தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 juni 2014

“நீ புலி தானே” இரவுவில் வவுனியா பெண் அதிபர், ஆசிரியர்களை மிரட்டும் CID

செங்கலடி இரட்டைக் கொலையில் “ரகு தக்ஷனாவை” நீதிமன்றம் தவிர்த்த பின்னனி

செங்கலடி நகரில் பிரபல வர்த்தகர் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட நன்கு சந்தேக நபர்களில் மூன்று பாடசாலை மாணவர்கள் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி வி.சந்திரமணி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது கொல்லப்பட்டவர்களது மகள் தவிர்ந்த மூன்று சந்தேக நபர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்டவர்களது இளய மகள் ரகு தக்ஷனா அவரது பாடசாலை நண்பர்களான சிவநேசராசா அஜந், புவனேந்திரன் சுமன் குமாரசிங்கம் நிலக்சன் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரின் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
இச்சந்தேக நபர்கள் நேற்று மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது சிவநேசராசா அஜந் ஐம்பது இலட்சம் பெறுமதியான ஆதனம் மற்றும் 75 ஆயிரம் பெறுமதியான சரீர (அரச ஊழியர்கள் அல்லது ஓய்வூதியம் பெறுபவர்) பிணையிலும் விடுதலை செய்யப்பட்டார் இவர் சார்பாக சட்டத்தரணி பிரியந்தி வேல்முருகு ஆஜராகியிருந்தார்.
புவனேந்திரன் சுமன், குமாரசிங்கம் நிலக்சன் ஆகியோர் தலா பத்து இலட்சம் பெறுமதியான ஆதனம் மற்றும் 50 ஆயிரம் பொறுமதியான மூன்று சரீர (ஒரு அரச ஊழியர் உட்பட) பிணையிலும் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் சார்பாக சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத் ஆஜராகியிருந்தார்.
கொலை செய்யப்பட்ட சூழல் மற்றும் கொலைச் சந்தேக நபரும் சாட்சியான பொன்னுத்துரை சுந்தரமூர்த்தியும் ஒரே இடத்தில் வசிக்கும் காரணத்தினால் ரகு தக்ஷனாவின் பிணை மறுக்கப்பட்டுள்ளது.


பிணையில் விடுதலை செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் மூவரையும் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு மாதத்தில் ஒருமுறை நீதிமனறத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பாடசாலைக்கு செல்லவுள்ளதால் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 4 மணிக்கு பின்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.chenkalady-03
http://www.jvpnews.com/srilanka/71716.html

யாழில் அதிகரிக்கும் இராணுவ ரோந்து..

யாழ்ப்பாணத்தில் தற்போது இராணுவ மற்றும் பொலிசார் இணைந்து வீதி ரோந்துகளில் ஈடுபட்டுவருகின்றனர். கால் நடையாகவும் துவிச்சக்கரவண்டிகளிலும் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினரும் பொலிசாரும் ஈடுபட்டுவருகின்றனர்.
இத்தகைய இராணுவ ரோந்து நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.jvpnews.com/srilanka/71719.html

“நீ புலி தானே” இரவுவில் வவுனியா பெண் அதிபர், ஆசிரியர்களை மிரட்டும் CID

காலை வேளைகளில் பாடசாலைகளுக்கு செல்லும் இராணுவ புலனாய்வாளர்கள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் விவரங்களை தருமாறு கோருவதாகவும், இவர்களின் இந்த நடவடிக்கைக்கு சில அதிபர்களும் ஆசிரியர்களும் “கல்வி திணைக்களத்தின் அனுமதி இல்லாமல் விவரம் தர முடியாது எனவும், விவரம் தேவை என்றால் திணைக்கள பணிப்பாளரின் எழுத்து மூலமான அனுமதி கடிதத்தோடு வருமாறும்” எதிர்ப்பும் மறுப்பும் தெரிவித்து திருப்பி அனுப்பி விடுவதாகவும் தெரிய வருகின்றது.
தமது மிரட்டல்களுக்கு பணிய மறுக்கும் அதிபர்கள் ஆசிரியர்களுக்கு முன்னால் மூக்குடைபட்டு, போன காரியம் கைகூடாமல் அங்கிருந்து அவமானப்பட்டு திரும்பி விடும் இராணுவ புலனாய்வாளர்கள்,
இரவு வேளைகளில் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி தம்மை அறிமுகம் செய்து கொண்டு, ஆண் அதிபர்களை “ஏய் நீ விவரம் தர மாட்டன் எண்டு சொன்னது தானே. நீ யாருன்னு நமக்கு தெரியும். நீ புலி தானே” என்று மிரட்டுவதாகவும், அதற்கு அதிபர்கள் மறுத்து பேசினால் அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களினால் (அருவறுப்பான கடும் தீய சொற்களால்) திட்டி ஏசுவதாகவும்,
அதுவே பெண் அதிபர்கள் ஆசிரியர்கள் என்றால், வளைந்து நெளிந்து குழைந்து மசிந்து கெஞ்சி, பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் விவரங்களை தருமாறு கேட்பதாகவும் தெரிய வருகின்றது.
வவுனியா தெற்கு கல்வி வலயத்தை விடவும், வவுனியா வடக்கு கல்வி வலய பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்களுக்கே இத்தகைய தொலைபேசி அழைப்புகள் இரவு வேளைகளில் அதிகமாக ஏற்படுத்தப்படுவதையும், இராணுவ புலனாய்வாளர்களின் இந்த அநாகரிக செயலால் அதிபர்களும் ஆசிரியர்களும் பெரும் மன உளைச்சல்களுக்கும், மன அழுத்தங்களுக்கும் உள்ளாகியிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
இத்தகைய அதிபர்கள் ஆசிரியர்களுக்கு, தமது கைப்பேசி தொடர்பு எண்களை (Sim-card) அவ்வப்போது மாற்றிக்கொள்ளும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ள அதேவேளை, “பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலை குடிப்பதைப்போல”, எத்தகைய சத்தமும் சலனமும் இல்லாமல் ஒரு சில அதிபர்களும் ஆசிரியர்களும், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் தொடர்பிலான விவரங்களை, இராணுவ புலனாய்வாளர்களுக்கு வழங்கி, தமிழ்த்தேசியத்துக்கு விரோதமான ஆபத்தான நிகழ்ச்சி நிரலுக்கு துணை போவதையும் அவதானிக்க முடிகின்றது.
http://www.jvpnews.com/srilanka/71742.html

Geen opmerkingen:

Een reactie posten