முள்ளிவாய்க்கால் சுடரைத் தட்டிய சீ.வி.கேயின் செயலாளர் கிருஸ்ணமூர்த்திக்கு என்ன பதில்
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளிற்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான உறுப்பினர்கள் பேரவையின் உள்ளே செல்லாதவாறு தடுக்கப்பட்டனர். எனினும் பொலிஸார் மற்றும் சிவில் உடையினில் படையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்ததுடன் அவர்கள் பேரவை கட்டடம் அமைந்துள்ள வளாகத்தினுள் நிலைகொள்ளவும் வைக்கப்பட்டிருந்தனர்.
அன்றைய தினம் மாகாணசபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன், மேரி கமலா ஆகிய மூவரும் உள்ளே வர அனுமதிக்கப்பட்டிராத நிலையில் அவர்கள் பேரவைக்கு வெளியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர். எனினும் ஏற்றப்பட்ட சுடரேற்றினை பொலிஸார் காலால் தட்டி வீழ்த்தி அப்போது அவமதித்திருந்தது தெரிந்ததே.
எனினும் குறித்த சுடரினை தட்டிவீழ்த்த தற்போதைய பேரவைத் தலைவரது செயலாளரான கிருஸ்ணமூர்த்தியே சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டதாக தற்போது அம்பலமாகியுள்ளது. அத்துடன் பேரவை செயலாளரது அழைப்பின் பேரிலேயே அங்கு பொலிஸார் அனுப்பபட்டதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துமிருந்தார். அது தொடர்பினிலேயே விசாரணைகளை மேற்கொள்ள 26 உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கோரியிருந்தனர். எனினும் அவர்களது கோரிக்கை தொடர்பில் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
எனினும் அன்றைய தினம் பொலிஸார் மற்றும் படையினர் அழைக்கப்பட்டமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாதென இன்றை ஊடக சந்திப்பில் தகவல் தெரிவித்த பேரவைத்தலைவர் அத்துடன் அன்றைய தினம் உள்ளே அவர்கள் நின்றமை தொடர்பிலும் தன்னால் ஏதும் செய்யமுடியாதிருப்பதாகவும் தெரிவித்தார். அவரது பதிலில் திருப்தி அடையாத ஊடகவியலாளர்கள் நாளை சிலவேளை தங்களை உள்ளே விட பொலிஸார் மறுத்தால் என்ன செய்வீர்களென கேள்வி எழுப்பினர். அதற்கும் வெறும் மழுப்பலாகவே அவர் பதிலளித்தார். அத்துடன் தான் அன்று வீட்டிலேயே இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/74478.html
பொகவந்தலாவ சிறுமி மீது எஜமானியின் சித்திரவதை
இன்று நாட்டில் தொழிற்சங்கபலம் பரவலாக காணபட்டாலும் சிறுவர் உறிமைகள் சம்பந்தமான சட்டங்கள் பரவலாக காணபட்டாலும் சட்டங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் சிறுவர்களை தொழிலுக்கு தமது பெற்றோர்கள் அனுப்பிதான் வைக்கின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது குடும்ப சுமையால் தனது கல்வியை இடைநிறுத்தி விட்டு தொழிலுக்கு சென்ற 15 வயது உடைய தலவாக்கலை நந்தினியின் மரணம் இடம்பெற்று இரண்டு வாரங்கள் கடந்தும் மற்றுமொரு 16 வயது சிறுமி தொழிலுக்கு சென்று துன்புறுத்தபட்டு வெட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருக்கின்ற சம்பவம் தற்பொழுது அம்பலத்திற்கு வந்துள்ளது.பொகவந்தலாவ கிலானி தோட்டததைச் சேர்ந்த மனோகரன் கீர்த்திகா வயது 16. இவரின் பெற்றோர்கள் கீர்திகாவின் கல்வியை இடைநிறுத்தி விட்டு கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்திற்கு தொழிலுக்கு அனுப்பி ஒரு வடங்கள் கடந்துள்ளன.
கீர்த்திகாவின் பெற்றோர்கள் தோட்ட தொழிலாளி. இவர்களுக்கு ஒரே பெண் பிள்ளை கீர்த்திகா. இவளின் கல்வியை அநியாயமாக பெற்றோர்கள் இடைநிறுத்தியதற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.
