தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 juni 2014

EPDP மகேஸ்வரி களவில் கில்லாடி! எம்மை குறை செல்ல என்ன தகுதி கடுப்பான சீ.வீ.கே!

‘துஆ’ பிரார்த்தனைக்கு கல்முனையில் நீதிமன்றத் தடை சீறுகிறார் ஹரிஸ் எம்.பி!

இன்று கண்டியில் சர்ச்சைக்குரிய பொதுபல சேனா இயக்கம் மனவுறுதிப்பூஜையொன்றை நடத்த பொலிஸ்மா அதிபர் அனுமதி வழங்கும் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக எமது இஸ்லாமிய முறையிலான ‘துஆ’ பிரார்த்தனையை புரிவதற்கு தடை விதித்தமைக்கு அரச உயர் மட்டங்களின் அழுத்தமே காரணம் எனவும் நாட்டில் நீதி மரணித்து விட்டது எனவும் ஹரீஸ் மேலும் தெரிவித்தார் .
வாக்கு வங்கியை இலக்காகக் கொண்டதே இந்த இனவாத செயற்பாடு. இதற்காகவே பொதுபல சேனா இந்த செயற்பாட்டில் இறங்கியுள்ளது. – என்றார் அவர். இவ்விடயம் தொடர்பாக பத்திரிகையாளருக்கு விளக்கம் அளிக்கும் அவரது செய்தியாளர் மாநாடு அவரின் சாய்ந்தமருது இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்றது. அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியவை வருமாறு:- கடந்த 15 ஆம் திகதி நடந்தேறிய இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் நேரடியாக பொது பல சேனா இயக்கம் களத்தில் நின்றது.
ஊரடங்குச் சட்டம் முஸ்லிம் மக்களைக் கட்டுப்படுத்தவே பிறப்பிக்கப்பட்டது. ஏனையவர்களுக்கு அது விதிவிலக்காக இருந்தது. அந்த வேளை முஸ்லிம்களின் உயிர், பொருள் அத்தனையும் வெறியாட்டம் ஆடப்பட்டன. இதற்கு பின்னணியாக அரசாங்கத்தின் உயர் நிலையில் உள்ளவர்கள் காணப்படுகின்றனர். இதனை எதிர்கால வாக்கு வங்கியை இலக்கு வைத்த தாக்குதலாகவே காணமுடிகின்றது.
இத்தகைய துரதிஷ்டமான சம்பவங்கள் ஏனைய பிரதேச முஸ்லிம்களையும் குறி வைக்கப்படாத வகையில் எமது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டிய தேவையுள்ளது. முஸ்லிம்களின் வலிமையை வெளிப்படுத்த அம்பாறை மாவட்டம்தான் மிகப் பொருத்தமானது. அதன் அடிப்படையில்தான் கல்முனையில் இந்த ‘துஆ’ பிரார்தனை நடை பெறவிருந்தது.
உளவுப் பிரிவினரின் அறிக்கையின் பிரகாரம் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரினால் எமது பிரார்தனை நிகழ்வை தடை செய்யும் வகையில் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஜனாதிபதி வெளியிட்ட கருத்தினை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
முஸ்லிம்களுக்கு எதிராக எவர் அநியாயம் செய்தாலும் தட்டிக் கேட்போம். விடுதலைப் புலிகள் எம்மை தாக்கிய போது எமது தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவரது தலைமையில் பல எதிர்ப்பு போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளார் .
முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக சிவில் பாதுகாப்புக் குழுக்களையும், இந்திய படையுடன் இணைந்து சேவையாற்றும் முஸ்லிம் பாதுகாப்புக் குழுக்களையும் செயற்படுத்தினார். அதே போன்று இன்றைய தலைமைத்துவமும் – நாமும் – செயலில் இறங்கியுள்ளோம் தற்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்ச சூழலில் அரசின் நடவடிக்கைகளில் எமக்கு திருப்தியில்லை.


முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலிருந்து 5000 பொலிஸாரை பதவிக்கமர்த்தி முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதற்காக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். – என்றார் SLMC-Harish-MP
http://www.jvpnews.com/srilanka/74460.html

யாழ்.தும்பளை கடற்கரையில் ஆணிண் சடலம்


அதிகாலை வேளையில் தொழிலுக்குச் சென்றவர்கள் கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியிருப்பதாக தகவல் தெரிவித்தமையினையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் கூறினார்கள்.Jaffna-TuimpaliJaffna-Tuimpali-01Jaffna-Tuimpali-02
http://www.jvpnews.com/srilanka/74463.html

ரெக்ஷி கொலையில் EPDP கமல் உட்பட மூவருக்குத் தொடரும் சிறை…


இந்த வழக்கு விசாரணைக்காக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே மூவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.  EPDP-KamailEPDP-Kamail-01EPDP-Kamail-02
http://www.jvpnews.com/srilanka/74469.html

EPDP மகேஸ்வரி களவில் கில்லாடி! எம்மை குறை செல்ல என்ன தகுதி கடுப்பான சீ.வீ.கே

மாகாணசபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பேரவை தலைவர் ஆகியோரின் வாகனங்கள் கொள்வனவுக்கு சுமார் 50மில்லியன் ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், உறுப் பினர்களுக்கான வாகனங்கள் இரண்டரை வருடங்களுக்குப் பின்னரே வழங்கப்படும் என உள்ளுராட்சி அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளமையினையும் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று காலை மாகாண பேரவைச் செயலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்.மாநகரசபை முதல்வர் 65லட்சம் ரூபா செலவில் முன்னர் ஒரு வாகனத்தை வாங்கியிருந்தார். அந்த வாகனத்தை விபத்திற்குள்ளாக்கி அந்த விபத்து தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அந்த வாகனத்திற்கான காப்புறுதியையும் பெற்றுக் கொண்டு, மேலதிகமாக 13லட்சம் ரூபா கொடுத்து இப்போது 78லட்சம் ரூபாவுக்கு வாகனம் ஒன்றினை வாங்கியிருக்கின்றார்.
ஆனால் எமக்கு ஒதுக்கப்பட்ட 70லட்சம் ரூபாவில் 58லட்சம் ரூபாவுக்கான வாகனத்தை மட்டுமே வாங்கியிருக்கின்றோம். மிகுதி பணத்தை நாங்கள் மக்கள் நலத்திட்டங்களுக்காக செலவிட இருக்கின்றோம்.
எனவே உன்மையில் சுகபோகத்தை யார் அனுபவிக்கின்றார்கள் என்பதனை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். மேலும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு இரண்டரை வருடங்கள் பூர்த்தி செய்த பின்னரே வாகன வரி விலக்கு பத்திரம் அவர்களுக்கு வழங்கப்படும் என உள்ளுராட்சி அமைச்சு சுற்றறிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் மிக பொய்களை கூறி மக்களை திசை திருப்ப முனையும் யாழ்.மாநகரசபை முதல்வரின் நோக்கத்தை மக்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். மேலும் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைச்சர்கள் மற்றும் நான் உள்ளிட்டோர் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் இரவல் வாகனங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/74474.html

Geen opmerkingen:

Een reactie posten