தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 december 2014

மகிந்தவின் ஆட்சி பல தசாப்தங்களுக்கு பிறகு நாட்டில் ஏற்பட்ட கொடூர ஆட்சி: முன்னாள் ஜனாதிபதி!!



மகிந்த தலைமையிலான சுதந்திரக் கட்சி பயன்படுத்தப்பட்ட பழைய பொருள்: ரணில் விக்ரமசிங்க
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 06:55.34 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பயன்படுத்தப்பட்ட கைமாறிய பழைய பொருள் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொலன்நறுவையில் நேற்று நடைபெற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பயன்படுத்தப்பட்ட பழைய பொருளான மகிந்த ராஜபக்ஷவின் சுதந்திரக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா?. அசல் ஐக்கிய தேசியக் கட்சி எம்மிடம் உள்ளது. எமக்கு வாக்களியுங்கள்.
அசலான பண்டாரநாயக்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமாயின் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களியுங்கள்.
கைமாறிய பழைய பொருட்களுக்கு வாக்களிப்பதால் பயனில்லை. நாங்கள் மகிந்த ராஜபக்ஷவை போன்றவர்கள் அல்ல, மைத்திரிபாலவை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விட மாட்டோம்.
மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பார், பல கட்சி அரசியலை பாதுகாக்க நாங்களும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZlw5.html
மைத்திரி - ஞானசார வழக்கு சமாதானமாக நிறைவு - மகிந்தவை கைவிடும் நிலையில் பொதுபல சேனா
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 07:16.43 AM GMT ]
சட்டத்தரணி மைத்திரி குணரத்னவை அச்சுறுத்தியதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சமாதானத்தில் முடிவடைந்துள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை சமாதானத்துடன் நிறைவு செய்து கொள்ள விரும்புவதாக வழக்குத் தொடுநரான மைத்திரி குணரத்ன நீதிமன்றில் குறிப்பிட்டார்.
அதனை ஏற்றுக் கொள்ள தான் தயார் என ஞானசார தேரரும் அறிவித்துள்ளார்.
அதன்படி வழக்கை சமாதானமாக முடிவு செய்ய கோட்டை நீதவான் திலினி கமகே உத்தரவிட்டார்.
மகிந்தவை கைவிடும் நிலையில் பொதுபல சேனா
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி வழிக்காட்டலின் கீழ் இயங்கும் அமைப்பு என குற்றம் சுமத்தப்படும் பொதுபல சேனாவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக பொதுபல சேனா அமைப்பு சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் பகிரங்கமாக அறிவித்திருந்தது.
எனினும் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக தாம் எந்த இடத்திலும் கூறவில்லை எனவும் நாட்டுக்கு எதிரான சூழ்ச்சியை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்க போவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
பொதுபல சேனாவின் இந்த இரட்டை நிலைப்பாடு காரணமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேலும் ஸ்திரமற்ற நிலைமைக்கு உள்ளாகி இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZlw6.html
எதிரணிக்கு தாவ போகும் ஆளும் கட்சியின் காலி மாவட்ட எம்.பி!
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 07:18.12 AM GMT ]
காலி மாவட்டத்தை சேர்ந்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடுத்ததாக எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தாவ உள்ளதாக தெரியவருகிறது.
காலி மாவட்டத்தை சேர்ந்த முக்கியமான அரசியல் குடும்பத்தின் உறுப்பினரான இவர், 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக அரசாங்கம் இவருக்கு முக்கியமான பங்கு எதனையும் வழங்கவில்லை என தெரியவருகிறது.
எனினும் இந்த கட்சி தாவல் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை என பொது எதிர்க்கட்சிகளின் தகவல்கள் தெரிவித்தன.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZlw7.html

மகிந்தவின் ஆட்சி பல தசாப்தங்களுக்கு பிறகு நாட்டில் ஏற்பட்ட கொடூர ஆட்சி: முன்னாள் ஜனாதிபதி
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 07:35.56 AM GMT ]
மைத்திரிபால சிறிசேன என்பவர் ஜனநாயக தலைவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மைத்திரிபால சிறிசேன, எதிரான கொள்கைகளை கொண்டவர்களை வீதியில் கொலை செய்யாதவர்.
ஏனைய நிலைப்பாடுகளையும் கொள்கைகளையும் கேட்கக்கூடிய பொறுமை காக்கக் கூடிய தலைவர்.
இந்த போராட்டத்தில் பிரதான கட்சிகள் இணைந்துள்ளன. அதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அதிகளவில் உள்ளனர். மேலும் பலர் வரவுள்ளனர்.
மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் பயணத்தை இன்று தொடங்கியுள்ளோம். என்றும் இல்லாத வகையில் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இந்த பயணத்தில் இணைந்துள்ளன.
பல தசாப்தங்களுக்கு பிறகு நாட்டில் இப்படியான கொடூர, ஊழல், மோசடி நிறைந்த அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. நாங்கள் ஒன்பது வருடங்கள் பொறுத்தோம்.
பொறுத்தது போதும் என்று மக்கள் எண்ணி விட்டனர். மைத்திரிபால சிறிசேன என்பவர் ஊழல், மோசடிகளை செய்யும் நபர் கிடையாது.
விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் நபர். விமர்சிப்பவர்களை பட்டப்பகலில் நடுவீதியில் கொலை செய்ய மாட்டார்.
கொள்கையை மதிக்கும் தலைவர் எனவும் சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZlxy.html

Geen opmerkingen:

Een reactie posten