பொகவந்தலாவ கிலானி தோட்டத்தைச் சேர்ந்த மனோகரன் கீர்த்திகா கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் வீடு ஒன்றில் பணிப் பெண்ணாக தொழில் புரிந்து வந்துள்ளார். தொழில் புரிந்து வந்த கீர்த்திகா கடந்த 15ம் திகதி வீட்டு எஜமானியால் துன்புறுத்த பட்டு வெட்டு காயங்களுடன் கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கீர்த்திகா துன்புறுத்தபட்டவேளை தனது அம்மாவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதி தபால் மூலம் அனுப்பி இருந்தாள். அக்கடிதத்தில் இவ்வாறு குறிப்பிபட்டிருந்தது,
“அம்மா, அப்பா உடனடியாக வரவும். இரண்டு நாள் கடந்தால் நான் இறந்து விடுவேன். மிகுதி விடயங்களை நேரில் சொல்கிறேன். எனது உயிர் அழிந்து போகிறது. என்னை பற்றி உடனடியாக பொலிசில் சொல்லி என்னை காப்பாற்றவும்.
என் முன்பல்லை உடைச்சாச்சி, என் முதுகு பக்கம் கத்தியால வெட்டியாச்சி உடனே வந்து என்னை காப்பாற்றுங்கள்” என கீர்த்திகா எழுதிய கடிதத்தில் குறிப்பிடபட்டிருந்தது.
அதன் பிறகு கீர்த்திகாவின் பெற்றோர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த வெள்ளவத்தை பொலிசார் வீட்டு எஜமானியை கைது செய்து கல்கிஸை நீதவானிடம் அஜர்படுத்தியபோது குறித்த எஜமானியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
நந்தினியின் மரணத்திறக்கு பிறகு இடம்பெற்ற கீர்த்திகாவின் சம்பவமும் எமது சமுகத்திற்கு மீண்டும் சொல்லும் ஒரு செய்தியாகும்.
http://www.jvpnews.com/srilanka/74481.html
புதிய ஜெட், போர் விமானங்கள், ரேடர், ஏவுகணை கொள்வனவில் இலங்கை தீவிரம்
12வது இலக்க ஜெட் ஸ்குவாட்ரனில் உள்ள மிக் 27 விமானங்கள் 2000ம் ஆண்டு ரஸ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டன. இவை நீண்டகாலம் போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவை என்பதால், இவற்றின் தரத்தை பரிசோதிக்கும் பணியை சிறிலங்கா விமானப்படை ஆரம்பித்துள்ளது.
இந்த விமானங்களை அடுத்த சில ஆண்டுகளுக்குள் கழித்து விட வேண்டும் என்பதால், புதிய ஜெட் போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான மதிப்பீடுகளை சிறிலங்கா விமானப்படை மேற்கொண்டு வருகிறது. தாம் போரிடும் விமானங்களின் பலத்தை இழக்க விரும்பவில்லை என்றும் அவற்றை மதிப்பிடும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும் சிறிலங்கா விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா விமானப்படையிடம் உள்ள தற்போதுள்ள ஜெட் போர் விமானங்கள் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தாக்குதல் பறப்புகளை மேற்கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, புதிய ஜெட் போர் விமானங்களுடன், ரேடர் வழிகாட்டல் ஏவுகணைத் தொகுதியை கொள்வனவு செய்வதிலும் சிறிலங்கா விமானப்படை அக்கறை கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.jvpnews.com/srilanka/74485.html
முதலமைச்சர் “CV” கல்வி அமைச்சர் குருகுலராஜாவை அழைத்ததால் கடுப்பான: டக்ளஸ்
அத்துடன் தன்னை விருந்தினராக அழைக்க அவர் விடுத்த வேண்டுகோளினையடுத்து அவசர அவசரமாக இரண்டாவது நாhளான அவர் தலைமையினில் இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
நெல்லியடி மத்திய கல்லூரியில் நேற்று தொழில்நுட்ப பீடத்துக்கான அடிக்கல்லை இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்துள்ளார். நேற்று முன்தினம் பாடசாலையின் அலங்கார வளைவினை வடக்கு முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் குருகுலராஜா ஆகியோர் திறந்து வைத்திருந்த நிலையில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்துள்ளார்.
அங்கு அவர் உரையாற்றுகையில் வடமாகாண மக்களுக்கு அரசிடமிருந்து எதனைப் பெற்றுக் கொடுக்க முடியுமே அவற்றை பெற்றுக் கொடுத்து வருகின்றோம் இது இணக்க அரசியல் ஊடாகவே சாத்தியமாகின்றது. எமது அரசு மக்களின் முன்னேற்றத்தையும், மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு எவ்விதமான பாரபட்சமுமின்றி உதவித்திட்டங்களை வழங்கி வருகின்றது எனவும் அவர் தெரிவிததுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/74488.html
Geen opmerkingen:
Een reactie posten