. இது தொடர்பில் அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு, கொழும்பில் செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அலரி மாளிகையில் இருந்த தேர்தல் இணைப்பு அதிகாரிகள், அங்கிருந்து விலகி தற்போது எம்மோடு இணைந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்குள், இந்த நாட்டில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜாதிக ஹெல உறுமய என்பது, இந்த நாட்டுக்கு அன்பு செலுத்தும் கட்சியாகும். கடந்த காலங்களில், அக்கட்சி அதனை நிரூபித்துள்ளது' என்றார்.
இப்போது சிலர், பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். நான் இந்த நாட்டின் தலைவரான பிறகு, மிகவும் பொறுப்புடன் கடமைகளை முன்னெடுப்பேன். பாதுகாப்பு தரப்பிலுள்ள அனைவரதும் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். அலரி மாளிகையின் சமையலறையில் உள்ள இராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாப்பேன். என்று எல்லாம் சொல்லாவேண்டிய அனைத்தையும் மைத்திரி சொல்லி முடித்துவிட்டார் போங்கள் !
http://www.athirvu.com/newsdetail/1578.html

Geen opmerkingen:

Een reactie posten