தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 19 december 2014

மாட்டைப் பிடிக்கச் சென்ற இளைஞன் மாயம்: திருக்கோவிலில் சம்பவம்!

திருக்கோவில் பிரதேசத்தில் மாடு மேய்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் இருந்து காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.
திருக்கோவில் 2ஆம் பிரிவைச் சேர்ந்த 27 வயதுடைய காத்தமுத்து தசபுத்திரன் என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார்.
தாண்டியடி வட்டை பகுதிலில் வழமை போல சம்பவதினமான நேற்று நண்பகல் 12 மணியளவில் இருவர் அவர்களது மாடுகளை மேய்த்துள்ளனர்.
இதன்போது, மாடு ஒன்று காட்டுப் பகுதிக்குள் நுழைந்துள்ளது. அதன்போது அங்கிருந்த நபர் ஒருவரிடம் ஏனைய மாடுகளை மேய்கச் சொல்லிவிட்டு குறித்த இளைஞன் காட்டுப் பகுதிக்குள் சென்று மாட்டை பிடிப்பதற்கு பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
காட்டுக்குள் சென்ற மாடு திரும்பிவந்த போதும் மாட்டை பிடிக்கச் சென்றவர் மாலையாகியும் திரும்பிவரவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து மாட்டு உரிமையாளருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அந்த காட்டுப் பகுதியில் உறவினர்கள் குறித்த இளைஞனைத் தேடியுள்ளனர். எனினும் அவரைக் காணவில்லை.
இதனையடுத்து உறவினர்கள் இன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் இப் பகுதியில் தொடர்ந்து உறவினர்கள் தேடி வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKakp5.html

Geen opmerkingen:

Een reactie posten